159. தேனுந்து முக்கனி


ராகம் : தோடிதாளம்: கண்டசாபு (2½)
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
சீரும் பழித்தசிவமருளூறத்
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
நாதம் பரப்பிரமவொளிமீதே
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்கபதமருள்வாயே
வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்
மாலும் பிழைக்கஅலைவிடமாள
வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
மானின் கரத்தனருள்முருகோனே
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண் கடப்பமலரணிமார்பா
தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
சாலுங் குறத்திமகிழ்பெருமாளே.

Learn The Song



Raga Thodi (8th mela)

Arohanam: S R1 G2 M1 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Paraphrase

சுருக்க உரை: சிறந்த தேன், உயர்ந்த மா, பலா, கதலி என்ற முக்கனிகள், பால், செங்கருப்பஞ்சாறு, இளநீர் முதலியவைகளின் இனிமையைத் தனது இணையற்ற உயிரினும் உணர்விலும் இனிக்கும் பெருஞ்சுவையால் பழிக்கும் சிவ அருள் பெருகவும், நன்மையும் தீமையும் ஆகிய வினைகள் முழுவதும் துகள் பட்டொழியவும், சீவன் சிவ வடிவு என்பதைத் தெளியவும், அகங்காரத்தை ஒழித்து பரவெளியில் அருள்நாதத்தோடு கூடிய பரஞ்சோதியில் சிவஞானம் பெருகி வரவும், திகட்டாத இன்பத்துடன் கூடிய முத்தியில் என்றும் நிலைத்து மகிழவும் தேவரீருடைய திருவடியைத் தந்தருள்வீர்.

தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற (thEn undhu mukkanigaL pAl sem karuppu iLanir seerum pazhiththa sivam aruLURa) : Sivam's Grace, whose sweetness surpasses the sweetness of honey, the three great fruits (mango, plantain and jack fruit), milk, reddish sugarcane and coconut water, springs copiously inside me. செம் கருப்பு (sem karuppu) : reddish sugarcane; உந்து முக்கனிகள் (undhu mukkanigaL) : the three celerated fruits — mango, plantain and jack fruit, உயர்ந்த மா பலா வாழை என்ற மூவகைப்பட்ட பழங்கள்;

தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ (theedhum pidiththavinai yEdhum podiththu vizha) : shattering into pieces all karmas due to bad deeds and good deeds,

சீவன் சிவ சொருபம் என தேறி (jeevan siva sorupam ena thERi) : making me realize that this Soul is nothing but SivA's form.

நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று (nAn enbadhu atru uyirodu Un enbadhu atru) : completely destroying my ego and my attachment to life and body; நான் என்னும் அகங்காரத்தை ஒழித்தும், உயிர்ப்பற்று உடற்பற்று என்ற இரண்டையும் ஒழித்தும்,

வெளி நாதம் பர பிரம ஒளி மீதே ஞானம் சுரப்ப (veLi nAdham parabbirama oLimeedhE nyanam surappa) : the cosmic sound filling my mind and suffusing it with bright light, I shall experience the Knowledge of Sivam permeate within me as from a spring, பரவெளியிலுள்ள அருள் நாதத்தோடு கூடிய பரஞ்சோதியில் சிவஞானம் பெருகி வரவும்,

மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே (magizh Anandha siddhiyode nALum kaLikka padham aruLvAyE) : In that happy sense of attainment, I should spend every day in eternal bliss; for that, You must grant me Your Holy Feet! உள்ளத்திலும் உணர்விலும் தித்திக்கின்ற சிவானந்தத்தில் அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு,

வானம் தழைக்க அடியேனும் செழிக்க ( vAnam thazhaikka adi yEnum sezhikka ) : To save the Devas in the skies, to let this poor soul flourish,

அயன் மாலும் பிழைக்க அலை விடம் மாள (ayan mAlum pizhaikka alai vidam mALa) : and to let BrahmA and Vishnu survive (the ferocious attack of Suran), to mitigate the effect of the poison that came from the milky sea; அலை விடம்/விஷம் (alai vidam/visham) : the poison that rose from the waves of the sea;

வாரும் கரத்தனை எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே (vArum karaththan emai yALum thagappan mazhu mAnin karaththan aruL murugOnE) : (Lord Shiva) with hands scooping the poison, our protecting father, whose hands hold the battle-axe (or, fire) and deer; That Shiva gracefully gave You to us, Oh MurugA! மழு (mazhu) : battle-axe, fire;

தானந் ............வண்டு சுற்றி மது தான் உண் கடப்ப மலர் அணி மார்பா (dhAnan thanaththathana nA vaNdu sutri madhu thAn uN kadappa malar aNi mArbA:) : beetles go around humming "dhAnan thanaththathana nA" and suck the honey in the rich kadappa flower (in the garland) adorning Your chest!

எமை ஆளும் தானம் குறித்து திரு கயிலைமலை சாலும் (emai ALum (s)thAnam kuRiththu thiru kayilai sAlum ) : You chose the divine Kayilai hills as an appropriate place to rule and guide us. (ஸ்)தானம் குறித்து ((s)thanam kuriththu) : considering the location; தக்க இடமாகக் தேர்ந்து எங்களை ஆட்கொள்ளவென்றே திருக்கயிலாய மலைமேல் எழுந்தருளிய; திருக்கயிலை சாலும் = தெய்விகமுள்ள கயிலை மலைமேல் எழுந்தருளியுள்ள ,

குறத்தி மகிழ் பெருமாளே.(kuRaththimagizh perumALE.) : You, the happy consort of that KuRaththi VaLLi, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே