67. கருப்புவிலில்


ராகம்: சிந்து பைரவி தாளம் : கண்ட த்ருவம்
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய்மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில்மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
உனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிருஅருளாலே
உருத்திரனும் விருத்திபெற அனுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்தபொருள்
உணர்த்துநா ளடிமையுமுடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வருமுருகோனே
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரிவயலூரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிகப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ்குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகியபெருமாளே.

karuppuvilil maruppakazhi thoduththumathan viduththanaiya
kadaikkaNodu siriththaNuku karuththinAl virakusey madamAthar
kathakkaLiRu thidukkamuRa matharththumika vethirththumalai
kanaththaviru thanaththinmisai kalakkumO kanamathil maruLAmE
oruppaduthal viruppudaimai manaththilvara ninaiththaruLi
unaippukazhu menaippuviyil oruththanAm vakaithiru aruLAlE
uruththiranum viruththipeRa anukkiraki yenakkuRuki uraikkamaRai yaduththuporuL uNarththunA Ladimaiyu mudaiyEnO
paruppathamu murupperiya arakkarkaLu miraikkumezhu
padikkadalu malaikkavala paruththathO kaiyilvaru murugOnE
pathiththamara kathaththinuda nirathnamaNi niraiththapala
paNippaniru puyacchayila parakkavE iyaltheri vayalUrA
thiruppugazhai yuraippavarkaL padippavarkaL midippakaimai
seyiththaruLu misaippiriya thiruththamA thavar pugazh gurunAthA
silaikkuRava rilaikkudilil pukaikkaLaka mukiRpudaisel
thiruppazhani malaikkuLuRai thirukkai vEl azhakiya perumALE.

Learn the Song


Raga Sindhu Bhairavi (Janyam of 8th mela Hanumatodi )

Arohanam: S R1 G2 M1 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Paraphrase

அருணகிரிநாதர், “முருகா! உன் அப்பாவுக்கு உபதேசித்த மறைப்பொருளை அடியேனுக்கும் உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டுகின்றார்.

இது “கரந்துறை பாடல்” . இப்பாடலில் ஒவ்வோரடியிலும் இறுதியில் உள்ள வரியை எடுத்து தனியே அமைத்தால் அது ஒரு தனித் திருப்புகழாக அமையும்.

கருத்தினால் விரகுசெய் மடமாதர்
கலக்குமோ கனமதில் மருளாதே
ஒருத்தனாம் வகைதிரு வருளாலே
உணர்த்துநா ளடிமையு முடையேனோ
பருத்ததோ கையில்வரு முருகோனே
பரக்கவே இயல்தெரி வயலூரா
திருத்தமா தவர்புகழ் குருநாதா
திருக்கைவே லழகிய பெருமாளே.

கருப்பு வி(ல்)லில் மருப் பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக் க(ண்)ணொடு சிரித்து அணுகு கருத்தினால் விரகு செய் மடமாதர் (karuppu vi(l)lil marup pagazhi thoduththu mathan viduththu anaiya kadaik ka(N)Nodu siriththu aNuku karuththinAl viraku sey madamAthar) : The young girls smile with the corner of their dart-like eyes, like Manmatha (the god of love) who shoots arrows of fragrant flowers with his sugarcane bow and they indulge in playing cunning games; கரும்பு வில்லில் மணம் பொருந்திய மலர்க்கணைகளை மன்மதன் தொடுத்து விடுத்தது போன்ற கடைக்கண் பார்வையுடன், அடிக்கடி சிரித்துக் கொண்டு நெருங்கி வந்து, சூழ்ச்சி நிறைந்த உள்ளத்தினால் ஏமாற்று செயல்கள் புரிகின்ற விலைமகளிருடைய, கருப்பு/கரும்பு (karuppu or karumbu) : sugar cane; மரு (maru) : fragrant (Manmatha uses flowers as arrows); பகழி (pagazhi) : arrows; கருத்தினால் விரகு செய் மடமாதர் (karuththinAl viraku sey madamAthar) : (ஆடவரது கைப்பொருளை பறிக்க வேண்டும் என்னும்) நோக்கத்துடன் விரக தாபத்தை எழுப்பும் பேதையர்களான விலை மாதர்களுடைய

கதக் களிறு திடுக்கம் உற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை கலக்கும் மோகனம் அதில் மருளாதே (kathak kaLiRu thidukkam uRa matharththu mika ethirththu malai kanaththa iru thanaththin misai kalakkum mOkanam athil maruLAthE) : instead of being lured into lust for their mountain-like voluminous breasts that could intoxicate even the wild angry elephants; கதக் களிறு (kathak kaLiRu) : angry elephants; மோகனம் அதில் மருளாதே (mOganam athil maruLAthE) : மோக வெறியில் மயங்காமல்;

