94. ஆனாத பிருதிவி

ராகம்: நாட்டை குறிஞ்சிதாளம்: (8½)
2½ + 1½ + 1 + 1½ + 2
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய விருளுமற் றேகி பவமென
வாகாச பரமசிற் சோதி பரையையடைந்துளாமே
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
யோகீச ரெவருமெட் டாத பரதுரி
யாதீத மகளமெப் போது முதயமநந்தமோகம்
வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
மாலீச ரெனுமவற் கேது விபுலமசங்கையால்நீள்
மாளாத தனிசமுற் றாய தரியநி
ராதார முலைவில்சற் சோதி நிருபமு
மாறாத சுகவெளத் தாணு வுடனினிதென்றுசேர்வேன்
நானாவி தகருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி லங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
சீராமன் மருகமைக் காவில் பரிமள
நாவீசு வயலியக் கீசர் குமரகடம்பவேலா
கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
மானொடு மகிழ்கருத் தாகி மருடரு
காதாடு முனதுகட் பாண மெனதுடைநெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட் டாவி யுயவருள்
பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறைதம்பிரானே.

aanaadha pirudhivip paasa nigaLamum
maamaaya iruLu matrEgi bavamena
aakaasa parama siRjOthi paraiyai adaindhuLaamE

aaRaaRin adhikam agraayam anudhinam
yOgeesar evarum ettaadha para thuri
yaatheetham akaLam eppOdhum udhayam anantha mOgam

vaanaadhi sakala visthaara vibavaram
lOkaadhi mudivu mey bOdha malarayan
maaleesar enum avaRkEdhu vipulam asangaiyaalneeL

maaLaadha thanisam utraaya dhariya
niraadhaara mulaivil saRjOthi nirupamu
maaRaadha sukaveLa thaaNu udan ini dhendrusErvEn

naanaa vidha karuvi sEnai vagai vagai
soozh pOdhu pirabala soorar kodunedu
naavaay sel kadal adaiththERi nilaimai ilangai saaya

naalaaRu maNi mudi paavi thanaiyadu
seeraaman maruga maikkaavil parimaLa
naaveesu vayali akkeesar kumara kadamba vElaa

kaanaaLum eyinar naR jaathi vaLar kuRa
maanOdu magizh karuththaagi marudaru
kaadhaadum unadhu katbaaNam enadhudai nenju paaydhal

kaaNaadhu mamadhai vittaavi uya aruL
paaraay enurai vegup preethi iLaiyava
kaavEri vadakarai saami malai uRai thambiraanE.

Learn The Song



Raga Nattai Kurinji (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 G3 M1 N2 D2 N2 P D2 N2 S    Avarohanam: S N2 D2 M1 G3 M1 P G3 R2 S

Paraphrase

ஆனாத பிருதிவி பாச நிகளமும் (AnAdha pirudhivip pAsa nigaLamum: The inescapable bonds of attachment to earthly possessions; நிகளம் = சங்கிலி; ஆனாத = நீங்குதல் இல்லாத;

மா மாய இருளும் அற்று (mAmAya iruLum atru: the deep darkness of maya or illusion - ridding (myself) of both; மா மாய இருள் = பெரிய மயக்கத்தைச் செய்யும் ஆணவ இருள்

ஏகி பவம் என (Egi bavamena) : I should merge as though one, சீவனும் சிவனும் இரண்டற்ற தன்மையடைந்து நிற்கும் நிலை பெற்று,

ஆகாச பரம சிற் சோதி பரையை அடைந்து உளாமே (AkAsa parama siRjOthi paraiyai adaindhuLAmE) : after reaching Parashakti, the light of knowledge spread wide like the sky, and shun all thoughts; ஆகாயம் போல் எங்கும் பரந்துள்ள பெரிய ஞான சோதியாய் விளங்கும் பராசக்தியை அடைந்து, நினைப்பின்றி நின்று; பரை (parai) : Parashakthi; ஆகாச பரம ( AkAsa parama ) : wide as the sky; சிற் சோதி (siRjothi ) : the light of knowledge; உள்ளுதல் (ulluthal) : to think, நினைத்தல்; உளாமே (uLAmE) : without thoughts;

