205. மனத்திரை


ராகம் : முகாரி தாளம்: ஆதி
மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடைதடுமாறி
வருத்த முந்தர தாய்மனை யாள்மக
வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதினநகையாட
எனைக்க டந்திடு பாசமு மேகொடு
சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபயமுறவேதான்
இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
இணைப்ப தந்தர வேமயில் மீதினில்வரவேணும்
கனத்த செந்தமி ழால்நினை யேதின
நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
கருத்தி ருந்துறை வாயென தாருயிர்துணையாகக்
கடற்ச லந்தனி லேயொளி சூரனை
யுடற்ப குந்திரு கூறென வேயது
கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில்விடும்வேலா
அனத்த னுங்கம லாலய மீதுறை
திருக்க லந்திடு மாலடி நேடிய
அரற்க ரும்பொருள் தானுரை கூறியகுமரேசா
அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
யருட்செ றிந்தவி நாசியுள் மேவியபெருமாளே.

Learn The Song



Raga Mukhari (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N2 D2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R2 S


Paraphrase

மன(ம்) திரைந்து எழும் ஈளையும் மேலிட (mana(m) thirainthu ezhum eeLaiyum mElida ) : Making my heart shrink in discomfort, mucus and phlegm rise up to my throat; மனம் திரைந்து = மனம் சுருங்கி வேதனைப்படும்படி;

கறுத்த குஞ்சியுமே நரையாய் இட (kaRuththa kunjiyumE naraiyAy ida ) : my erstwhile black hair has turned gray;

மலர்க் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி (malark kaN aNdu iruLAkiyumE nadai thadumARi) : my lotus eyes are lopsided with dim and blurred vision; my erect gait has become tottery;

வருத்தமும் தர தாய் மனையாள் மக(வு) வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும் (varuththamum thara thAy manaiyAL maka(vu) veRuththida am kiLaiyOrudan yAvarum) : to add to my grief, my mother, wife, children and all the relatives

வசைக்கு உறும் சொ(ல்)லினால் மிகவே தினம் நகையாட (vasaikku uRum co(l)linAl mikavE thinam nakaiyAda) : have resorted to derisive language making me the laughing stock;

எனைக் கடந்திடு பாசமுமே கொ(ண்)டு சினத்து வந்து எதிர் சூலமுமே கையில் எடுத்து எறிந்து (enaik kadanthidu pAsamumE ko(N)du sinaththu vanthu ethir sUlamumE kaiyil eduththu eRinthu ) : Wielding the rope (of attachment) to overpower me, confronting me with rage, throwing at me the trident held in hand,

அழல் வாய்விடவே பயம் உறவே தான் (azhal vAyvidavE payam uRavE thAn ) : and terrifying me with flames leaping from their mouth,

இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர் (izhukka vanthidu thUtharkaL Anavar ) : the messengers of Yaman (God of Death) have arrived to take my life away;

பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய இணைப் பதம் தரவே மயில் மீதினில் வரவேணும் ( pidikku munpu unathu thAL malarAkiya iNaip patham tharavE mayil meethinil varavENum) : before they could catch me, You must come mounted on the peacock to grant me Your two hallowed feet!

கனத்த செம் தமிழால் நினையே தின(ம்) நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள் (ganaththa sem thamizhAl ninaiyE thina(m) ninaikkavum tharuvAy unathu Ar aruL) : Choosing rich and lofty words of the beautiful Tamil language, I must think in praise of You daily with Your kind blessings!

கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக (karuththu irunthu uRaivAy enathu Aruyir thuNaiyAga) : You must dwell in my thoughts as my life companion!

கடல் சலம் தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து (kadal salam thanilE oLi sUranai udal pagunthu) : The body of the demon SUran who hid himself (in the disguise of a mango tree) under the sea was split

இரு கூறெனவே அது கதித்து எழுந்து ( iru kURenavE athu kathiththu ezhunthu) : and it came up to the surface in two parts;

ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா (oru cEvalum mA mayil vidum vElA) : and became the unique rooster and peacock; You wielded such powerful Spear, Oh Lord!

அனத்தனும் கமலாலயம் மீது உறை திருக் கலந்திடும் மால் அடி நேடிய (anaththanum kamalAlayam meethu uRai thiruk kalanthidum mAl adi nEdiya) : BrahmA and Vishnu, who is the consort of Lakshmi seated on the lotus, searched everywhere in vain for the feet of – அனத்தன் (anaththan) : endless; Brahma whose vehicle is annam or swan; திரு = லக்ஷ்மி; நேடுதல் : தேடுதல் = எண்ணுதல்; விரும்புதல்;

அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா (araRku arum poruL thAn urai kURiya kumarEsA) : Lord SivA; You interpreted the meaning of the rare PraNava ManthrA to Him, Oh Lord Kumara!

அறத்தையும் தருவோர் கன பூசுரர் (aRaththaiyum tharuvOr gana bUsurar) : People who preach moral principles and learned VEdic scholars, பூசுரர் (bUsurar) : brahmins or priests;

நினைத் தினம் தொழுவார் அமராய் புரி (ninaith thinam thozhuvAr amarAy puri) : like to worship You everyday sitting around You in this place; அமராய் புரி (amaraay puri) : to be seated;

அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே. ( aruL seRinthu avinAsiyuL mEviya perumALE.) : You bestow Your grace on them in plenty and are seated with relish at AvinAsi, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே