47. முனைச்சங் கோலிடு (அனிச்சங் கார் முகம்)

ராகம்: காபிதாளம்: 1½ + 6
அனிச்சங் கார்முகம்....நெறிபாரா
வினைச்சண் டாளனை வீணணை நீணிதி
தனைக்கண் டாணவ மானநிர் மூடனை
விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழிபகராதே
விகற்பங் கூறிடு மோகவி காரனை
அறத்தின் பாலொழு காதமு தேவியை
விளித்துன் பாதுகை நீதர நானருள்பெறுவேனோ
முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன்மருகோனே
முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
திரைக்கங் காநதி தாதகி கூவிள
முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வருமுருகோனே
தினைச்செங் கானக வேடுவ ரானவர்
திகைத்தந் தோவென வேகணி யாகிய
திறற்கந் தாவளி நாயகி காமுறும்எழில்வேலா
சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந் தூர்வரு சேவக னேசுரர்பெருமாளே.


Learn the Song



Raga Kapi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 D2 N2 P M1 G2 R2 S


Paraphrase

வினைச் சண்டாளனை வீணணை ( vinai chaNdALanai veeNaNai) : I am a vile wretch and a vain-glorious do-for-nothing;

நீள் நிதிதனைக் கண்டு ஆணவமான நிர்மூடனை (neeL Nithithanai kaNdu ANavamAna nirmUdanai ) : I am a crooked fool, and immense wealth has turned my head and made me arrogant

விடக்கு அன்பாய் நுகர் பாழனை (vidakku anbAy nugar pAzhanai) : I am depraved, gobbling up meat with relish;

ஓர் மொழி பகராதே விகற்பம் கூறிடு மோக விகாரனை (Orr mozhi pagarAthE vikaRpam kURidu mOga vigAranai) : I am an ignoble loafer speaking lewdly, instead of chanting the unique ManthrA of six letters(SaravaNabava);

அறத்தின் பால் ஒழுகாத மூதேவியை (aRaththin pAlozhu kAthamu thEviyai ) : I am a scoundrel who never walked the righteous path;

என்னை விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள் பெறுவேனோ (viLiththu un pAthugai nee thara nAn aruL peRuvEnO) : yet, will You kindly call me by Your side and place Your holy feet on my head, and bless me?

முனைச் சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து (munai changu Olidu neela maga uthathi adaiththu ) : (You, Lord Vishnu) Built a barrier across the vast blue ocean where the waves resound constantly like war drums, போருக்குரிய சங்குகள் போல ஓ என ஒலித்துக்கொண்டிருக்கும் நீல நிறம் பொருந்திய பெரிய கடலில் அணை கட்டி

அஞ்சாத இராவணன் நீள் பல முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே (anjAtha irAvaNan neeL pala mudikku anRu Or kaNai Evum iragavan marugOnE ) : and knocked off the ten strong heads of the fearless Ravana with a single powerful arrow of RAmA; You are that Vishnu's nephew! பகைவர்களுக்கு அஞ்சாத இராவணனது மணிமகுடந் தரித்துள்ள பல தலைகளும் அற்றுவிழ ஒரே ஒரு கணையை ஏவிய ரகுவீரராகிய ஸ்ரீராமபிரானது மருமகராக எழுந்தருளி இருப்பவரே;

முளைக்குஞ் சீத நிலாவொடு அரா விரி திரைக் கங்காநதி தாதகி கூவிள முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே (muLaikkum ceetha nilAvodu arA viri thirai gangA nathi thAthaki kUviLa nEL mudikkum sEkarar pEr aruLAl varu murugOnE ) : Your birth comes from the grace of Lord Shiva who carries the crescent and cool moon that rose from the milky ocean, a serpent, wide and wavy river GangA, Aththi (mountain ebony) flower and vilvam (bael) leaves on His matted hair, Oh Muruga! திருப்பாற் கடலிலே தோன்றும் குளிர்ந்த பிறைச் சந்திரனையும், பாம்பையும், விசாலமானதும் அலைகளை உடையதுமாகிய கங்கா நதியையும், ஆத்திமலரையும், வில்வத்தையும் தரித்துக்கொண்டுள்ள சடாமகுடத்தையுடைய சிவபெருமானது பெருங்கருணையால் அவதரித்த முருகப்பெருமானே!

தினைச் செம் கானக வேடுவர் ஆனவர் (thinai sem kAnaga vEduvar Anavar ) : The hunter tribesmen of the lush forest living near the millet-field (of VaLLimalai)

திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய திறல் கந்தா (thikaiththu anthO enavE kaNi Agiya thiRal kanthA ) : were astonished and exclaimed "What a wonder!" when You stood cleverly before them in the guise of a kino tree (வேங்கை), Oh Muruga!

வ(ள்)ளி நாயகி காமுறும் எழில் வேலா (vaLi nAyaki kAmuRum ezhil vElA ) : VaLLi is passionately in love with You standing there handsomely with Your beautiful spear!

சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் (siRakkum thAmarai Odaiyil mEdaiyil ) : On the great lotus ponds, on lofty terraces, மலர்களுக்குள் சிறப்புற்றிருக்குந் தாமரை ஓடைகளிலும், உயர்ந்த உப்பரிகைகளிலும்

நிறக்கும் சூல் வளை பால்மணி வீசிய (niRakkum soolvaLai pAlmaNi veesiya ) : and on the gorgeous shoreline, waves splash out white pearls contained in pregnant shells in the town of நல்ல நிறம் பொருந்திய சினைகொண்ட சங்குகள், பால் போன்ற வெண்ணிறமுடைய முத்துக்களை எறிகின்ற (கடற்கரையிலுள்ள),

திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே. (thiruchenthUr varu sEvakanE surar perumALE. ) : ThiruchchendhUr, which is Your abode, Oh Brave One! You are the Lord of the celestials, Oh Great One!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே