278. கார்ச்சார்
ராகம் : சிம்மேந்திர மத்யமம் திச்ர த்ரிபுடை கார்ச்சார்குழ லார்விழி யாரயி லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் மயலாலே காழ்க்காதல தாமன மேமிக வார்க்காமுக னாயுறு சாதக மாப்பாதக னாமடி யேனைநி னருளாலே பார்ப்பாயலை யோவடி யாரொடு சேர்ப்பாயலை யோவுன தாரருள் கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு குமரேசா பார்ப்பாவல ரோதுசொ லால்முது நீர்ப்பாரினில் மீறிய கீரரை யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ லருள்வாயே