Posts

Showing posts with the label Thiruppugazh 1–100

85. போதகம் தரு

ராகம் : பந்துவராளி தாளம் : 1½+ 2 + 2 + 1½ + 2 போத கந்தரு கோவேந மோநம நீதி தங்கிய தேவாந மோநம பூத லந்தனை யாள்வாய்ந மோநம பணியாவும் பூணு கின்றபி ரானேந மோநம வேடர் தங்கொடி மாலாந மோநம போத வன்புகழ் ஸாமீந மோநம அரிதான வேத மந்திர ரூபாந மோநம ஞான பண்டித நாதாந மோநம வீர கண்டைகொள் தாளாந மோநம அழகான மேனி தங்கிய வேளேந மோநம வான பைந்தொடி வாழ்வேந மோநம வீறு கொண்டவி சாகாந மோநம அருள்தாராய்

84. புடவிக்கு அணிதுகில்

ராகம் : சாருகேசி தாளம் : ஆதி 2 களை புடவிக் கணிதுகி லெனவள ரந்தக் கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் சதுர்வேதன் புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக் கடினத் தொடுசில சிறுநகை கொண்டற் புதகர்த் தரகர பரசிவ னிந்தத் தனிமூவ ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற் செவியுட் பிரணவ ரகசிய மன்புற் றிடவிற் பனமொழி யுரைசெய் குழந்தைக் குருநாதா

83. பாரியான கொடை

ராகம் : பாகேஸ்வரி தாளம் : 1½ + 1½ + 1 + 1½ + 2 பாரியான கொடைக்கொண்ட லேதிரு வாழ்விசால தொடைத்திண்பு யாஎழு பாருமேறு புகழ்க்கொண்ட நாயக அபிராம பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள் சீலஞால விளக்கின்ப சீவக பாகசாத னவுத்துங்க மானத எனவோதிச் சீரதாக எடுத்தொன்று மாகவி பாடினாலு மிரக்கஞ்செ யாதுரை சீறுவார்க டையிற்சென்று தாமயர் வுறவீணே சேயபாவ கையைக்கொண்டு போயறி யாமலேக மரிற்சிந்து வார்சிலர் சேயனார்ம னதிற்சிந்தி யாரரு குறலாமோ

82. பஞ்ச பாதகன்

ராகம் : ஹுசேநி அங்க தாளம் (8) 1½ + 2 + 1½ + 1 + 1½ + 1 பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை பவுஷாசை பங்க ன் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர் அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ழடியேனை அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே

80. திமிர உததி

Image
ராகம் : பைரவி திச்ர ஏகம் (எடுப்பு 1 இடம்) திமிர வுததி யனைய நரக செனன மதனில் விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின் அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் வரவேணும்

79. திடமிலி சற்குணமிலி

ராகம்: பந்துவராளி கண்ட சாபு (2½) திடமிலிசற் குணமிலி நற்றிறமிலியற் புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றழிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேணும்

78. தலைவலி மருத்தீடு

ராகம் : செஞ்சுருட்டி தாளம் : சதுஸ்ர த்ருவம் கண்ட நடை தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ளிருபாதம் உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்

77. தமரும் அமரும்

ராகம் : ஹமீர் கல்யாணி தாளம் : ஆதி திச்ர நடை (12) தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் அயலாகத் தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே கமல விமல மரக தமணி கனக மருவு மிருபாதங் கருத அருளி யெனது தனிமை கழிய அறிவு தரவேணும்

76. தகர நறுமலர்

ராகம் : பூர்வி கல்யாணி அங்க தாளம் 1½ + 2 + 2 + 2 தகர நறுமலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன திருபாதம் அருள அருளுடன் மருளற இருளற கிரண அயில்கொடு குருகணி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர இசைவாயே

75. ஞானம் கொள்

ராகம் : பிலஹரி அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½ ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத நாடண்டி நமசி வாய வரையேறி நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய நாதங்க ளொடுகு லாவி விளையாடி ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம லோமங்கி யுருவ மாகி யிருவோரும் ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி லோகங்கள் வலம தாட அருள்தாராய்

74. சுருதிமுடி மோனம்

ராகம் : நாட்டை குறிஞ்சி தாளம் : சதுச்ர த்ருவம் கண்ட நடை சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய உணராதே கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் வினைதானே கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி கருதசுழ மாமிந்த மட்டைதனை யானஉன தருள்தாராய்

73. சீறலசடன் வினைகாரன்

Image
ராகம் : ஹம்சநாதம் தாளம் : ஆதி சீற லசடன்வினை காரன் முறைமையிலி தீமை புரிகபடி பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடுங் கூறு மொழியதுபொய் யான கொடுமையுள கோள னறிவிலியு னடிபேணாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடு கூடும் வகைமையருள் புரிவாயே

71. சிவனார் மனம்

ராகம் : ஜோன்புரி/ சங்கராபரணம் கண்டசாபு(2½) 1+ 1½ சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின் செயலேவி ரும்பியுளம் நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு மடியேனை அஞ்சலென வரவேணும்

70. குருதி மலசலம்

ராகம் : கேதாரகௌளை மிச்ர சாபு (3½) 2+1½ குருதி மலசல மொழுகு நரகுட லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி யுடலூடே குடிக ளெனபல குடிகை வலிகொடு குமர வலிதலை வயிறு வலியென கொடுமை யெனபிணி கலக மிடுமிதை யடல்பேணி மருவி மதனனுள் கரிய புளகித மணிய சலபல கவடி மலர்புனை மதன கலைகொடு குவடு மலைதனில் மயலாகா மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுற வெனது தலைபத மருள்வாயே

69. குரம்பை மலசலம்

ராகம் : கௌளை தாளம் : ஆதி (2 களை) குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல கசுமாலக் குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர் இடும்ப ரொடுவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை விறலான சரம்ப ருறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு மயிலேறித் தழைந்த சிவசுடர் தனையென மனதினில் அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு மறவேனே

68. கருவினுருவாகி வந்து

ராகம் : விஜயநாகரி அங்க தாளம்(5½) 2½ + 1½ + 1½ (எடுப்பு ½ தள்ளி) கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அனுதினமும் நாண மின்றி அழிவேனோ

66. கரிய பெரிய

ராகம் : மோஹனம் ஆதி திச்ர நடை (12) கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் தரவேணும்

64. கடலை பொரி

ராகம் : தன்யாசி தாளம் : ஆதி கடலை பொரியவரை பலகனி கழைநுகர் கடின குடவுதர விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித மணவாளா

63. ஒருவரை யொருவர்

ராகம் : ஹிந்தோளம் தாளம் : திச்ர ரூபகம் (2+ 1½ + 1½) ஒருவரை யொருவர்தேறி அறிகிலர் மதவிசாரர் ஒருகுண வழியுறாத பொறியாளர் உடலது சதமெனாடி களவுபொய் கொலைகளாடி உறநம னரகில் வீழ்வ ரதுபோய்ப்பின் வருமொரு வடிவமேவி யிருவினை கடலுளாடி மறைவரி னனைய கோல மதுவாக மருவிய பரமஞான சிவகதி பெறுகநீறு வடிவுற அருளி பாத மருள்வாயே

62. ஒருபொழுதும்

ராகம் : பேகடா தாளம் : 1+1½+1+1½+ 1½+ 3 ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைத் சேவித் தறியேனே பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