85. போதகம் தரு


ராகம்: பந்துவராளிதாளம்: 1½+ 2 + 2 + 1½ + 2
போத கந்தரு கோவேந மோநம
நீதி தங்கிய தேவாந மோநம
பூத லந்தனை யாள்வாய்ந மோநம பணியாவும்
பூணு கின்றபி ரானேந மோநம
வேடர் தங்கொடி மாலாந மோநம
போத வன்புகழ் ஸாமீந மோநமஅரிதான
வேத மந்திர ரூபாந மோநம
ஞான பண்டித நாதாந மோநம
வீர கண்டைகொள் தாளாந மோநம அழகான
மேனி தங்கிய வேளேந மோநம
வான பைந்தொடி வாழ்வேந மோநம
வீறு கொண்டவி சாகாந மோநம அருள்தாராய்
பாத கஞ்செறி சூராதி மாளவெ
கூர்மை கொண்டயி லாலேபொ ராடிய
பார அண்டர்கள் வானாடு சேர்தர அருள்வோனே
பாதி சந்திர னேசூடும் வேணியர்
சூல சங்கர னார்கீத நாயகர்
பார திண்புய மேசேரு சோதியர் கயிலாயர்
ஆதி சங்கர னார்பாக மாதுமை
கோல அம்பிகை மாதாம நோமணி
ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி
ஆவல் கொண்டுவி றாலேசி ராடவே
கோம ளம்பல சூழ்கோயில் மீறிய
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

moola mandhiram Odhal ingilai
eevadhingilai nEyamingilai
mOnamingilai nyaanam ingilai madavaargaL
mOgam uNdu adhidhaagamuNd apa
chaaramuNd aparaadhamuNdidu
mookan endroru pErum uNdaruL payilaadha
kOlamun guNaveena thunbargaL
vaarmaiyum palavaagi vendhezhu
gOra kumbiyilE vizhundhida ninaivaagi
koodu koNdu uzhalvEnai anbodu
nyaana nenjinar paal iNangidu
koormai thandhini aaLa vandharuL purivaayE
peeli venthuyaraali vendhava
sOgu vendhamaN moogar nenjidai
beethi kondida vaadhu koNdaruL ezhudhEdu
pENi angu edhir aaRu sendrida
maaRanum piNi theera vanjagar
peeRu veng kazhu ERa vendridu murugOnE
aalam uNdavar jOthi ankaNar
baagam ondriya vaalai anthari
aadhi anthamum aana sankari kumarEsaa
aaraNam payil nyaana pungava
sEvalan kodiyaana painkara
aavinan kudi vaazhvu koNdaruL perumaaLE.

Learn The Song



Raga Pantuvarali (51st mela Alias: kamavardhini)

Arohanam: S R1 G3 M2 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M2 G3 R1 S


Paraphrase

போதகம் தரு கோவே நமோநம (bOdhagam tharu kOvE namOnama) : I salute You, the leader who imparts spiritual knowledge to me;

நீதி தங்கிய தேவா நமோநம (needhi thangiya dhEvA namOnama) : I salute the Lord who is the seat of justice;

பூதலம் தனை ஆள்வாய் நமோநம (bUthalam thanai ALvAy namOnama) : I salute the ruler of the universe;

பணி யாவும் பூணுகின்ற பிரானே நமோநம (paNi yAvum pUNugindRa pirAnE namOnama : I salute the Lord who wears all the ornaments;

வேடர் தம் கொடி மாலா நமோநம (vEdar tham kodi mAlA namOnama) : Salutations to the Lord who loves Valli, the hunter damsel;

போதவன் புகழ் ஸாமி நமோநம (pOdhavan pugazh sAmee namOnama) : Salutations to the Lord who is praised by the god seated on the lotus (Brahma);

அரிதான வேத மந்திர ரூபா நமோநம (aridhAna vEdha mandhira rUpA namOnama) : Salutations to the embodiment of the rare and precious mantras in the Vedas;

ஞான பண்டித நாதா நமோநம (nyAna paNditha nAthA namOnama) : Salutations to the scholar possessing the Highest knowledge;

வீர கண்டை கொள் தாளா நமோநம (veera kaNdaikoL thALA namOnama) : Salutations to the valorous Lord whose feet is adorned by victorious anklets;

அழகான மேனி தங்கிய வேளே நமோநம (azhagAna mEni thangiya vELE namOnama) : Salutations to the Lord with a beautiful complexion;

வான பைந்தொடி வாழ்வே நமோநம (vAna painthodi vAzhvE namO nama) : Salutations to the Lord of the heavenly damsel (Deivayanai) who wears beautiful bangles;

வீறு கொண்ட விசாகா நமோநம அருள் தாராய் (veeRu konda visAkA namO nama aruL thArAy) : Salutations to the Lord of the Visaka star who is glowing with victory; Grant me your grace!

பாதகம் செறி சூராதி மாளவே கூர்மை கொண்ட அயிலாலே போராடியே பார அண்டர்கள் வான் நாடு சேர்தர அருள்வோனே(pAdhagam seRi sUrAdhi mALave kUrmai koNdu ayilAlE porAdiye pAra aNdarkaL vAnAdu sErthara aruLvOnE ) : You gracefully facilitated the return of the Devas to their abode and killed the cruel asuras by fighting them with your sharp spear

பாதி சந்திரனே சூடிம் வேணியர் சூல சங்கரனார் கீத நாயகர் பார திண் புயமே சேரு சோதியர் கயிலாயர் (pAdhi chandhiranE sUdum vENiyar sUla sankaranAr geetha nAyakar pAra thiN buyamE sEru jOthiyar kayilAyar ) : Lord Shiva who wears a half-moon on His tresses, holds a trident, is the lord of music, has strong and powerful shoulders, is resplendent with light, lives in the Kailasa mountains

ஆதி சங்கரனார் பாக மாது உமை கோல அம்பிகை மாதா மநோ மணி ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி (Adhi sankaranAr bAga mAdhumai kOla ambigai mAthA manOmaNi Ayi sundhari thAyA nanAraNi abirAmi ) : The lady residing on the left half of the Supreme primordial Lord Shankara (described above), Uma Devi, beautiful mother Ambikai, the gem of the heart, Mother SivakAma Sundhari, mother Narayani, exquisitively beautiful Abhirami,

ஆவல் கொண்டு வீறாலே சீராடவே (Aval koNdu viRAlE sirAdave) : Parvati (as described above) cuddles you with eager pride and affection;

கோமளம் பல சூழ் கோயில் மீறிய ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.(kOmaLam pala sUzh kOyil meeRiya Avinankudi vAzhvAna dhEvargaL perumALE.) : You live in Avinankudi (Pazhani) which is surrounded by several beautiful temples; You are the Lord of all celestials, oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே