69. குரம்பை மலசலம்
elumbu aNisari dhasaiyiral kudalnedhi
kulaindha seyirmayir kurudhiyodu ivaipala kasumaala
kudin pugudhum avar avar kadu kodumaiyar
idumbar oru vazhi iNaiyilar kasadargaL
kurangar aRivilar neRiyilar mirugaNai viRalaana
sarambar uRavanai naraganai thuraganai
irangu kaliyanai parivuRu sadalanai
savundharika muka saravaNa padhamodu mayilERi
thazhaindha sivasudar thanai ena manadhinil
azhundha uraiseya varumuga nagaiyoLi
thazhaindha nayanamum irumalaar charaNamum maRavEnE
irumbai vaguLamo diyaipala mugil pozhil
uRaindha kuyil aLi oli paravida mayil
isaindhu nadamidum iNaiyili pulinagar vaLanaadaa
iruNda kuvadidi podipada vegumuka
derindhu makaramod isaikari kumuRuga
iraindha asurarod ibapari yamapuram vidum vELE
siram pon ayanodu munivargaL amarargaL
arambai magaLiro darahara sivasiva
seyambuvena nadamidu padham azhagiyar gurunaathaa
sezhum pavaLa oLi nagaimuka madhi nagu
siRandha kuRamagaL iNaimulai pudhai pada
jeyankoL daNai guha sivamalai maruviya perumaaLE.
Learn the Song
Raga Gowlai (Janyam of 15th mela Mayamalavagowlai) By Neyveli santhanagopalan
Arohanam: S R1 M1 P N3 S Avarohanam: S N3 P M1 G3 M1 R1 G3 M1 R1 SParaphrase
தழைந்திருக்கின்ற அருட்பெருஞ் சோதியை, அடியேனுடைய மனதில் நன்றாக பதியுமாறு உபதேசிக்கும் பொருட்டு, மிகுந்த பேரழகுடைய திருமுகங்களும், தாமரையனைய திருவடிகளும் தோன்ற, பச்சை மயில் வாகனத்தில் ஏறி வந்தருளியபோது, எந்தையுடைய திருமுகத்தில் அரும்பிய புன்னகையின் பேரொளியையும், மிகவும் குளிர்ந்து அடியேனை நோக்கிய திருக்கண்களையும், இரண்டு சரணாரவிந்தங்களையும், அடியேன் ஒருபோதும் மறக்கமாட்டேன்.குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம் (kurambai malajalam vazhuvaLu niNamodu elumbu aNisari thasai eeral kudal nedhi kulaindha seyir mayir kurudhiyodu ivaipala kasumAlam) : This hut like body, with feces, urine, slimy fat, fat, bones, layers of muscles, liver, intestines, disarrayed hair strands in knots and blood - in this mucky garbage, அணி சரி தசை — அடுக்காகச் சரிந்துள்ள தசைகள்; நெதி (நியதி) குலைந்த ̶ தாறுமாறான; செயிர் — குற்றம்; செயிர் மயிர் — குற்றம் உள்ள முடி, கருமை நிறம் போய் வெண்மையான முடி;
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் (kudin pugudhum avar avar kadu kodumaiyar idumbar oru vazhi iNaiyilar kasadargaL ) : live the five senses which are extremely cruel, arrogant, directionless (not focussed), and blemished, இடும்பர் (idumbar ) : துன்பம் இழைப்பவர்;
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன சரம்பர் உறவனை ( kurangar aRivilar neRiyilar mirugaNai viRalAna sarambar uRavanai ) : (they are) mischievous like the monkey; senseless, immoral, brutally strong and associate with the venomous. சரம்பர் (sarambar ) : விஷகுணம் உடையவர்; மிருகணை விறல் ஆன ( mirugaNai viRalAna ) : மிருகத்துக்கு ஒத்த வலிமையான;
நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவு உறு சடலனை (naraganai thuraganai irangu kaliyanai parivuRu sadalanai ) : resident of hell, with a mind racing as the horse, a pitiable wretch and having attachment to this transient body,
In the following lines, the poet describes how the Lord came riding on a peacock, with a benevolent smile to bless and take him into His fold.
சவுந்தரிக முக சரவண பதமொடு மயிலேறி ( savundhariga muga saravaNa padhamodu mayilERi) : Oh Lord, You mounted Your peacock elegantly with Your exquisite face and lotus-like feet!, சரவண பதமொடு = தாமரை போன்ற திருவடிகளோடு
தழைந்த சிவ சுடர் தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி (thazhaindha sivasudar thanai ena manadhinil azhundha urai seya varumuga nagai oLi ) : and came to imprint the rich effulgence of SivA on my heart and firmly preach to me with Your bright smiling face
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே ( thazhaindha nayanamum irumalAr charaNamum maRavEnE) : and cool eyes. I shall never forget that scene (Your bright face, cool eyes) and Your two hallowed lotus-like feet.
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் (irumbai vaguLamodu iyai pala mugil pozhil) : In the towering groves of ilumbai and magizha trees on which clouds settle; இலுப்ப மரங்களும் மகிழ மரங்களும் நிறைந்து இவைகளின் மேல் பல மேகங்கள் தங்கும் சோலைகளில், முகில் (mugil) : cloud ; பொழில் (pozhil) : grove;
உறைந்த குயில் அளி ஒலி பரவிட (uRaindha kuyil aLi oli paravida ) : the cuckoos and bees buzz sweet music, அளி (Ali) : bee;
மயில் இசைந்து நடமிடும் இணையிலி புலி நகர் வள நாடா (mayil isaindhu nadamidum iNaiyili pulinagar vaLanAdA) : and peacocks dance to that music, in the unique and fertile land of PuliyUr (Chidhambaram), which is Your abode! மயில்கள் அந்த இசைக்கு ஒத்து நடமிடுகின்ற இணை இல்லாத சிதம்பரம் என்னும் வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து (iruNda kuvadu idi podipada vegu mugadu erindhu) : The delusive dark mountain of Krouncha as well as several other mountains were crushed into dust;
மகரம் ஒள் திசை கரி குமுறுக (makaram oL disai kari kumuRuga ) : the sea full of sharks caught fire; the elephants guarding the eight radiant cardinal directions trumpeted in agitation; மகர மீன்களுக்கு உறைவிடமான கடலும், ஒளி பெற்ற எட்டுத் திசைகளிலே உள்ள திக்கஜங்களும் ஓவென்று சத்திக்கவும், ஒள் திசை கரி (oL disai kari) : ஒளியுள்ள எட்டு திசைகளிலும் உள்ள யானைகள்;
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே (iraindha asurarodu iba pari yamapuram vidum vELE) : and the invading masses of demons' armies, consisting of elephants, horses and soldiers, were all packed away to the land of Yama (God of Death) by You, Oh Leader! இப ( iba) : elephant; பரி ( pari ) : horse;
சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் (siram pon ayanodu munivargaL amarargaL) : BrahmA, with a golden countenance, many sages, DEvAs, அயன் ( ayan) : Brahma;
அரம்பை மகளிரொடு அரகர சிவ சிவ செயம்பு என ( arambai magaLirodu arahara siva siva seyambu ena nadamidu padham azhagiyar gurunAthA) : and the celestial girls together praised Him, saying "Harahara, Siva, Siva, Oh Self-Emerging Lord"
நடம் இடு பதம் அழகியர் குரு நாதா (nadamidu padham azhagiyar gurunAthA) : and You are the Master of that Great Dancer with lovely feet!
செழும் பவள ஒளி நகை முக மதி நகு (sezhum pavaLa oLi nagai muga madhi nagu ) : You embrace Valli, the best damsel of the KuRavAs with coral-like reddish face that mocks at the bright moon,
சிறந்த குற மகள் இணை முலை புதை பட செயம் கொடு அணை குக (siRandha kuRamagaL iNai mulai pudhai pada jeyam kodu aNai guha) : tightly and triumphantly so that Her bosom sinks into Your chest!
சிவ மலை மருவிய பெருமாளே. (siva malai maruviya perumALE.) : You are seated in Sivamalai (Pazhani), Oh Great One! பழநி மலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே! பழநிக்குச் சிவமலை என்பது ஒரு பெயர். அகஸ்தியர் சிவபெருமானிடத்து சிவமலை, சத்திமலை என்ற இரு மலைகளைப் பெற்று, அவற்றை இடும்பனைக் கொண்டு வரச் செய்ய, அவன் காவடியாகக் கட்டிக்கொண்டு வர, அதன் மீது முருகவேள் எழுந்தருளி நின்றார்.
Comments
Post a Comment