55. விறல் மாரன்


ராகம்: மாண்டுதாளம்: ஆதி
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்துவெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம்வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்தமதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்தஅதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல்களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்தபெருமாளே.

Learn the Song


Raga Maand (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 D2 N3 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

This poem uses the Nayaki-nayaka Bhava to describe the pain of longing that the Nayika or the Jiva experiences when separated or estranged from her Lord, the Ishwara.

விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த (viRalmAran aindhu malarvALi sindha) : The brave Kamadeva shoots five arrows of love; மன்மதனான காமன் பிரம்ம தேவனின் மானசீக புதல்வன். காம தேவனின் வில் கரும்பால் ஆனது. வளைந்த கரும்பு வில்லின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையில் குறுக்காக வண்டுகள் நாண் மாதிரி வரிசையாகச் சேர்ந்திருக்கின்றன. காதுக்கு சுகமான ரீங்காரம் வண்டிடமிருந்து வருகிறது. அவன் வாகனம் கிளி; உரிய பருவம் வசந்த காலம். இந்தக் கரும்பு வில்லில் சுகந்தத்துக்கும் மென்மைக்கும் ஸெளந்தரியத்துக்கும் பெயர் பெற்ற தாமரை, அசோகம், முல்லை, மா, குவளை என்னும் ஐந்து மலர்களை அம்பாக தொடுத்து, சமஸ்த ஜீவப் பிரபஞ்சத்தையும் நம் பஞ்சேந்திரியங்களையும் காமத்தில் கட்டிப் போட்டு மன்மதன் ஆட்டிவைக்கிறான். விறல் = வெற்றி, வலிமை; மாரன் = மன்மதன்; வாளி = அம்பு;

வானில் இந்து மிக வெயில் காய (vAnil indhu miga veyil kAya ) : The moon in the sky is singeing my body; ஆகாயத்தில் சந்திரன் மிகவும் சூடான கிரணங்களைப் பொழியவும், இந்து = சந்திரன்;

மிதவாடை வந்து தழல்போல ஒன்ற (midhavAdai vandhu thazhalpOla ondRa ) : even the gentle northerly breeze is scorching my body. மெல்லிய தென்றல் காற்று வந்து, அக்கினி போல் தாக்கவும்,

வினைமாதர் தந்தம் வசை கூற (vinai mAdhar tham tham vasai kURa ) : women indulging in idle gossip are abusing me in foul languages, வினைவசப்பட்ட மாதர்கள் தங்கள் தங்கள் மனம் போன வண்ணம் வசை மொழிகளைக் கூறவும்,

குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்ப மயல் தீர (kuRavANar kundRil uRaipEdhai koNda kodidhAna thunba mayal theera ) : In order that You put an end to the torment of immense love and longing that I, like VaLLi living in the mountain of KuRavas, experience; ஐம்புலன்களாகிய குறவர்களுடைய மலையில் வசிக்கின்ற அறியாமையையுடைய பெண்ணாகிய ஜீவான்மா அடைந்த கொடிய துன்பத்தைப் புரியும் மயக்கம் நீங்க,

குளிர் மாலையின் கண் அணிமாலை தந்து (kuLir mAlaiyin kaN aNimAlai thandhu) : You must come in the cool evening to give me Your kadappa garland (as a token of Your love). குளிர்ச்சி பொருந்திய மாலை நேரத்தில், தங்களது திருமார்பில் அணிந்துள்ள மாலையைத் தந்து,

குறை தீர வந்து குறுகாயோ (kuRai theera vandhu kuRugAyO ) : Will You not come to me and rid of my discontent? இந்த ஜீவான்மாவினது குறை நீங்குமாறு வந்து அணுக மாட்டாயா?

மறி மான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா (maRimAn ugandha iRaiyOn magizhndhu) : Lord SivA, who holds a young deer in His hand, happily worshipped You (after You taught Him the meaning of OM), Oh Learned One! மறி மான் உகந்த = மான் குட்டியைக் கருணையுடன் கரத்திலேந்தியுள்ள, மதியாளா = ஞானவடிவினரே!

மலைமாவு சிந்த அலை வேலை அஞ்ச வடிவேல் எறிந்த அதிதீரா (malai mAvu sindha alaivElai anja vadivEl eRindha athi dheerA ) : You are the valiant warrior who threw the spear at the Krouncha Mount, and pulverized it. With your lance ('vel') you also cleaved Surapadman in the form of a mango tree and threw the two parts into the sea which caused the sea to swell. மலை மாவு சிந்த = கிரவுஞ்சமலையும், மா மரமாக நின்ற சூரபன்மனும் அழியுமாறு; வேலை = கடல்;

அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே (aRivAl aRindhun iru thAL iRainjum adiyAr idainjal kaLaivOnE) : You remove all the obstacles of Your devotees who seek to know You with their intellect and worship Your two feet, அறிவால் அறிந்து = பாச அறிவும் பசு அறிவும் நீங்கிய மெய்யறிவினால் உணர்ந்து,

அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே. (azhagAna sempon mayil mEl amarndhu alaivAy ugandha perumALE. ) : You sit atop a beautiful golden-red peacock and dwell happily at Tiruchendur, oh Great One

Also Read : நீலங்கொள்

Comments

  1. விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய
    மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற
    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர
    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ
    மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா
    மலைமாவு சிந்த அலைவேலை யஞ்சவடிவே லெறிந்த அதிதீரா
    அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு மடியா ரிடைஞ்சல் களைவோனே
    அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து லைவா யுகந்த பெருமாளே.

    ReplyDelete
  2. நல்ல பணி. இது மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும். நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே