திருவேளைக்காரன் வகுப்பு

ராகம் : நாதநாமக்கிரியை தாளம்: கண்டசாபு (3½)

ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது
வாகநிகழ் பத்தசனவாரக் காரனும்
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய
னாருடனு ணக்கைபரிதீமைக் காரனும்
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதிவேகக் காரனும்
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு
பூதியடை வித்ததொருபார்வைக் காரனும்
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம
ராவதிபு ரக்குமடல்ஆண்மைக் காரனும்
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு
ணாபுரியில் நிற்கும்அடையாளக் காரனும்
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை
யானவர் தொடுத்தகவிமாலைக் காரனும்
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும்
ஆதிமுடி வற்றதிருநாமக் காரனும்
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும்
யாரும்உணர் தற்கரியநேர்மைக் காரனும்
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை
யேறவிடு நற்கருணையோடக் காரனும்
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி
யேரணிசெ ருத்தணியில்வாசக் காரனும்
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி
ராமல்விடு வித்தருள்நியாயக்காரனும்
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை
யாயெனஅ ழைத்துருகுநேயக் காரனும்
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும்
யாகமுநி வர்க்குரியகாவற் காரனும்
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும்
யானையள விற்றுவளும்ஆசைக் காரனும்
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை
யோனும்அறி விற்பெரியமேன்மைக் காரனும்
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர்
வாவியில்உ தித்தமுகமாயக் காரனும்
வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு
மானும்அய னைக்கறுவுகோபக் காரனும்
வாழியென நித்தமற வாதுபர விற்சரண
வாரிசம்அ ளிக்கும்உபகாரக் காரனும்
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய்
மாநகரி யிற்கடவுள்ஆயக் காரனும்
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும்
வாசுகியெ டுத்துதறும்வாசிக் காரனும்
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது
வாகைபுனை குக்குடபதாகைக் காரனும்
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும்
வானிலணு வுக்கணுவுபாயக் காரனும்
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம
காடவியில் நிற்பதொர்சகாயக் காரனும்
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை
மீதமர்த மிழ்த்ரயவிநோதக் காரனும்
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை
வேணியர்து திப்பதொருகேள்விக் காரனும்
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ
வேலையுற விட்டதனிவேலைக் காரனும்
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர்
வீடுபெற வைத்தருள்உதாரக் காரனும்
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல்
வீரனும்அ ரக்கர்குலசூறைக் காரனும்
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி
சாகனும்வி கற்பவெகுரூபக் காரனும்
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி
யாகுலம னத்தினொடுபோம்விற் காரனும்
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு
மேதகு குறத்திதிருவேளைக் காரனே

Learn The Song

Download Music - Podcast Hosting - 423V_Velaikara vaguppu

Paraphrase

ஆன பயபத்தி வழிபாடு பெறு முத்தி அதுவாக நிகழ் பத்தசன வாரக் காரனும்(aanabaya baththi vazhi paadu peRu muththi adhuvaaga nigazh baththa jana vaarak kaaranum): He showers love on the group of devotees who worship Him to the best of their capacities with fear and devotion and make it their routine, believing it to be the way to their salvation; வாரக் காரன் ... அன்பைச் செலுத்துபவன்;

ஆர மதுரித்த கனி காரணம் முதல் தமையனாருடன் உணக்கை பரி தீமைக் காரனும்(aara madhuriththa kani kaaraNa mudhal thamaiyanaarudan uNakkai pari theemaik kaaranum): Once He became sad and angry after the contest with His brother Ganesha over a fruit filled with sweetness; ஆர(aara): filled; உணக்கை ... (சிவனார் ஏற்படுத்திய) போட்டியில் ஏற்பட்ட, பரி ... வருத்தம், தீமைக்காரனும் ... கோபத்தையும் பெற்றவன் ;

ஆகமம் விளைத்த அகில லோகமும் நொடிப்பளவில் ஆசையொடு சுற்றும் அதி வேகக் காரனும்(aagamam viLaith akila lOkamu nodippaLavil aasaiyodu sutrum athi vEgak kaaranum): He is the speedy person who willingly circumambulated in a trice the entire universe filled with vedas/scriptures;

ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி அநுபூதி அடைவித்ததொரு பார்வைக்காரனும்(aaNava azhukkadaiyum aaviyai viLakki anuboothi adaiviththadhoru paarvaik kaaranum): He is the One with unparalleled glance who suffused my soul with the radiance of Knowledge and gave me the divine experience; பார்வைக் காரன் ... ஒப்பற்ற அருள் நோக்கை உடையவன்

ஆடலைவு பட்ட அமரர் நாடது பிழைக்க அமராவதி புரக்கும் அடல் ஆண்மைக் காரனும்(aadalaivupattu amarar naadadhu pizhaikka amaraavathi purakkum adal aaNmaik kaaranum): He is a strong and virile warrior who revived the Devas who were wobbling and wandering all over, and protected Amaravati; ஆடலைவு பட்ட ... தடுமாற்றமும் அலைச்சலும் அடைந்த;

ஆடக விசித்ர கன கோபுர முகப்பில் அருணாபுரியில் நிற்கும் அடையாளக் காரனும்(aadaga vichithra gana gOpura mugappil aruNaapuriyil niRkum adaiyaaLak kaaranum): He stands like a landmark on the exquisite and renowned golden Gopura at Tiruvannamalai; ஆடக (aadaga): golden; அடையாளக் காரன் ... பிரத்யட்ச மூர்த்தி;

ஆயிர முகத்து நதி பாலனும் அகத்தடிமையானவர் தொடுத்த கவி மாலைக்காரனும்(aayira mugaththu nadhi baalanum agath adimai aanavar thoduththa kavi maalaik kaaranum): He is Gangeya, the son of the thousand-pronged river Ganges, and He wears the garland of the songs of praise strung by the loving devotees who have subordinated themselves to Him; அகத்தடிமையானவர் தொடுத்த கவி மாலைக்காரனும்... உள்ளத்துள்ளே மெய்யன்பு பூண்ட அடியார்கள் இயற்றிய சொல் மாலைகளை அன்புடன் புனைந்திருப்பவனும்;

ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசும் ஆதி முடிவற்ற திருநாமக் காரனும் ( aaRumuga viththaganum aaRirubuyath arasum aadhi mudivatra thiru naamak kaaranum): He is the six-faced personification of Knowledge and He is the King with twelve shoulders and has a fame/reputation that has no beginning and end (timeless);

யான் எனது எனச்சருவும் ஈன சமயத்தெவரும் யாரும் உணர் தற்கரிய நேர்மைக் காரனும்(yaan enadhena saruvum eena samayath evarum yaarum uNadhaR kariya nErmaik kaaranum): He is the subtle True mystic that cannot be known by egoistic people belonging to low religions who boast 'I and mine' and fight;

யாது நிலை அற்றலையும் ஏழு பிறவிக்கடலை ஏறவிடு நற்கருணை ஓடக் காரனும்(yaadhu nilai atralaiyum Ezhu piRavik kadalai ERavidu naRkaruNai Odak kaaranum ): He is the kind Boatman who paddles all the seven kinds of beings across the bhava sagara (animals which crawl, walk, swim and fly, humans, celestials and ghosts);

ஏரகம் இடைக்கழி சிராமலை திருப்பழநி ஏரணி செருத்தணியில் வாசக் காரனும் (Eragam idaikkazhi siraamalai thirup pazhani EraNi seruth thaNiyil vaasak kaaranum): He resides at Swamimalai, Idaikkazhi, Tiruchchirappalli, Pazhani and Tiruththani;

ஏழையின் இரட்டை வினை யாயது ஒர் உடல் சிறை இராமல் விடுவித்தருள் நியாயக்காரனும் (Ezhaiyin irattai vinai aayadhor udar siRai iraamal viduvithth aruL niyaayak kaaranum): You are the Justice who released me, a poor man, from the prison of my body which is the result of the twin karmas (good and bad);

யாமளை மணக்கு முக சாமளை மணிக்குயிலை ஆய் என அழைத்துருகு நேயக் காரனும்(yaamaLai maNakku muka saamaLai maNik kuyilai aayena azhaith urugu nEyak kaaranum): You beckon the blue-black and divinely fragrant and cuckoo-like Parvati devi lovingly as ' My mother';

ஏதமற நிச்சய மனோலய விளக்கொளியும் யாக முநிவர்க்குரிய காவற் காரனும் (EdhamaRa nichchaya manOlaya viLakkoLiyum yaaga munivarkkuriya kaavaR kaaranum): He is the lamp that flashes the light of Knowledge that gives tranquility to the mind so that all blemishes are removed and the mind becomes free from doubts;

ஈரிரு மருப்புடைய சோனைமத வெற்பில் வரும் யானை அளவில் துவளும் ஆசைக் காரனும்(eeriru marup pudaiya sOnai madha veRpi varum yaanai aLavil thuvaLum aasaik kaaranum): He loves Thaivayaanai who promenades on the mountainous elephant Airavata that has four tusks and which rains the 'musth water' flowing down its cheeks; சோனை மத வெற்பில் வரும் ... பெரு மழை போல் பெருகி வரும் மதநீர் கொட்டுகின்ற மலை போன்ற ஐராவதத்தில் பவனி வரும்

ஏடு அவிழ் கடப்ப மலர் கூதளம் முடிக்கும் இளையோனும் அறிவிற் பெரிய மேன்மைக் காரனும்(Edavizh kadappa malar koothaLa mudikkum iLaiyOnum aRiviR periya mEnmaik kaaranum): He is the younger brother who wears the garlands of blooming kadappa and koothalam flowers, and He has supreme intellect;

வானவர் பொருட்டு மகவானது பொருட்டு மலர் வாவியில் உதித்த முக மாயக் காரனும் (vaanavar poruttu magavaanadhu poruttu malar vaaviyil udhiththa muga maayak kaaranum): He incarnated as an exquisitely beautiful child in the Saravana Lake for the sake of the devas and Indra; மகவான்(magavaan): Indra; முக மாயக் காரன் ... அற்புதமான அழகு படைத்தவன்

வாரணபதிக்கு உதவு நாரணன் உவக்கு மருமானும் அயனை கறுவு கோபக் காரனும் (vaaraNa pathik kudhavu naaraNan uvakku marumaanum ayanaik kaRuvu kObak kaaranum): He helped Indra; He is the nephew who gladdens the mind of his uncle Vishnu; He is the angry person who scolded Brahma (for not knowing the meaning of Pranava mantra); வாரணபதி(vaaraNapathi): leader of the elepant (Airavata), Indra; வாரணபதி(vaaraNapathi): can also mean leader of the elephants Gajendra; வாரணபதிக்கு உதவு நாரணன்(vaaraNa pathikku udhavu naaraNan): Vishnu who helped Gajendra;

வாழியென நித்த மறவாது பரவிற் சரண வாரிசம் அளிக்கும் உபகாரக் காரனும் ( vaazhi ena niththa maRavaadhu paraviR charaNa vaarijam aLikkum upakaarak kaaranum): He is the altruist who bestows His lotus feet to those who sing wishing Him and His name a long life.(vazhi...vazhi)

மாடமதில் சுற்றிய த்ரிகூட கிரியில் கதிர்செய் மாநகரியில் கடவுள் ஆயக் காரனும்( maadamadhil sutriya thrikoota giriyiR kadhir sey maanagariyiR kadavuL aayak kaaranum): He is the tollman seated at TiruKutralam which abounds in tall houses and forts and at Kadirkamam; கதிர்செய் மாநகரி(kathirsey maanagari): The city of Kadirkamam;
'Ayam' means tool. Murugan seizes the three malas of his devotees as toll and sends them to Sivaloka; 'ஆயம்' என்றால் பழந்தமிழில் 'சுங்க வரி' எனப் பொருள்படும். தன்னை நோக்கி வரும் அடியவர்களின் அரும் பகைகளையும் மும்மலங்களையும் சுங்கவரியாக வசூலித்து அவர்களை சிவலோகத்திற்கு கொண்டு விடுபவர் இந்த ஆயக்காரர்.

வாள் எயிறு அது உற்ற பகுவாய் தொறு நெருப்புமிழும் வாசுகி எடுத்துதறும் வாசிக்காரனும்(vaaL eyiRadhutra paguvaay thoRu nerupumizhum vaasuki eduth udhaRum vaasik kaaranum): He has as His vehicle the horse-like peacock, which shakes the serpent Vasuki with shiny and sword-like sharp teeth, and which emits fire from its open mouths; வாசிக்காரன்..... வாசிக் குதிரையான மயிலை வாகனமாக உடையவன்

வாளகிரியைத் தனது தாளில் இடியப் பொருது வாகைபுனை குக்குட பதாகைக் காரனும்(vaaLagiriyai thanathu thaaLil idiyap porudhu vaagai punai kukkuda pathagaik kaaranum): He kicked the Chakravala mountain with his feet and has the victorious rooster on his flag;

மாசு இல் உயிருக்கு உயிரும் மாசு இல் உணர்வுக்கு உணர்வும் வானில் அணுவுக்கு அணு உபாயக் காரனும்(maasil uyiruk uyirum aasil uNarvuk uNarvum vaanil aNuvuk aNu upaayak kaaranum): He is the Life Consciousness (super consciousness) permeating the life-forces of blemishless people and the Consciousness underlying their minds, and He is the particle inside the smallest particles in the space; குற்றமற்ற ஜீவாத்மாக்களுக்குள் உயிர்ப்பு சக்தியாக இருப்பவரும், கெடுதல் அற்ற உள்ளத்துள் உள் ஒளியாக இருப்பவரும், ஆகாயத்தில் காணப்படும் அணுக்களுக்குள் சிறிய அணுவாய் இருக்கும் பெரிய தந்திரக்காரனும்;

வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்பட மகா அடவியில் நிற்பதொர் சகாயக் காரனும்(vaadhanai thavirththa guru naathanum veLippada maha ataviyil niRpadhOr sahaayak kaaranum): He is my Mentor/Preceptor who erased the anguish caused by my birth; He is the kind-hearted helper who appeared in a big forest; (When arunagirinathar was going through a forest enroute to Kathirkamam, Murugan Himself guided him.)

மீனவனு மிக்க புலவோரும் உறை பொற்பலகை மீதமர் தமிழ் த்ரய விநோதக் காரனும்(meenavanu mikkka pulavOrum uRai poR palagai meedhamar thamizh thraya vinOdhak kaaranum): You are the Ugra Pandiya who had a fish as insignia on his flag; You are Rudrasanman (who officiated in the debate between the Sangam poets) who is seated on the board amongst intelligent Sangam poets and who is unrivalled and proficient in all the three aspects of Tamil art (Iyal, isai and nadagam). This line has reference to the story in Tiruvilaiyaadal of Rudra Sanman, an incarnation of Murugan, who settled the dispute between the member poets in the great Sangam assembly at Madurai.

வேரி மது மத்த மதி தாதகி கடுக்கைபுனை வேணியர் துதிப்பதொரு கேள்விக் காரனும்(vEri madhumaththa madhi thaadhagi kadukkai punai vENiyar thudhippadhoru kELvik kaaranum): He is the scholar who is worshipped by Shiva who wears fragrant and honey-filled oomaththam flower, Moon, Mandarai and KonRai flower on His tresses; வேரி(vEri): fragrant; தாதகி(thaathaki): aatti/mandarai flower (bauhinia racemosa); மத்த(maththa): Oomaththam (dhatura) flower; கடுக்கை(kadukkai): konRai flower;

வேலை துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டு உருவ வேலை உற விட்ட தனி வேலைக் காரனும்(vElai thugaL pattu malai sooran udal patturuva vElai uRavitta thani vElaik kaaranum): He is an unrivalled worker/craftsman who aimed the javelin/vel so as to break asunder the sea, destroy Suran and the Krauncha mountain; வேலை (vElai): sea;

மீனுலவு கிர்த்திகை குமாரனும் நினைக்குமவர் வீடு பெற வைத்தருள் உதாரக் காரனும் (meenulavu kirththigaik kumaaranu ninaikkum avar veedu peRavaith aruL udhaarak kaaranum): He is the son of Krittika girls who have the form of a star; He is the benevolent god who proffers liberation (mukti) to those who meditate on Him;

மேனை அரிவைக்குரிய பேரனும் மதித்த திறல் வீரனும் அரக்கர் குல சூறைக் காரனும்(mEnai arivaik kuriya pEranu madhiththa thiRal veeranum arakkar kula sooRaik kaaranum): He is the grandson of the woman Menai; He is the fearless hero who is admired by everyone; He is the cyclone which annihilated the entire race/clan of the asuras; மேனை(mEnai): The wife of Himavan (the king of Himalayas;

வேதியர் வெறுக்கையும் அநாதி பர வஸ்துவும் விசாகனும் விகற்ப வெகு ரூபக் காரனும் (vEdhiyar veRukkaiyum anaadhi para vasthuvum visaaganum vigaRpa vegu roopak kaaranum ): He is the wealth of the Brahmins; He has no beginning and is the trascendent and omnipresent substance in the Cosmos; He belongs to the Visakha star; He has assumed several forms (such as a hunter, as an old man, etc.,); வெறுக்கை(veRukkai): wealth;

வேடுவர் புனத்தில் உரு மாறி முனி சொற்படி வியாகுல மனத்தினொடு போம்விற் காரனும்(vEduvar punaththil uru maaRi muni soRpadi viyaakula manaththinodu pOmviR kaaranum): He changes his forms several times in the millet field and on the advice of Sage Narada, holds the bow of Knowledge and goes (to the hunters to seek Valli's hands) with a worried heart;

மேவிய புனத்து இதணில் ஓவியம் எனத் திகழும் மேதகு குறத்தி திரு வேளைக் காரனே(mEviya punaththi thaNil Oviyam enath thigazhu mEdhagu kuRaththi thiru vELaik kaaranE.): The One who played several divine games with the excellent gypsy girl Valli who looks pretty as a picture n the millet fields on the mountain slopes: He is the one who is mentioned in all the lines above.
Motionless like a picture indicates that Valli is absorbed in meditation. When the soul is in perfect harmony with the divine, God will Himself come and take the devotee into His fold.

No comments:

Post a Comment

எழுபிறவி — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song muttup pattu ( எழுபிறவி ) in English, click the underlined hyperlink. முன...

Popular Posts