ஆனாத பிருதிவி ....அடைந்து உளாமே : விடுதற்கரிய மண்ணாசை என்னும் விலங்கும், மஹாமாய அஞ்ஞான இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட நிலை என்று சொல்லும்படி, ஆகாச பரம அறிவுச் சோதியான பராசக்தியை அடைந்து, நினைப்பை விட்டு

The following words/phrases describe the essence of Shivam: ஆறாறின் அதிகம் அக்ராயம் (ARARin adhikam agrAyam) : Beyond the thirty-six tenets and presiding over them, அக்ரம் = முதன்மை; அக்ராய = முதன்மையானதாய்,

அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பரதுரிய அதீதம் அகளம் ( yOgeesar evarum ettAdha para thuriya atheetham akaLam) : unreachable for the yogis who meditate every day, beyond the supreme ThuriyA stage, and formless, பர துரிய அதீதம் = பெரிய துரிய நிலைக்கு அப்பாற்பட்டதாய்; அகள = உருவம் இல்லாததாய்

எப்போதும் உதயம் அநந்த மோகம் (eppOdhum udhayam anantha mOgam) : forever rising (all-pervading and omnipresent) and endlessly enchanting, அநந்த மோகம் = அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய்,

வானாதி சகல விஸ்த்தார விபவரம் (vAnAdhi sakala visthAra vibavaram) : The constituent life force in all the substances such as the sky in the wide universe; வான் முதலான சகல விரிவுள்ள வாழ்வுப் பொருளாய்; விபவம் = பெருமை, உயர்ந்த செல்வம், வாழ்வுப் பொருள்;

லோகாதி முடிவு மெய்ப் போத (lOkAdhi mudivu mey bOdha) : the beginning and the end of the universe, the True Knowledge. மெய் போத = உண்மை அறிவாய்

மலரயன் மால் ஈசர் எனும் அவர்க்கு ஏது விபுலம் (malarayan mAleesar enum avaRkku Ethu vipulam) : with the distinction of being the source of Brahma, Vishnu and Shiva; தாமரையில் வாழும் பிரமன், திருமால், ருத்திரன் என்ற மும்மூர்த்திகளுக்கும் மூல காரணமாயிருக்கும் பெருமை கொண்டதாய் ; ஏது (Ethu ) : (hetu in Sanskrit) origin, root cause; விபுலம் (vipulam) : விரிவு, அகலம், பெருமை;;

அசங்கையால் நீள் மாளாத தன் நிசம் உற்றாயது (asangaiyAlneeL mALAdha thanisam utrAyadhu) : Doubtlessly long, immortal and the only Truth, ஐயம் இன்றி நீண்டு, இறத்தலின்றி தானே மெய்த்தன்மை உற்றதாய்,

அரிய நிராதாரம் (ariya nirAdhAram) : rare and independent

உலைவு இல் சற் சோதி நிருபமும் (ulaivil saRjOthi nirupamum) : indestructible, luminous and incomparable/formless, உலைவு இல் = அழிவற்றது; நிருபம் = உவமையில்லாதது;அல்லது ரூபம்/உருவம் இல்லாதது.

மாறாத சுகவெ(ள்)ளத் தாணுவுடன் இனிது என்று சேர்வேன் (mARAdha sukaveLa thANu-udan inidhu endru sErvEn) : changeless and a perennial flood of bliss - when will I unite with it? சிறிது அசைவின்றி நிலை பெற்றிருப்பவன் தாணு

அனுதினம் .....என்று சேர்வேன்
முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய், முற்பட்டதாய், என்றும் யோகீசர் எவரும் எட்டாததான மேலான துரிய நிலைக்கு மேற்பட்ட நிலையினதாய், உருவமில்லாததாய், எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய், வான் முதலான சகல விரிவுள்ள வாழ்வுப்பொருளாய், லோகத்தின் ஆதியாயும் முடிவாயும் நிற்பதாய், உண்மை அறிவாய், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன், திருமால், ஈசன் என்பவர்க்கு மூலகாரணமாய் நிற்கும் பெருமை கொண்டதாய், அச்சம் இல்லாது நீடித்து, இறத்தல் இல்லாது தானே மெய்யாம் தன்மை உற்றதாய், அரியதாய், சார்பொன்றும் இல்லாததாய், அழிவிலாததாய், நிலையான ஜோதியாய், ரூபம் அற்றதாய், மாறுதல் இல்லாததான சுக வெள்ள நிலைப்பொருளாம் சிவத்துடன் நான் இனி என்று சேர்வேன் !

நானாவித கருவிச் சேனை வகைவகை சூழ்போது (nAnA vidha karuvi sEnai vagai vagai sUzh pOdhu ) : with all kinds of weapons wielded by various battalions surrounding them

பிரபலச் சூரர் கொடு நெடு நாவாய் செல் கடலடைத்து ஏறி (pirabala sUrar kodu nedu nAvAy sel kadal adaiththu ERi) : and along with the famous warriors, passing through the sea in which the ships sail; நா = படகு செலுத்தும் துடுப்பின் அகன்றப் பகுதி, blade of an oar; நாவாய் = பாய்மரக் கப்பல், மரக்கலம்; நெடு நாவாய் செல் --- வளைந்துள்ள பெரிய கப்பல்கள் செல்கின்ற,

இலங்கை நிலைமை சாய ( ilangai nilaimai sAya) : causing the condition of Lanka to drop low

நாலாறு மணிமுடிப் பாவி தனை அடு சீராமன் மருக (nAlARu maNi mudi pAvi thanaiyadu seerAman maruga ) : by killing Ravana with ten crowns - the Sri Rama. You are His nephew!

மைக் காவில் பரிமள நா வீசு வயலி (maikkAvil parimaLa nAveesu vayali) : in the dark groves of VayalUr, there is a pleasant fragrance wafting through the neighborhood; இருண்ட சோலையில் நறுமணம் அயலில்/சுற்றிலும் வீசுகின்ற வயலூர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள

அக்கீசர் குமர கடம்ப வேலா (akkeesar kumara kadamba vElA) : You are the son of Lord Agneeswar, the presiding deity at Vayalur (as described in the above line), wearing the garland of Kadamba flowers and holding the spear; அக்கீசர் = அக்னீஸ்வரர்;

கானாளும் எயினர் தன் சாதி வளர் குறமானொடு மகிழ் கருத்தாகி (kAnALum eyinar naR jAthi vaLar kuRa mAnOdu magizh karuththAgi) : You desired to rejoice in the company of VaLLi, that damsel of KuRavAs, who grew up among the hunters who rule the forests;

மருள் தரு காதாடும் உனது கண் பாணம் எனதுடை நெஞ்சுபாய்தல் காணாது (maruL tharu kAdhAdum unadhu kaN bANam enadhudai nenju pAydhal kANAdhu ) : (and said to her) "The scary arrows from your eyes that stretch up to your ears are piercing my heart; and you are indifferent to my suffering,

மமதைவிட்டு ஆவி உய்ய அருள் பாராய் (mamadhai vittAvi uya aruL pArAy ) : I pray that you give up your pride and spare my life graciously!" செருக்கினை விடுத்து, என்னுடைய உயிர் உய்ய அருளுவாயாக,

எனுரை வெகுப் ப்ரீதி இளையவ (enurai vegu preethi iLaiyava) : You said this to Valli with abundant love, Oh Young One!

காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே (kAvEri vadakarai sAmi malai uRai thambirAnE) : You chose as Your abode, SwAmimalai, on the northern banks of river KAvEri, Oh unique Lord!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே