Posts

Showing posts with the label சுத்த வெளி

சைவ சித்தாந்தம் : அறிமுகம் (பகுதி 1)

சைவ சித்தாந்தம் என்றால் என்ன? சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றது சைவ சமயம். தன்னுள் இருக்கும் சிவத்தை அறிந்து மலநீக்கம் பெற்று சிவனடியை சேரும் வழி காட்டுவதே சைவ சித்தாந்ததின் நோக்கம். சித்தாந்தம் என்பது ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவு. சைவ சித்தாந்தம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரால் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது. சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் உள்ளனர். சமயக்குரவராகிய நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். சந்தான குரவர்கள் மடங்கள் ஸ்தாபித்து வழிமுறை பாடங்கள் வகுத்தார்கள். அந்த நால்வரில் முதலாமவர் மெய்கண்டார்; அவரின் சீடர் அருள் நந்தி சிவம்; அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். கடைசியாக உமாபதி சிவம். சைவ சமயத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். மெய்கண்டார் கிபி 13 ஆம் நூற்றா...