165. ஐங்கரனை


ராகம் : மனோலயம்தாளம்: ஆதி கண்ட நடை (20)
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினைவருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமனமருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழியருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெயருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமையஅருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொருளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

Learn The Song



Manolayam (Janyam of 15th Mela MayamalavaGowlai) By Chitra Nagaraj

Arohanam: S R₁ M₁ P D₁ Ṡ    Avarohanam: Ṡ N₃ D₁ P M₁ R₁ S

Paraphrase

The only way to experience bliss is to still the undulating waves of thought and firmly direct the mind to become established in the stable state of the True Self.

ஐங்கரனை ஒத்த மனம் (ainkaranai oththa manam) : With a mind that is as fast as GanEshA, ஐங்கரன்(aingaran) : God with five hands (GanEshA), ஐந்து திருக்கரங்களையுடைய விநாயகப் பெருமானைப் போல் எல்லாக் காரியங்களுக்கும் முற்படுகின்ற மனமானது; ஐங்கரனை யொத்த மனம் – ஐங்கரன் (விநாயகர்) ஐந்து கரங்களால் ஐம்பெருந் தொழில்களை ஆற்றுவதுபோல், மனம் ஐம்புலன்களால் உலக விவகாரத்தை நடத்துகின்றது. இருந்த இடத்திலேயே உலகத்தைச் சுற்றிவந்தார் என்றும் கொள்ளலாம். ஐங்கரன் (யானை) இடையறாது அசைந்து கொண்டே இருப்பதுபோல் மனம் அசைந்து கொண்டு, எல்லாச் செயல்களுக்கும் முற்படுகின்றது மனம்.

ஐம்புலம் அகற்றி (aimpulam agatri) : I should gain mastery over the five senses of perception, ஐம்புலம் அகற்றி – ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி;

வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே (vaLar andhi pagal atra ninaivu aruLvAyE) : and attain the turiya state of meditation where there is no demarcation/distinction between the day and the night.

அம் புவி தனக்கு உள் வளர் செம் தமிழ் (ambuvi thanakkuL vaLar senthamizh) : In beautiful Tamil, which greatly flourishes in this world, அம் புவி(am buvi) : beautiful world/earth;

வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே (vazhuththi yunai anbodu thudhikka manam aruLvAyE) : I wish to worship You and sing Your praise with love (in chaste Tamil). Please grant me such a mind.

தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற (thangiya thavaththu uNarvu thand(hu)adimai muththi peRa) : You should bless me with the requisite meditating mind so that this humble slave of Yours may attain salvation. தங்கிய தவத்து உணர்வு = நிலைபெற்ற தவநிலை உணர்வு;

சந்திர வெளிக்கு வழி அருள்வாயே (chandhira veLikku vazhi aruLvAyE) : and transcend the cosmos of the moon (through yOgA). சந்திர வெளிக்கு வழி (chandira veLikku vazhi) : literally, path to the lunar space that is beyond the six chakras; சந்திர வெளிக்கு = சந்திரவொளி வீசுகின்ற மேலைவெளிக்கு; ஆறாதாரமுங்கடந்து, பிரமந்திரமுந் தாண்டி சந்திர மண்டலமாகிய அமுத மண்டலத்துடன் கூடிய மேலை வெளி.

தண்டிகை கனப் பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே (thaNdigai ganappavusu eN disai madhikka vaLar sambrama vidhaththudanE aruLvAyE) : (I request You to give me) a palanquin, dignity and respect from people in all the eight directions, with increasing awe and admiration. தண்டிகை (thandigai) : palanquin; கனப் பவுசு (gana pavusu) : prestige and respect;

மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் எனு(ம்) உற்ற மனம் (mangaiyar sugaththai vegu ingidhamenutra manam) : My mind, which has immersed itself in the sensual gratifications offered by women,

உன்றனை நினைத்து அமைய அருள்வாயே (unRanai ninaith thamaiya aruLvAyE) : should be made to concentrate only on You and to remain there in peace.

மண்டலிகர் ரப் பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே (maNdaligar rap pagalum vandhu suba rakshai puri vandhaNaiya budhdhiyinai aruLvAyE) : Day and night, state leaders come to me seeking ways of ensuring their welfare. You have to give me the necessary wisdom to guide them. மண்டலிகர் (maNdaligar) : state officials; நாட்டு அதிகாரிகள், அரசர்கள் யாவரும் இரவும் பகலும் நன்மை அடைய வேண்டி என்னை வந்து அணுகவல்ல நல் அறிவினை எனக்கு அருள்வாயாக.
மண்டலீகர் என்பவர் நாட்டின் பகுதியையாளும் அதிகாரி. பல்லவர் காலத்தில் இராஷ்டிரங்களை ‘மண்டலீகர்’ என்பவர் ஆண்டு வந்தனர். ரப்பகலும் = ராப்பகலும்

கொங்கில் உயிர் பெற்று வளர் தென் கரையில் (kongiluyir petru vaLar then karaiyil) : In Kongunadu, a miracle happened when a dead boy regained his life (after he was devoured by a crocodile); தென் கரை (then karai) : refers to Avinasi on the southern shore; தென் கரையில் = தென் கரை நாட்டுத் திருப்புக்கொளியூர் அவி நாசியில் உள்ள;

அப்பர் அருள் கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே (appararuL koNdu udalutra poruL aruLvAyE) : through the compassion of SivA , when the body also grew; teach me the secret of this miracle. சிவபெருமான் அருள்பெற்று (முதலை உண்ட பாலனது) உடலில் மீண்டும் உயிர் பொருந்திய ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக.

ஐந்து வயது அந்தணச் சிறுவர்கள் இருவர் அவிநாசி சிவாலயத்தில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்த போது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று. மற்றொருவன் அதன் வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்தான். இது நிகழ்ந்து சில ஆண்டுகளுக்கு பிறகு உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர். அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனம் வருந்தினர். அச்சமயம் அத்தலத்துக்கு வருகை தந்த சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் வீட்டில் அழுகை ஒலி கேட்பதை அறிந்து காரணம் என்ன என வினவினார் நடந்தது கேட்டு, உள்ளம் இரங்கி, ஏரியினிடம் போய் பதிகம் பாடவே முதலை வாயினின்றும் பாலன் வெளிப்பட்டனன். அத்திருவருட் செல்வத்தைத் தருமாறு அருணகிரியார் வேண்டுகின்றார்.

The story of how Saint Sundarar brought back to life an eight-year-old boy who had died a few years ago. This is one of the stories that appears in the Thiruvilaiyadal Puranam.

When Sundarar was going to the temple at ThiruPukkoliyur (now known as Avinaasi), near present-day coimbatore, he heard two discordant notes coming from opposite houses – one echoing joy and the other sorrow. When Sundarar enquired, he found out that each of the houses had a son. The two sons had been friends and had gone to the river together. But while one boy was swallowed by a crocodile, the other boy had survived. And after three years, the parents of the surviving boy were happily conducting Upanayanam ( Thread ceremony) for their son, while the parents of the dead were wailing over their departed son. Hearing this story, Sundarar went to the place where the boy was swallowed by the elephant. He sang a pathigam ( poem in praise of a deity consisting generally of ten stanzas ), worshiping Lord Shiva to resurrect the dead boy. Before he could complete the verse, the crocodile came to the banks and spat out the boy wholly. Not only that the boy had come to no harm – indeed he was even more grown-up than when last seen.

குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு (kunjara mugaRkiLaiya kandhanena vetri peRu) : You, the younger brother of the elephant-headed GanEshA, famous as the victorious Kanda; குஞ்சரம் (kunjaram) : elephant;

கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே. (kongaNa girikkuL vaLar perumALE.) : You prosper in Kongkanagiri, Oh Great One! 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொங்கணகிரி கந்தன் கோயில் திருப்பூர் அருகில் சிறு குன்றின் மீது சித்தர்களில் ஒருவரான கொங்கணரால் நிர்மாணிக்கப்பட்டது.

Yoga, Meditation and Consciousness

To experience the ultimate Truth, mere study of books does not help; we must focus on direct experience, which is transcendental in nature that is beyond the senses and the intellect. This experience is not an imaginary experience of a visionary dreamer. The third eye or the eye of wisdom and intuition(Jnana Chakshus) is opened in the experiencer. This can happen only when all desires, wrath, greed, pride, egoism and hatred are eradicated.

The higher state of consciousness is different from the waking (jagruti), sleeping (sushupti) and dreaming (swapna) states. Here, we know we "are" but we don't know "where" we are. This knowledge that I "am," but I don't know "where" I am or "what" I am, is a state of thoughtless awareness called Turya, where the constant rising and falling of thoughts in the mind comes to an end. The attention becomes still like a lake without any ripples on it and a deep inner peace begins to dawn upon our awareness. When there are no ripples on the water of a lake, its surface becomes almost invisible as it reflects the beauty of the landscape around it. In the same way, the still mind reflects the beauty of the creation and melts into the peace of the divine. In the state of thoughtless awareness we think neither of the past nor of the future and are entirely in the present moment. We are no longer bombarded by the meaningless mental chatter that assails our awareness. There is neither darkness nor void in this experience. It is all light. There is neither sound nor touch nor form here. All dualities vanish here. There is neither meditator nor the meditated, neither pleasure nor pain, and neither day nor night.

சந்திர வெளிக்கு வழி - the path to the moon-space/intuition

In yogic reference, a nadi (not an anatomical structure) can be thought of as a channel through which the energies of the physical body, the subtle body and the causal body are said to flow. The nadis are said to connect at special points of intensity called chakras and are associated with the subtle body of a man.

According to traditional texts, there are more than 72,000 nadis of which three are very important: ida, pingala, and sushumna. The sushumna runs from the base of the spine to the crown of the head, passing through each of the seven chakras in its course. It is the path to enlightenment by acting as a channel through which kundalini shakti rises up from its origin at the muladhara (where it lies in a dormant or sleeping state) chakra to its true home at the sahasrara (thousandfold) chakra at the crown of the head.

One can think of the Ida and Pingala nadis as referring to the two hemispheres of the brain.

Ida is associated with feminine attributes and the moon and corresponds to the left hand side of the body and the right hand side of the brain. Importantly, it is responsible for extra-sensory perception and intuitive mind.

Pingala is associated with masculine attributes and the sun, and corresponds to the right hand side of the body and the left hand side of the brain. It is associated with rationality.

The above concepts are beautifully explained in Moolamkilar

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே