93. அவாமருவி


ராகம்: ஜோன்புரிஅங்க தாளம் (18)
2½+2½+2½+2½+ 2 + 2 + 1 + 3
அவாமருவி னாவசுதை காணுமட வாரெனும
வார்கனலில் வாழ்வென்றுணராதே
அரானுகர வாதையுறு தேரைகதி நாடுமறி
வாகியுள மால்கொண்டதனாலே
சிவாயவெனு நாமமொரு காலுநினை யாததிமி
ராகரனை வாவென்றருள்வாயே
திரோதமல மாறுமடி யார்களரு மாதவர்தி
யாமுறு பாதந்தருவாயே
உவாவினிய கானுவினி லாவுமயில் வாகனமு
லாசமுட னேறுங்கழலோனே
உலாவுதய பாநுசத கோடியுரு வானவொளி
வாகுமயில் வேலங்கையிலோனே
துவாதசபு யாசலஷ டாநநவ ராசிவசு
தாஎயினர் மானன்புடையோனே
சுராதிபதி மாலயனு மாலொடுச லாமிடுசு
வாமிமலை வாழும்பெருமாளே

avaa maruvinaa vasudhai kaaNu madavaarenum
avaarkanalil vaazhven druNaraadhE

araa nugara vaadhaiyuRu thErai gathi naadum
aRivaagiyuLa maal koN dadhanaalE

sivaayavenu naamam orukaalu ninaiyaadha
thimiraakaranai vaaven draruLvaayE

thirOdha malamaaRum adiyaargaL arumaathavar
dhiyaanamuRu paadhan tharuvaayE

uvaaviniya kaanuvi nilaavu mayil vaaganam
ulaasamudan ERung kazhalOnE

ulaa udhaya baanu sathakOti uruvaana
oLivaagu mayil vElang kaiyilOnE

dhuvaadhasa buyaachala shadaanana varaa siva
sivasuthaa eyinar maanan budaiyOnE

suraadhipathi maal ayanu maalodu salaamidu
suvaamimalai vaazhum perumaaLE.


Learn the Song


Jonpuri (janya rāga of Natabhairavi, shadava sampoorna raga)

Arohanam: S R2 M₁ P D1 N2 Ṡ    Avarohanam: Ṡ N2 D1 P M1 G2 R2 S


Dr. Charulata Mani's Isai PayaNam


Paraphrase

Life is transient. Yet we go after temporary pleasures without realising the danger and disaster that is going to strike us next minute. மரணம் என்ற பாம்பு நம்மை பிடித்துக் கொண்டிருக்கிறது. நாம் என்று பிறந்தோமோ அன்றே மரணம் நம்மை பிடித்துக் கொள்கிறது. அந்த இடைப் பட்ட நேரத்தில் என்னவெல்லாம் கனவு காண்கிறோம். எது உண்மை இன்பம் என்று அறியாது போலி இன்பங்களைக் கண்டு ஏமாறும் மனதையும் அதனால் ஏற்படும் துயரங்களையும் காட்டும் அருமையான பாட்டு.

அவா மருவு இ(ன்)னா வசுதை காணும் மடவார் எனும் (avA maruvu inA vasudhai kANum madavAr enum) : Desire such as the craving for earth (property/wealth) and for women leads to suffering and sorrow; அவா மருவு இ(ன்)னா வசுதை = இ(ன்)னா மருவு வசுதை அவா = துன்பத்தை தரும் மண்ணாசை என்கின்ற; வசுதை (vasudhai ) : earth;

அவார் கனலில் வாழ்வு என்று உணராதே (avAr kanalil vAzhvu endru uNarAdhE) : and is akin to getting roasted in fire. But without realizing this, அவர்களுடன் வாழ்வு நெருப்பின் மீது நடத்தும் துன்ப வாழ்வு என்று உணராமல்,

அரா நுகர வாதை உறு தேரை கதி நாடும் அறிவு ஆகி (arA nugara vAdhaiyuRu thErai gathi nAdum aRivAgi) : I think and act like a toad caught in the mouth of a snake! பாம்பு விழுங்குவதால் வேதனை உறும் தேரையின் கதியை அடைய விரும்பும் அசடனாய்; பாம்பின் வாயிலுள்ள தேரையின் மகிழ்ச்சி போல் யமன் பாசக் கயிற்றில் அகப்பட இருக்கும் உயிர்கள் சிறு இன்பங்களைக் கண்டு மயங்கி அறிவிழந்து கேடுறுகின்றன. அரா (araa) snake;

உளம் மால் கொண்டு அதனாலே (uLam mAl koNdu adhanAlE) : and my mind misguided by desire

சிவாய எனு நாமம் ஒரு காலு நினையாத திமிர ஆகரனை வா என்று அருள்வாயே (sivAya enum nAmam orukAlum ninaiyAdha thimirAkaranai vA endru aruLvAyE) : I am a dark minded person who cannot contemplate on Siva even for an instant. Will You still kindly welcome me to come and rejoice at Your feet?

திரோத மலம் ஆறும் அடியார்கள் அரு மாதவர் (thirOdha malamARum adiyArgaL aru mAthavar) : Your devotees who have rid themselves of the 'thirotha malam' and are free from the fault of forgetting You, as well as the sages performing rare penances;
The blemish of 'tirothanam' conceals our 'true nature' or awareness and creates nescience (aviveka) in individuals and push us into the realm of Maya‘s worldly existence. The highly evolved sages are rid of this blemish and have dispelled Maya; having realized their true nature, they have obtained the Anugraha of Liberation.
திரோதம் (thirOdham) : forgetting; மலம்(malam ) : mistake, sin; திரோத மலம் ஆறும் அடியார்கள் (thirOdha malam ARum adiyArgaL) : திரோத மலம் எனும் குற்றம் நீங்கிய மெய்யடியார்கள்;
திரோதானம் என்றால் மறைப்பது. ஆணவ மலத்துட்பட்டு அறியாமையில் அழுந்தி இருக்கும் உயிர் இறைவனது திரோதான சத்தியால் செலுத்தப்பட்டு மாயை கன்மங்களைப் பொருந்தி உலக நுகர்ச்சியில் அழுந்தி இருக்கிறது. திரோதான சக்தி என்பது இறைவனது அருளாகிய சக்தியே. உயிர்களுடன் கூடி நிற்கும் இறைவனுடைய அருளாற்றல், நோய்வாய்ப்படும் கைக்குழந்தைக்கு தாய் பக்குவமாக மருந்து கொடுப்பது போல், மெய்யறிவை ஒரே காலத்தில் அளிக்காமல், உலக நுகர்ச்சியாகிய பால் வழியாக மெய்யுணர்வைச் சிறிது சிறிதாகப் புகட்டி, அதன் அறியாமையைப் போக்கி, உண்மையைப் படிப்படியாக உணரும்படி செய்து, கர்ம வினை தீர்த்து உயிர்கள் முக்தி நிலையை அளிக்கிறது.

தியானம் உறு பாதம் தருவாயே (dhiyAnam uRu pAdham tharuvAyE ) : constantly meditate upon Your holy feet; do grant me thy feet.

உவா இனிய கானுவில் நிலாவு மயில் வாகனம் (uvAvu iniya kAnuvil nilAvu mayil vAganam) : Your vehicle is the youthful peacock, roaming in the delightful forest; உவா (uvaa) : young; இனிய கான் (iniya kAN ) : pleasurable or enjoyable forest;

உலாசமுடன் ஏறும் கழலோனே (ulAsamudan ERum kazhalOnE ) : and You mount it with pleasure, displaying victorious anklets on Your feet.
உவா can also mean elephant; So the above 2 lines can also be translated as 'Your vehicles are the (pinimukha) elephant as well as the peacock roaming in the pleasant forests;'
(பிணி முகம் எனப்படும்) யானையையும் இனிய காட்டில் உலாவும் மயிலையும் வாகனமாகக் கொண்டு உல்லாசத்துடன் அவை மீது ஏறும் திருவடியை உடையவனே.

உலா உதய பானு சத கோடி உருவான (ulA udhaya bAnu sathakOdi uruvAna) : Dazzling like a million suns rising in the sky

ஒளி வாகும் அயில் வேல் அம் கையிலோனே (oLivAgu mayil vEl am kaiyilOnE) : is the brilliant sharp spear on Your hand!

துவாதச புய அசல ஷட் ஆநந வரா சிவ சுதா (dhuvAdhasa buyAchala shadAnana varA siva suthA ) : You have twelve shoulders looking like mountains! You have six faces! You are great! You are the son of Lord SivA!

எயினர் மான் அன்பு உடையோனே (eyinar mAn anbu udaiyOnE) : You are the lover of the deer-like VaLLi, the damsel of the hunter-tribe! எயினர் (eyinar) : hunter;

சுர அதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு (surAdhipathi mAl ayanum mAlodu salAmidu) : IndrA, the King of DEvAs, Vishnu and BrahmA salute You!

சுவாமி மலை வாழும் பெருமாளே. ( suvAmimalai vAzhum perumALE.) : You have Your abode at SwAmimalai, Oh Great One!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே