114. அமைவுற்றடைய


ராகம்: காபிஆதி திச்ர நடை (12)
அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக்கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக்கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப்புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட்புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப்பெருமாளே.

amaiutru adaiya pasi utravarukku
amudhai pagirthaR kisaiyAdhE
adaiyap poruL kaik kiLamaik kenavaith
tharuL thappi madhath thayarAdhE

thamar sutri azhap paRai kotti ida
saman nettuyirai kodupOgum
sariraththinai niRkum enak karudhi
thaLar utrozhiya kadavEnO

imayaththu mayiR korupakkam aLith
thavaruk kisaiyap pugalvOnE
iraNaththinil etruvarai kazhuguk
kirai ittidu vikrama vElA

samaya silukit tavarai thavaRi
thavam utra aruL puganAdum
sadu padhma muka guha pukka gana
thaNiyiR kumara perumALE.

Learn The Song



Raga Kapi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 D2 N2 P M1 G2 R2 S


Paraphrase

அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று அமுதைப் பகிர்தற்கு இசையாதே (adaiya pasi utravarukku amaiutru amudhai pagirthaRku isaiyAdhE) : Instead of willingly sharing food with a calm mind with people who are hunger-stricken, அடையப் பசி = முற்றிய பசி;

அடையப் பொருள் இளமைக்கென கை வைத்து (adaiyap poruL iLamaikku ena kai vaiththu) : I wanted to enjoy my youth and stocked all my wealth, holding it tightly in my fist.

அருள் தப்பி மதத்து அயராதே (aruL thappi madhaththu ayarAdhE) : I strayed away from the righteous path and become arrogant. To escape such a plight, மதத்து அயராதே = அகங்காரத்தினால் தளர்ச்சி அடையாமல்;

தமர் சுற்றி அழப் பறை கொட்டியிட (thamar sutri azhap paRai kotti ida) : When all my relatives gather crying around my body and the funeral drums beat;

சமன் நெட்டுயிரைக் கொடு போகும் (saman nettuyiraik kodupOgum) : and when Death-God (Yaman) begins to take my life on its final journey, நெட்டு = நெடுந்தூரம்;

சரிரத்தினை நிற்குமெனக் கருதி தளர்வுற்று ஒழியக் கடவேனோ (sariraththinai niRkum enak karudhi thaLar utrozhiya kadavEnO) : should I delude myself that this body of mine, which is sure to deteriorate and degenerate, is going to last for ever!

இமயத்து மயிற்கு ஒரு பக்கமளித்தவருக்கு இசையப் புகல்வோனே (imayaththu mayiR korupakkam aLiththavarukku isaiyap pugalvOnE ) : You explained, as Gyana Sambandhar, the essence of scriptures to Lord Shiva (or sang Padhigams on Lord Shiva ) who gave one side of His body to PArvathi, the peahen born to HimavAn! இமயத்து மயிற்கு = பரவத ராஜனிடம் வளர்ந்த மயில் போன்ற பார்வதிக்கு ஒரு பக்கம் அளித்தவருக்கு = தனது இடது பாகத்தைத் தந்தவராகிய சிவ பெருமானுக்கு இசையப் புகல்வோனே = அவர் மனம் உவக்க உபதேசித்தவனே (அல்லது ஞானசம்பந்தராகப் பதிகங்கள் சொன்னவனே).

இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு இரையிட்டிடு விக்ரம வேலா (iraNaththinil etruvarai kazhugukkirai ittidu vikrama vElA) : You feed the parts of the bodies of those attacking You in the battlefield to vultures, Oh valorous One with the Great Spear! எற்றுவரை = எதிர்ப்பவரை;

சமயச் சிலுகு இட்டவரை தவறி ( samaya silugu ittavarai thavaRi ) : I want to avoid the company of all those who quarrel in the name of religion; மதப் போராட்டம் செய்பவர்களின்றும் விலகி; சிலுகு (silugu) : Strife, quarrel, துன்பம், குழப்பம், கூச்சல் ;

தவம் முற்ற அருள் புக நாடும் (thavam utra aruL puganAdum ) : I want to meditate upon You and enter Your domain of grace, தவம் முழுமை அடைய திருவருளில் புக விரும்பும் அடியேன் நாடுகின்ற

சடுபத்ம முகக் குக ( sadu padhma muka guha) : Your six Great faces looking like lotus, Oh Guha, தாமரை போன்ற ஆறுமுகங்களை உடையவரே! இதய குகையில் உறைபவரே!

புக்க கனத் தணியிற் குமரப் பெருமாளே. (pukka gana thaNiyiR kumara perumALE.) : (After marrying VaLLi), You entered Your abode, the great place called ThiruththaNigai, Oh KumarA, You Great One! வள்ளியை மணந்த பின் அடைந்து அமர்ந்துள்ள பெருமை மிக்க திருத்தணிகைக் குமார மூர்த்தியே! புக்க ( pukka ) : be seated; கனத் தணி (gana thaNi) : distinguished Thiruththani;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே