Posts

Showing posts with the label audio

79. திடமிலி சற்குணமிலி

ராகம்: பந்துவராளி கண்ட சாபு (2½) திடமிலிசற் குணமிலி நற்றிறமிலியற் புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றழிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேணும்

76. தகர நறுமலர்

ராகம் : பூர்வி கல்யாணி அங்க தாளம் 1½ + 2 + 2 + 2 தகர நறுமலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன திருபாதம் அருள அருளுடன் மருளற இருளற கிரண அயில்கொடு குருகணி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர இசைவாயே

75. ஞானம் கொள்

ராகம் : பிலஹரி அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½ ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத நாடண்டி நமசி வாய வரையேறி நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய நாதங்க ளொடுகு லாவி விளையாடி ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம லோமங்கி யுருவ மாகி யிருவோரும் ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி லோகங்கள் வலம தாட அருள்தாராய்

68. கருவினுருவாகி வந்து

ராகம் : விஜயநாகரி அங்க தாளம்(5½) 2½ + 1½ + 1½ (எடுப்பு ½ தள்ளி) கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அனுதினமும் நாண மின்றி அழிவேனோ

61. உலகபசு பாச

ராகம் : சௌராஷ்ட்ரம் அங்க தாளம் 2½ + 1 ½ + 1½ + 3(8½) உலகபசு பாச தொந்த மதுவான உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர் மலசலசு வாச சஞ்ச லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை யணிசேயே சரவணப வாமு குந்தன் மருகோனே பலகலைசி வாக மங்கள் பயில்வோனே பழநிமலை வாழ வந்த பெருமாளே.

59. அவனிதனிலே

ராகம் : பௌளை அங்க தாளம் : 5½ (1 + 1½+ 1½+ 1½) அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேநடந்து இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற னடிசேராய்

58. அருத்தி வாழ்வொடு

ராகம் : பிலஹரி அங்க தாளம் (10 ½) 1 ½ + 2 + 2 + 2 + 3 அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும் அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது நினையா துன் தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே

56. வெங்காளம் பாணம்

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி வெங்கா ளபா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் பொழுதாள்வாய்

55. விறல் மாரன்

ராகம் : மாண்டு தாளம் : ஆதி விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ

48. மூப்புற்றுச் செவி

ராகம்: மாயாமாளவ கௌளை தாளம்: ஆதி (2 களை) மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் தடுமாறி மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி யிளையோடும் கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு கூட்டிற் புக்குயி ரலையாமுன் கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே

47. முனைச்சங் கோலிடு (அனிச்சங் கார் முகம்)

ராகம்: காபி தாளம்: 1½ + 6 (நீக்குக)---> அனிச்சங் கார்முகம்....நெறிபாரா

46. முந்துதமிழ் மாலை

ராகம் : செஞ்சுருட்டி அங்க தாளம் (7½) 1½ + 2½ + 2 + 1½ முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே திந்திதிமி தோதி தீதித் தீதி தந்தன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ் செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது வருவாயே

44. மங்கை சிறுவர்

ராகம் : ஹம்சானந்தி தாளம் : ஆதி திஸ்ர நடை(12) மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற வுடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய விழஆவி வெங்கண் மறலி தன்கை மருவ வெம்பி யிடறு மொருபாச விஞ்சை விளையு மன்று னடிமை வென்றி யடிகள் தொழவாராய்

41. பரிமள களப

ராகம் : தேவகாந்தாரி தாளம் : சதுஸ்ர அட (12) பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார் படையம படையென அந்திக் குங்கட் கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே

38. நிலையாப் பொருளை

ராகம் : பாகேஶ்ரீ தாளம் : மிஸ்ர சாபு (2 + 1½) நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி மலம்நீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல மருள்வாயே

37. நிதிக்குப் பிங்கலன்

ராகம்: தன்யாசி சங்கீரண சாபு (2 +1½ +1) நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் நிறத்திற் கந்தனென் றினைவோரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென் றரற்றித் துன்பநெஞ் சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம் புகட்டிக் கொண்டுடம் பழிமாயும் புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம் புணர்க்கைக் கன்புதந் தருள்வாயே

36. நாலு மைந்து

ராகம் : கேதார கெளளை தாளம் : திச்ர நடை (15) நாலு மைந்து வாசல்கீறு தூறு டம்பு கால்கையாகி நாரி யென்பி லாகுமாக மதனூடே நாத மொன்ற ஆதிவாயில் நாட கங்க ளானஆடி நாட றிந்தி டாமலேக வளராமுன் நூல நந்த கோடிதேடி மால்மி குந்து பாருளோரை நூறு செஞ்சொல் கூறிமாறி விளைதீமை நோய்க லந்த வாழ்வுறாமல் நீக லந்து ளாகுஞான நூல டங்க வோதவாழ்வு தருவாயே

35. தோலொடு மூடிய

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் கோவையு லாமடல் கூறிய ழுந்திக் தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் புலையேனைக் காரண காரிய லோகப்ர பஞ்சச் சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் றருளாதோ

34. தொந்தி சரிய

ராகம்: தோடி/அடாணா அங்க தாளம் (7½) 1½ + 1½ + 2 + 1½ + 1 தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முகுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடமை கடனே தெனமுடுகு துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுக வுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்

33. துன்பம் கொண்டு

Image
ராகம் : பைரவி தாளம் : திச்ர த்ரிபுடை (7) துன்பங்கொண் டங்க மெலிந்தற நொந்தன்பும் பண்பு மறந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி லணுகாதே இன்பந்தந் தும்பர் தொழும்பத கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி யென்றென்றுந் தொண்டு செயும்படி யருள்வாயே

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

55. விறல் மாரன்