122. எலுப்பு நாடி


ராகம்: ரீதி கௌளைஅங்க தாளம் 7½
1½ +2 + 2 +2
எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ சதிகாரர்
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறுசமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர்கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ணுழல்வேனோ
ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
யுடைத்து வானவர் சித்தர்து தித்திடவிடும்வேலா
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன்மருகோனே
வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா
வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றியபெருமாளே

Learn The Song



Raga Reethigowlai (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S G2 R2 G2 M1 N2 N2 S    Avarohanam: S N2 D2 M1 G2 M1 P M1 G2 R2 S


Paraphrase

The poet talks about the mundaneness of everyday life and its emptiness.

எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு இருக்கும் வீடு (eluppu nAdika Lappodi raththamodu azhukku mULaikaL maccodu kodpuzhu irukkum veedu) : This house, that is called the body, containing bones, veins, water, blood, filthy substances, brains and worthless worms; மச்சு (macchu) : faulty, worthless;

அதில் எத்தனை தத்துவ சதிகாரர் (athil eththanai thaththuva sathikArar) : In this house, how many flouters of ethical principles live!

இறப்பர் சூது அகவர் சுதர் அப் பதி உழப்பர் (iRappar sUthu akavar suthar appathi uzhappar) : immoral and scheming ones, treacherous people, those who deceive the entire town with their tall talks, சூது அகவர் சுதர் (soothu akavar chuthar ) : cunning/scheming people, சூதான உள்ளத்தையுடைய மக்கள்; இறத்தல் = கடத்தல், நெறிகடந்து செல்லுதல்; இறப்பர் = நியாத்தைக் கடந்து அநீதியைச் செய்பவர்; சூது அகவர் சுதர் : சூதான உள்ளத்தையுடைய மக்கள், அப் பதி உழப்பர் : அந்த வீட்டில் வாழ்ந்துகொண்டு (பேச்சின் திறமையால்) தீமையை நன்மைபோல் பேசி மழுப்புகின்றவர்கள்; பதி : ஊர்;

பூமி தரிப்பர் பிறப்புடன் இருப்பர் (bUmi tharippar piRappudan iruppar) : they take birth on the earth and never progress even a bit since their birth;

வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம் கெலிப்பர் (veedukaL katti alattuRu samusAram kelippar,) : people who toil around building several houses boasting about their success; கெலிப்பர் (gelippar) : boast about success;

மால்வலை பட்டுறு துட்டர்கள் (mAlvalai pattuRu thuttarkaL) : those wicked ones caught in the web of lust;

அழிப்பர் மாதவமுற்று நினைக்கிலர் (azhippar mAdhava mutRu ninaikkilar ) : those sinners who do not realize the necessity of penance;

கெடுப்பர் யாரையும் மித்திர குத்திரர் (keduppar yAraiyum miththira kuththarar ) : those who corrupt everyone and are capable of ditching even their own friends; மித்திர குத்திரர்( mitthira kutthirar) : being treacherous to one's friends;

கொலைகாரர் கிருத்தர் கோளகர் பெற்று திரிக் களவரிப்பர் சூடகர் (kolaikArar kiruththar kOLakar petRuthirik kaLavarippar sUdakar) : those thieves who roam about in the company of murderers, arrogant ones, tale bearers, and hot-headed people; கிருத்தர் ( kiruththar ) : arrogant; கோளகர் ( koLagar ) : those who back-bite; களவு ( kaLavu ) : stealing, robbing; சூடகர் (soodagar) : short-tempered, hot headed; பெற்று திரிக் களவரிப்பர் : (முன் கூறிய) இவர்களுடன் சேர்ந்து திரிந்து திருட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள்,

எத்தனை வெம் பிணி கெலிக்கும் வீடு ( eththanai veppiNi kelikkum veedu ) : How many diseases that are housed in this body and get conquered! இத்தகைய துர்க்குணங்கள் குடியிருக்க, அவைகளுடன் போராடி வெற்றி பெற உழலும் இத்தகைய வீடாகிய இந்தவுடம்பை

அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ (athai naththiye duththu ivaNuzhalvEnO) : Should I willingly enter such a house that strives to conquer (all those people and diseases) and roam around miserably in this world? நான் ஆசைப்பட்டு எடுத்து இந்த உலகில் அலைந்து திரிவேனோ? இவண்( ivaN ) : in this world; நத்தி (naththi) : willingly, with pleasure;

ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் (olippal pErikai ugra amarkkaLam) : To the loud beating of several drums in the background of the fierce battlefield,

எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி உடைத்து வானவர் சித்தர் துதித்தட விடும் வேலா (ethirththa cUrarai vetti iruL giri udaiththu iruL vAnavar siththar thuthiththida vidumvElA:) : You hewed the demons who combatted against you, shattered the dark delusive mount Krouncha and the celestials and sidhdhAs venerated You when You wielded the Spear!

(You are the nephew of Lord Vishnu who)
உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து (uluththa rAvaNa naiccira mitRida vathaiththu) : as Rama, severed the heads of the lusful Ravana and killed him,

மாபலியை சிறை வைத்தவன் (mA baliyai siRai vaiththavan) : as Vamana, imprisoned Mahabali,

உலக்கை ராவி நடு கடல் விட்டவன் மருகோனே (ulakkai rAvinadukkadal vittavan marugOnE) : and as Krishna, scraped the steel pestle into powder and mixed it in mid-sea; You are that Lord Vishnu's nephew!

வலிக்க வேதனை குட்டி (valikka vEthanai kutti) : You knocked the heads of Lord Brahma causing Him pain;

நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குரு நாதா (nadiththu oru sekaththai yeenavaL pacchai niRaththiyai maNaththa thAthaipa raprama rukkaruL gurunAthA) : You are the preceptor or teacher to Lord Shiva who married Devi Parvathi, the dancing Goddess who gave birth to the entire universe and is green complexioned; (ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு) நடனம் செய்து ஒப்பற்ற உலகங்களை ஈன்ற பச்சை நிறமுடைய பார்வதியம்மையை மணந்த பரபிரமரான தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசித்தருளிய குருநாதரே!

வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு குறத்தியாரை மயக்கி அணைத்து (vanaththil vAzhuma yiRkulam oththidu kuRaththiyArai mayakki aNaiththu) : You hugged VaLLi, the damsel of the KuravAs who resembles the peacock and lives in the VaLLImalai forest, after enticing her;

உள மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே. (uLamakizhcci yOduthi ruththaNi patRiya perumALE) : and with immense happiness, You sought ThiruththaNigai as Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே