65. கதியை விலக்கு
ராகம் : தேஷ் அங்க தாளம் 2+1½ +2 (5½) கதியைவி லக்கு மா தர்கள் புதியஇ ரத்ன பூஷண கனதன வெற்பு மேல்மிகு மயலான கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய கனதன மொத்த மேனியு முகமாறும் அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும் அரவபி டித்த தோகையு முலகேழும் அதிரவ ரற்று கோழியும் அடியவர்வ ழுத்தி வாழ்வுறும் அபிநவ பத்ம பாதமு மறவேனே