ஒருப் படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனைப் புகழும் எனைப் புவியில் ஒருத்தனாம் வகை திரு அருளாலே ( oruppaduthal viruppu udaimai manaththil vara ninaiththu aruLi unai pugazhum enai bhuviyil oruththanAm vagai thiru aruLAlE ) : kindly bless me so that I have a desire to acquire single-tracked concentration in my mind and become an unrivalled poet singing your glory; ஒருப் படுதல் விருப்பு உடைமை (oruppaduthal viruppu udaimai) : (உன்னுடன் இரண்டற கலந்து) ஒன்றாயிருக்க வேண்டும் என்ற விருப்பம் ; உனைப் புகழும் எனைப் புவியில் ஒருத்தனாம் வகை (unai pugazhum enai bhuviyil oruththanAm vagai ) : உன்னை புகழ்ந்து பாடும் அடியேனை பூவுலகத்தில் நிகரற்றவனாய் இருக்கும் படி

உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி எனக் குறுகி உரைக்க அ (ம்) மறை அடுத்து பொருள் உணர்த்தும் நாள் அடிமையும் உடையேனோ (uruththiranum viruththi peRa anukkiragi enak kuRugi uraikka a(m) maRai aduththu poruL uNarththum nAL adimaiyum udaiyEnO) : will I ever get to realize the meaning of the secret Pranava Mantra that even Rudra entreated you to explain! விருத்தி பெற = விளக்கம் பெற;

பருப்பதமும் உருப் பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படிக் கடலும் அலைக்க வ(ல்)ல பருத்த தோகையில் வரு முருகோனே (paruppathamum urup periya arakkarkaLum iraikkum ezhu padik kadalum alaikka va(l)la paruththa thOkaiyil varu murugOnE) : You mounted the huge peacock which shook the Krouncha mountain and the giant-sized demons, stirring up the seven noisy seas of this world, Oh MurugA! (கிரெளஞ்ச) மலையையும், பெரிய வடிவமுடைய அரக்கர்களையும், ஒலிக்கின்ற ஏழு பூமியையும் ஏழு கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பெரிய தோகை மயிலின் மீது வருகின்ற முருகக் கடவுளே! பருப்பதம் (paruppatham) : mountain – here Krauncha mountain;

பதித்த மரகதத்தினுடன் இரத்னமணி நிரைத்த பல பணிப் ப(ன்)னிரு புயச் சயில பரக்கவே இயல் தெரி வயலூரா (pathiththa maragathaththinudan irathnamaNi niraiththa pala paNip pa(n)niru buya sayila parakkavE iyal theri vayalUrA) : You have twelve mountain-like shoulders adorned with several ornaments, which are studded with rows of precious gems and embedded with emerald, Oh Lord! You know the entire length and breadth of Tamil literature, Oh MurugA of VayalUr! பல பணி = பலவகையான அணிகலன்களை அணிந்துள்ள, பனிரு புய சயில = மலை போன்ற பன்னிரண்டு புயங்களையுடையவரே! பரக்கவே இயல்தெரி = விரிவாக இயல் தமிழைத் தெரிந்த,

திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகைமை செயித்தருளும் இசைப் பிரிய திருத்த மாதவர் புகழ் குருநாதா (thiruppukazhai uraippavarkaL padippavarkaL midip pakaimai seyiththaruLum isaip piriya thiruththa mAthavar pukazh gurunAthA ) : The poverty and adversity of those who recite and read the songs of Your Glory (Thiruppugazh) vanish, and they are blessed with success, Oh lover of music! You are praised by highly moral and famous people who have performed penance, Oh Great Master! திருத்த மாதவர் புகழ் = திருந்திய ஒழுக்கமுடைய சிறந்த தவத்தினர்கள் புகழ்கின்ற,

சிலைக் குறவர் இலைக் குடிலில் புகைக் களக முகில் புடை செல் திருப் பழநி மலைக்குள் உறை திருக்கை வேல் அழகிய பெருமாளே (silaik kuRavar ilaik kudilil pukaik kaLaga mukil pudai sel thirup pazhani malaikkuL uRai thirukkai vEl azhagiya perumALE.) : You reside in the little thatched huts of the KuRavAs carrying the bow; You also reside, holding the spear in Your hallowed hand, in the beautiful Mountain in Pazhani where smoke-like dark clouds hang down, Oh Great One! புகை களக முகில் புடை செல் = புகை போன்ற கருமையுடைய மேகங்கள் அருகில் தவழ்ந்து செல்கின்ற,

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே