87. மூலங்கிளர்
ராகம்: பெஹாக் | திச்ர த்ரிபுடை |
மூலங்கிள ரோருரு வாய்நடு | |
நாலங்குல மேனடு வேரிடை | |
மூள்பிங்கலை நாடியொ டாடிய | முதல்வேர்கள் |
மூணும்பிர காசம தாயொரு | |
சூலம்பெற வோடிய வாயுவை | |
மூலந்திகழ் தூண்வழி யேவள | விடவோடிப் |
பாலங்கிள ராறுசி காரமொ | |
டாருஞ்சுட ராடுப ராபர | |
பாதம்பெற ஞானச தாசிவ | மதின்மேவிப் |
பாடுந்தொனி நாதமு நூபுர | |
மாடுங்கழ லோசையி லேபரி | |
வாகும்படி யேயடி யேனையும் | அருள்வாயே |
சூலங்கலை மான்மழு வோர்துடி | |
தேவன்தலை யோடும ராவிரி | |
தோடுங்குழை சேர்பர னார்தரு | முருகோனே |
சூரன்கர மார்சிலை வாளணி | |
தோளுந்தலை தூள்பட வேஅவர் | |
சூளுங்கெட வேல்விடு சேவக | மயில்வீரா |
காலின்கழ லோசையு நூபுர | |
வார்வெண்டைய வோசையு மேயுக | |
காலங்களி னோசைய தாநட | மிடுவோனே |
கானங்கலை மான்மக ளார்தமை | |
நாணங்கெட வேயணை வேள்பிர | |
காசம்பழ னாபுரி மேவிய | பெருமாளே. |
naal angulamE nadu vEridai
mooL pingalai naadiyodaadiya mudhal vErgaL
mooNum pirakaasamadhaay oru
soolam peRa Odiya vaayuvai
moolan thigazh thooN vazhiyE aLavida Odi
paalang kiLar aaRu sikaaramod
aarunj sudaraadu paraapara
paadhampeRa nyaana sadhaasivam adhinmEvi
paadun dhoni naadhamu noopuram
aadung kazhal OsaiyilE pari
vaagumpadiyE adiyEnaiyum aruLvaayE
soolan kalai maan mazhu Orthudi
vEdhan thalai yOdum araaviri
thOdung kuzhai sEr paranaar tharu murugOnE
sooran karamaar silai vaaL aNi
thOLunthalai thooL padavE avar
sooLung keda vEl vidu sEvaka mayil veeraa
kaalin kazhal Osaiyu noopura
vaarveNdaiya OsaiyumE yuga
kaalangaLin Osaiyadhaa nadamiduvOnE
kaanang kalai maan magaLaar thamai
naaNang kedavE aNai vEL pira
kaasam pazhanaapuri mEviya perumaaLE.
Learn The Song
Raga Behag (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S G3 M1 P N3 D2 N3 S Avarohanam: S N3 D2 P M2 G3 M1 G3 R2 SParaphrase
96 தத்துவங்கள் கொண்ட மனிதன் உடலில் முக்கியமானவை மூச்சுக் காற்றை இயக்கும் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா எனப்படும் ஆறு சக்கரங்களான ஆறு ஆதாரத் தலங்கள். நம் உடலில் இருக்கும் 72000 நாடி நரம்புகளை இயக்குவது இந்த ஆறு தலங்கள் தான். நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும் உயிர்சக்தியே குண்டலினி ஆகும். யோகிகள் பயிற்சிகளால் மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை வெப்பத்தைத் தூண்டி குண்டலினிச் சக்தியை ஒவ்வொரு சக்கரங்களையும் தாண்டி சகஸ்ராரத்தை அடைந்து சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயணப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன.
மூலம் கிளர் ஓர் உருவாய் (mUlam kiLar Or uruvAy nadu) : a form arising from the base of spine or center of Muladhara chakra,
mooladhara is located at the base of the spine between the anus and the genitals;
மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஓர் உருவமாக,
நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை மூள் பிங்கலை நாடி ஒடு ஆடிய முதல் வேர்கள் மூணும் (nAlu angulamE nadu vEr idai mUL pingalai nAdiyodu Adiya muthal vErkaL mUNum) : four inches above the center of the body, the flame mixes with the three nadis or subtle nerves of susumna, idakala and pingala; உடலுக்கு மத்திய ஸ்தானத்திலிருந்து நான்கு அங்குல அளவின் மேல், சுழுமுனை, இடை கலை, பிங்கலை என்னும் நாடிகளுடன் கலந்து, முதல் வேர்களாகிய இந்த மூன்று நாடிகளும் நடு வேர் (nadu vEr) : sushumna nadi;
பிரகாசம் அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை (piragAsam athAy oru sUlam peRa Odiya vAyuvai ) : that gives rise to an intense energy in the form of light passing through like a burning trident when the life-giving PrANa VAyu (oxygen) (ஒவ்வொரு நாடியின் புறமும்) பிரகாசமான ஒளியைப் பரப்பி, ஒப்பற்ற சூலாயுதம் போல விசைகொண்டு ஓடுகின்ற பிராண வாயுவை
மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி (mUlam thigazh thUN vazhiyE aLavida Odi) : flows in measured quantity along the Sushumna nerve in the spinal cord, முதுகுத் தண்டிலுள்ள சுழு முனை வழியில் அளவுப்படி சஞ்சரிக்கச் செய்து, (பின்னர் அது) மூலம் திகழ் தூண் (mUlam thigazh thUN) : Spinal cord;
பாலம் கிளர் ஆறு சிகாரம் ஒடு ஆரும் (pAlam kiLar ARu sigAramodu Arum) : and (then it culminates) in the sixth chakrA on the forehead called AjnA chakra that is associated with the letter "Si" (denoting SivA) நெற்றியில் விளங்கும் ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை நிலையில் (சிவனைக் குறிக்கும்) சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிற்கும்
சுடர் ஆடு பராபர பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி (sudar Adu parApara pAtham peRa njAna sathAsivam athin mEvi) : filling all the chakrAs with light of the Supreme to attain whose hallowed feet one has to realize the SadAsiva state of Pure Knowledge; ஒளி வீசுகின்ற பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து,
பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே (pAdum thoni nAthamum nUpuram Adum kazhal OsaiyilE) : when the divine music (the universal sound) is heard along with the jingling of Your anklets, (அவ்விடத்தில் கேட்கப்படும்) பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும்
பரிவாகும் படியே அடியனையும் அருள்வாயே (parivAgum padiyE adiyEnaiyum aruLvAyE ) : with which (the divine sound)I should stay in love with Your kind blessings! அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள் புரிவாயாக.
சூலம் கலை மான் மழு ஓர் துடி தேவன் தலையோடும் அரா விரி தோடு குழை சேர் பரனார் தரும் முருகோனே (sUlam kalai mAn mazhu Or thudi vEtham thalai Odum arA viri thOdum kuzhai sEr paranAr tharu murugOnE) : Oh MurugA! You are the Son of Lord SivA Who holds in His hands a Trident, a deer, a pick-axe, a unique hand-drum, a skull of one of the heads of BrahmA, and Who also wears serpents, elegant studs and large ear-hoops as jewels! திரிசூலம், பிறைமதி, மான், மழு, ஒப்பற்ற உடுக்கை, பிரமகபாலம், படம் விரித்தாடுகின்ற பாம்பு, தோடு, குண்டலம் முதலியவை அணிந்து கொண்டுள்ள சிவபெருமான் தந்தருளிய முருகக் கடவுளே! கலை = சந்திரன், தோடு = பெண்களுடைய காதணி. குழை = ஆண்களுடைய காதணி. சிவபெருமான் பாதிவடிவு உமையுடன் கூடியிருப்பதால் இரண்டையும் கூறினார்.
சூரன் கரம் மார் சிலை வாள் அணி தோளும் தலை தூள் படவே அவர் சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா (sUran karam mAr silai vAL aNi thOLum thalai thUL padavE avar sULum keda vEl vidu sEvaga mayil veerA ) : You are the brave warrior riding the peacock who smashed the arms, chest, bow, sword, strong shoulders and the head of the demon SUran and his vow, சிலை (silai) : bow; சூளும் கெட (sooLum keda) : breaking the pledge (of not releasing the devas from the prison);
காலின் கழல் ஓசையும் நூபுரம் வார் வெண்டைய உக காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே (kAlin kazhal Osaiyum nUpura vAr veNdaiya OsaiyumE yuga kAlanggaLin OsaiyathA nadam iduvOnE ) : The jingling sounds from Your anklets and other ornaments that arise when you dance are like the thunderous sounds heard at the end of yugas;
கானம் கலை மான் மகளார் தமை நாணம் கெடவே அணை வேள் (kAnam kalai mAn magaLAr thamai nANam kedavE aNai vEL) : You unabashedly embraced VaLLi, the daughter of the deer that came to the VaLLimalai forest, Oh Master! காட்டில் வாழ்கின்ற ஒளிர்கின்ற மான் வயிற்றில் பிறந்த வள்ளி நாயகியாரை, அவளது அஞ்ஞானம் கெட்டொழியுமாறு அணைத்த குமாரக் கடவுளே! கானம் (kanam ) : forest;
பிரகாசம் பழனா புரி மேவிய பெருமாளே. (piragAsam pazha nApuri mEviya perumALE.) : You have Your abode in the dazzling town of Pazhani, Oh Great One!
Comments
Post a Comment