194. சரவண ஜாதா


ராகம் : ஆனந்தபைரவிஅங்கதாளம் (6½)
2 + 2 + 1½ + 1
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநமஅபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநமஜகதீச
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநமஉமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனுமடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகியபெருமாளே.

Learn The Song


Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

சரவண ஜாதா நமோநம கருணை அதீதா நமோநம (saravaNajAthA namOnama karuNai atheethA namOnama) : Oh Lord, Born in a reed-pond and Compassion Limitless! I bow to thee!! I bow to thee!! நாணல் பொய்கையிலே உதித்தவனே போற்றி போற்றி! அளவற்ற கருணை உடையவனே போற்றி போற்றி! அதீதம் = எட்டாதது; அளவற்றது

சததள பாதா நமோநம (sathadhaLa pAdhA namOnama) : Your Feet like the hundred petalled-lotus, I bow to You, I bow to You;

அபிராம தருணக தீரா நமோநம (abirAma tharuNaka dheerA namOnama) : Handsome Lord! Youthful and Valorous! I bow to You, I bow to You; பேரழகு கொண்டவனே! தருண அக தீரா = இளமையும் தைரியமும் உடையவனே/ /தருண கதீரா = இளைய ஜோதி சொரூபனே, கதீரா = கதிரொளியை உடையவனே

நிருப அமர் வீரா நமோநம சமதள ஊரா நமோநம (nirupamar veerA namOnama samadhaLa vUrA namOnama) : Oh, King of the celestial warriors! I bow to You, I bow to You; You belong to ThiruppOrUr, where troops stand ready for combat, I bow to You, I bow to You; தலைமைச் சேனாதிபதியாகிய போர்வீரனே, போற்றி போற்றி, சமர்தள — போர்க்களத்துக்கு உரிய—(சேனைகள் நிறைந்த) திருப்போரூரில் கொலுவீற்றிருப்பவனே போற்றி போற்றி! நிருப (नृप) = அரசன், தலைவன்;

ஜகதீச பரம சொரூபா நமோநம (jagadheesa parama sorUpA namOnama) : Lord of the entire universe! You have the form of the Ultimate, Supreme and Eternal Object! I bow to You, I bow to You; பரமசொரூபா = பரம ஞானத்தின் வடிவினனே;

சுரர்பதி பூபா நமோநம (surarpathi bUpA namOnama) : You are the King of IndrA, I bow to You, I bow to You;

பரிமள நீபா நமோநம (parimaLa neepA namOnama) : You wear the fragrant kadamba garland, I bow to You, I bow to You;

உமை காளி பகவதி பாலா நமோநம (umai kALi bagavathi bAlA namOnama) : You are the son of PArvathi, known as UmA, KALi and Bhagawathi, I bow to You, I bow to You;

இகபர மூலா நமோநம (igapara mUlA namOnama) : Root cause of this life and the life after death! I bow to You, I bow to You!!

பவுருஷ/பௌருஷ சீலா நமோநம அருள்தாராய் (pavurusha seelA namOnama aruL thArAy) : Virile and Virtuous, I bow to You, I bow to You; You must now show Your grace to me! ஆண்மையும் குணநலன்களும் உடையவனே, போற்றி போற்றி,

இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற (iraviyum AkAsa bUmiyum viraviya thULERa) : The sun, the sky and the earth were filled with intermixed dust particles;

வானவர் எவர்களும் ஈடேற (vAnavar evargaLum eedERa ) : all the DEvAs were rescued;

ஏழ்கடல் முறையோ என்று இடர்பட (Ezhkadal muRaiyOvendru idarpada) : the seven seas screamed asking if it was fair for them to suffer,

மாமேரு பூதரம் இடிபடவேதான் (mAmEru bUtharam idipada vEdhA) : the great mountain MEru (KailAsh) was pulverized; பூதரம் (bootharam) : mountain;

நிசாசரர் இகல் கெட மாவேக நீ(டு) அயில் விடுவோனே (nisAcharar igal keda mAvEga needu ayil viduvOnE ) : and the demons, roaming about at night, were debilitated when You threw Your long spear at great speed! இகல் (igal) : enmity, rivalry, strength;

மரகத ஆகார ஆயனும் (marakatha AkAra Ayanum ) : Vishnu, with emerald green complexion, ஆயன் (Ayan) : shepherd; here, Krishna / Vishnu;

இரணிய ஆகார வேதனும் (iraNiya AkAra vEdhanum) : BrahmA, with golden colour, இரணிய (iraNiya) : golden;

வசுவெனும் ஆகார ஈசனும் அடி பேண மயிலுறை வாழ்வே (vasuvenum AkAra eesanum adi pENa mayiluRai vAzhvE) : and SivA, with the complexion of fire, together worship Your feet when You mount Your peacock! வசு (vasu) : fire;

விநாயக மலையுறை வேலா (vinAyaka malaiyuRai vElA) : Oh VElA, You reside at VinAyagamalai (PillaiyArpatti)!

மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே. (maheedhara vanacharar AdhAra mAgiya perumALE.) : You are the supporter of all the hunters of the forests living on the mountains, Oh Great One! மகீதரன் (mageetharan) : one who lives in the mountain;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே