Posts

Showing posts with the label surudhi mudi mOnam

74. சுருதிமுடி மோனம்

ராகம் : நாட்டை குறிஞ்சி தாளம் : சதுச்ர த்ருவம் கண்ட நடை சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய உணராதே கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் வினைதானே கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி கருதசுழ மாமிந்த மட்டைதனை யானஉன தருள்தாராய்