31. தந்த பசி
ராகம் : ஆரபி தாளம் : ஆதி தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ரெனவேசார் மைந்தர் மனைவியர் கடும்பு கடனுதவு மந்த வரிசைமொழி பகர்கேடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட மிசையேறி