84. புடவிக்கு அணிதுகில்


ராகம்: சாருகேசிதாளம்: ஆதி 2 களை
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச்சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத் தனிமூவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
றிடவிற் பனமொழி யுரைசெய் குழந்தைக்குருநாதா
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
டிடவிக் கிரமொடு வெகுளிகள் பொங்கக்கிரியாவும்
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத்தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக்குமரேசா
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற்பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப்பெருமாளே.

pudavikkaNi thugilena vaLa ranthak
kadal ettaiyumaRa kudimuni yeNkat
punitha sathathaLa nilaikoL sayampu sathurvEthan
puramatteri ezha vizhikanal sinthi
kadinaththodu sila siRu nagai koNdaR
puthakarth tharakara parasiva ninthath thanimUvar
idasiththamu niRai theLivuRavum poR
seviyut piraNava ragasiya manput
Rida vuRpanamozhi uraisey kuzhanthai gurunAthA
ethirutRu asurarkaL padaikodu saNdai
kidam vaiththida avar kulamuzhu thumpat
tidavuk kiramodu vekuLikaL pongkak kiriyAvum
podipat tuthiravum virivuRu maNda
suvarvittu athiravu mugadu kizhintha
puRamap paraveLi kidukide nunjath thamumAka
poruthu kaiyiluLa ayilniNam uNgak
kuruthi punalezhu kadalinu minja
puravik kanamayil nadavidum vinthai kumarEsA
padiyiR perumitha thakavuyar sempoR
kiriyaith thanivalam vara aran anthap
palanaik karimukan vasam aruLumpoR pathanAlE
paran vetkida vuLa migavum vekuNdak
kaniyaith tharavilai yenAruL senthiR
pazhani sivagiri thaniluRai kanthap perumALE.

Learn the Song



Raga Charukesi (26th mela)

Arohanam:S R2 G3 M1 P D1 N2 S   Avarohanam: S N2 D1 P M1 G3 R2 S

Paraphrase

Murugan expounded the meaning of Pranava Mantra first to Brahma, then to Shiva and later to Sage Agastya (at Tirupporur).

புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி (pudavikku aNi thugil ena vaLar andha kadal ettaiyum aRa kudi muni) : Sage Agastya who drank the waters of the eight seas that engulfed the earth like a piece of clothing around it, பூமிக்கு உடுக்கப்படும் ஆடையென (அல்லது - பூமியின் ஆழதிய ஆடையென) பரந்துள்ள அந்த எட்டுத் திக்கிலும் உள்ள கடலை ஒட்டக் குடித்த முநி (அகத்தியர்), புடவிக்கு = பூமிக்கு;

எண் கண் புநித சத தள நிலை கொள் சயம்பு சதுர் வேதன் ( yeN kaN punitha satha thaLa nilai koL sayambu chathur vEthan) : the pious eight-eyed Brahma who is proficient in the four vedas and is seated on the hundred-petalled lotus, எட்டுக் கண்களை உடையவரும் சுத்தமான நூற்றிதழ்த் தாமரையில் நிலையாக இருப்பவருமான பிரமனாம் நான்கு வேதத்தோன் ;

புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத கர்த்தர் அரகர பர சிவன் ( puram attu eri yezha vizhi kanal sinthi kadinaththodu sila siRu nagai koNda aRputha karththar arahara parasivan ) : With eyes that spewed fire and burned the Tripura, and a face that looks stern but smiling, the amazing leader - Arahara Shiva; (திரி)புரங்கள் அழிந்து எரி கொள்ளும்படி நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை வீசி, வன்மையுடன் சற்று அற்பப் புன்னகையைக் கொண்ட அற்புதத்தலைவரும் ஹரஹர மூர்த்தியுமான பரமசிவன்

இந்த தனி மூவர் இட(ம்) சித்தமும் நிறை தெளிவு உறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்பு உற்றிட உற்பன மொழி உரை செய் குழந்தை குரு நாதா (intha thanimUvar ida siththamum niRai theLivu uRavum poR seviyuL piraNava ragasiyam anbutRida vuRpana mozhi urai sey kuzhanthai gurunAthA) : to fill the minds of these incomparable trio with contentment and clarity, You lovingly preached into their holy ears the PraNava ManthrA, Oh Master in the form of a child!

எதிர் உற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட (ethir utRa asurargaL padai kodu saNdaikku idam vaiththida) : When the demons confronted with their army, ready for a combat,

அவர் குலம் முழுதும் பட்டிட (avar kulam muzhuthum pattida) : Their clan was destroyed,

உக்கிரமொடு வெகுளிகள் பொங்க கிரி யாவும் பொடி பட்டு உதிரவும் (vukgiramodu veguLigaL ponga giri yAvum podipattu uthiravum ) : their protective mountains were shattered into pieces in a fierce rage, உக்கிரமாகக் கோபம் பொங்க மலைகள் யாவும் பொடிபட்டு உதிர,

விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் ( virivuRum aNda suvar vittu athiravum ) : their extensive fortress walls were shaken and demolished; விரிந்த அண்டச் சுவர்கள் பிளவு விட்டு அதிர்ச்சி கொள்ள,

முகடு கிழிந்து அப்புறம் அப் பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக (mugadu kizhinthu appuRam ap paraveLi kidukidu enum chaththamum Aga ) : the roofs of the fortresses were torn apart, and the outer space trembled with a loud noise; அண்டத்து உச்சி கிழிபட்டு அதற்கு அப்பாலுள்ள ஆகாய வெளியெலாம் கிடுகிடு என்று சத்தப் படும்படி

பொருது கையில் உள அயில் நிணம் உண்க (poruthu kaiyil uLa ayil niNam uNga) : when You fought fiercely such that the spear in Your hand ate the flesh, சண்டை செய்து, கையில் உள்ள வேல் (பகைவர்தம்) கொழுப்பை உண்ண,

குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச (kuruthi punal ezhu kadalinu minja) : the blood flowed in a deluge exceeding the might of the seven seas, ரத்த நீர் ஏழு கடல்களைக் காட்டிலும் அதிகமாகப் பெருக,

புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா (puravi ganamayil nadavidum vinthai kumarEsA ) : as You rode Your unique Peacock like a horse, Oh Wonderful Lord KumarA! குதிரையாம் பருத்த மயிலை நடத்திச் செலுத்தின அற்புத குமரேசனே!

படியில் பெருமித தக உயர் செம் பொன் கிரியை தனி வலம் வர (padiyil perumitha thaga vuyar sempon giriyai thani valam vara) : After You went around the great, eminent and golden Mount MEru,

அரன் அந்த பலனை கரி முகன் வசம் அருளும் பொற்பு அதனாலே (aran antha palanai kari mugan vasam aruLum poRpu athanAlE ) : and Lord SivA awarded the prized-fruit to the elephant-faced (brother of Yours), Ganapathi; because of the nature of this,

பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அக் கனியை தர விலை என அருள் (paran vetkida uLam migavum veguNdu ak kaniyai thara vilai yena aruL ) : You got offended at not receiving the fruit so that Shiva was ashamed

செந்தில் பழநி சிவகிரி தனில் உறை கந்த பெருமாளே.( senthil pazhani sivagiri thanil uRai kantha perumALE.) : when You went to the town of ThiruchchendhUr and to the Mount SivA (Pazhani) making them Your abode, Oh Kantha, the Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே