168. எழுகு நிறை நாபி


ராகம் : ஹிந்தோளம்தாளம்: ஆதி
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர்முதலானோர்
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறுகனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடுதமிழாலே
புனலிலெதி ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர குருநாதா
மழுவுழைக பால டமரகத்ரி சூல
மணிகரவி நோத ரருள்பாலா
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய்முருகோனே
கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
கதிருலவு வாசல்நிறைவானோர்
கடலொலிய தான மறைதமிழ்க ளோது
கதலிவன மேவுபெருமாளே.

Learn The Song



Paraphrase

எழுகு நிறை நாபி அரி (ezhugu niRai nAbi ari) : Vishnu, who once held all the seven worlds in His navel, எழுகு/ஏழு உலகு (ezhugu/Ezhu ulagu) : seven worlds; எழுகு நிறை நாபி(ezhugu niRai nAbi) : holding the seven worlds in His navel;

பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் (biramar jOthi yilakumaran mUvar mudhlAnOr) : BrahmA, and the resplendent Shiva, being the Trinity, and other DEvAs; சோதி இலகும் அரன்(jOthi ilakum aran) : Shiva in the form of Light;

இறைவி எனும் ஆதி பரை (iRaivi enum Adhi parai ) : She is the Parashakti who is the chief for them all (Hari, Brahma and Rudra);

முலையினில் ஊறி எழும் அமிர்தம் நாறு(ம்) கனி வாயா (mulaiyinil URi ezhum amirtha nARu kanivAyA:) : Your mouth has that sweet Smell of the Divine Milk of Knowledge from (Devi's) breasts;

You drink the divine milk of Goddess Parvati who is worshipped by the trinity;

Saint Arunagirinathar considers Thirugnana Sambanthar to be an incarnation of Murugan who came to protect Saivism against the aggressive proselytizing of SamaNas.

புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான புநிதன் என (puzhugu ozhugu kAzhi kavuNiyaril nyAna punidhan ena) : In SeerkAzhi, which is steeped in the aroma of the civet, You were born in the KavuNiya lineage as Pure Knowledge incarnate. புழுகு/புனுகு (puzhugu/punugu) : is a fragrant substance exuded by civet cat;

ஏடு தமிழாலே புனலில் எதிர் ஏற (Edu thamizhAlE punaliledhi rERa) : When You (as Tirugnana Sambandhar) floated a palm leaf inscribed with Tamil hymns, it went upstream against the current in Vaigai River;

சமணர் கழு ஏற பொருத கவி வீர குருநாதா (samaNar kazhu vERa porudhakavi veera gurunAthA:) : and the samaNas (Jain monks) were all sent to the gallows by the war You fought through Tamil hymns, Oh Great Master!

மழு உழை கபால தமரகம் த்ரி சூல மணி கர விநோதர் அருள் பாலா (mazhuvuzhaika pAla damaragathri sUla maNikaravi nOdhar aruLbALA) : You are the son of the unique SivA, who holds on His hands a pick-axe, a deer, BrahmA's skull, a hand drum and three-pronged weapon (Trishul). உழை (uzhai) : deer; த(ட)மரகம் (damaragam) : hand drum;

மலர் அயனை நீடு சிறை செய்து (malarayanai needu siRaiseydhu) : You imprisoned BrahmA, who sits on a lotus,

அவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே (avan vElai vaLamaipeRa vEsey murugOnE) : took over his job of Creation and performed very well, Oh Muruga.

கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு (kazhugu thozhu vEdha giri sikari veeRu ) : At the pinnacle of the great Mount of Veda (Vedagiriswarar Temple), eagles prostrate daily;

கதிர் உலவு வாசல் நிறை வானோர் (kadhirulavu vAsal niRai vAnOr) : and at its bright gates, all DEvAs assemble and

கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது (kadal oliyadhAna maRai thamizhgal Odhu ) : chant VEdAs and Tamil hymns that sound like sea waves.

கதலி வனம் மேவும் பெருமாளே. (kadhalivana mEvu perumALE.) : This place is Kathalivanam (ThirukazhukkundRam), Oh Great One! கதலி வனம் (kathali vanam) : plantain forest; plantain is the sthala vriksha in the Thirukazhukkundram temple.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே