13. அருணமணி மேவு
ராகம் : புன்னாக வராளி தாளம் : அங்க தாளம் (24) 2½+3½+2½+3½+2½+3½+1½+1½+ 3 அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் தனமோதி அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் கிதமாகி இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி லிழைகலைய மாத ரார்வழி யின்புற் றன்புற் றழியாநீள் இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன் இணையடிகள் பாடி வாழஎ னெஞ்சிற் செஞ்சொற் றருவாயே