158. அரிவையர்கள்


ராகம் : சாவேரிஅங்கதாளம் (6)
2½ + 1½ + 2
அரிவையர்கள் தொடரு மின்பத்
துலகுநெறி மிகம ருண்டிட்
டசடனனென மனது நொந்திட்டயராமல்
அநுதினமு முவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு கொண்டிட்
டவநெறியின் விழையு மொன்றைத்தவிர்வேனோ
பரிதிமதி நிறைய நின்றஃ
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற்றகமேவும்
படர்கள்முழு வதும கன்றுட்
பரிவினொடு துதிபு கன்றெற்
பதயுகள மிசைவ ணங்கற் கருள்வாயே
செருவிலகு மசுரர் மங்கக்
குலகிரிகள் நடுந டுங்கச்
சிலுசிலென வலைகு லுங்கத்திடமான
செயமுதவு மலர்பொ ருங்கைத்
தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
தியைவிடுதல் புரியு முன்பிற்குழகோனே
கருணைபொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வருக டம்பத்திருமார்பா
கரிமுகவர் தமைய னென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற்
கநககிரி யிலகு கந்தப்பெருமாளே.

Learn The Song


Raga Saveri (Janyam of 15th mela Mayamalavagowlai)

Arohanam: S R1 M1 P D1 S    Avarohanam: S N3 D1 P M1 G3 R1 S


Paraphrase

அரிவையர்கள் தொடரும் இன்பத்து (arivaiyargaL thodarum inbaththu) : Chasing women, pursuing sensual pleasures,

உலகு நெறி மிக மருண்டிட்டு (ulagu neRi miga marundittu) : and indulging in worldly pursuits, I became very stupefied.

அசடன் என மனது நொந்திட்டு அயராமல் (asadan ena manathu nonthittu ayarAmal) : and called a fool by others. Instead of feeling mentally distressed by this,

அநுதினமும் உவகை மிஞ்சி (anuthinamum uvagai minji) : I become excited every day,

சுக நெறியை விழைவு கொண்டிட்டு (suga neRiyai vizhaivu koNdittu) : and seek trivial pleasures and long for them,

அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ (ava neRiyin vizhaiyum onRai thavirvEnO) : I tread a sinful path willingly; when will I learn to avoid this immoral desire?

பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் (parithi mathi niRaiya ninRa ahthu ena oLirum) : Just like the sun and the moon shining in unison, சூரியனும் சந்திரனும் சேர்ந்து பூரண ஒளியுடன் நின்ற அந்தத் தன்மையை ஒப்ப விளங்குகின்ற; பரிதி (parithi) : sun;

உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று (unathu thunga padiva mugam avaigaL kaNdu utRu ) : Your face glow with purity! உம்முடைய பரிசுத்தமான வடிவம் உள்ள திருமுகங்களின் காட்சியை மனதில் நிறுத்தி, துங்க (thunga) : pure;

அக மேவும் படர்கள் முழுவதும் அகன்று ( akamEvum padarkaLmuzhuvathum akanRu) : beholding which my mental agonies vanish entirely. படர்கள் (padagaL) : worries, distress/agony; என் மனதில் உள்ள துயர்கள் முழுமையும் நீங்கப் பெற்று,

உள் பரிவினொடு துதி புகன்று (uL parivinodu thuthi puganRu) : and I praise Your glory with my heart filled with love,

எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ (el patha ugaLa misai vaNangaRKu aruLvAyE) : You must bless me to worship Your sparkling twin feet! ஒளி பொருந்திய பாதத் திருவடிகளை வணங்கற்கு அருள் புரிவாயாக. எல் (el) : radiant;

செரு விலகும் அசுரர் மங்க (seru vilagum asurar manga) : The demons (asuras) retreating from the battlefield were disgraced; செரு (seru) : battle;

குல கிரிகள் நடு நடுங்க (kula girigaL nadu nadunga) : the famous Mounts of yore (like Krouncha) were shaken;

சிலுசிலு என வலை குலுங்க (silu silu ena valai kulunga) : the waves in the seas were turbulent; வலை (valai) : sea;

திடமான செயம் உதவும் மலர் பொரும் கை தலம் (thidamAna seyam uthavum malar porum kai thalam) : when Your strong, flower-like hands that bring victory

இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் ( ilagum ayilkoLum saththiyai viduthal puriyum ) : fling the sharp powerful Spear called SakthiVEl! அயில் (ayil) : sharp;

முன்பில் குழகோனே (munbil kuzhagOnE) : Oh ancient and handsome Lord! பெருமை வாய்ந்த இளையோனே! குழகன் (kuzhagan) : a youth; a handsome person; Skanda; Siva.

கருணை பொழி கிருபை முந்த (karunaipozhi kirupai muntha) : With Her compassionate grace surpassing,

பரிவினொடு கவுரி கொஞ்ச (parivinodu kavuri konja) : Mother Gowri (PArvathi) caresses You fondly!

கல கல என வரு கடம்ப திருமார்பா (kalakalena varuka dampath thirumArpa) : With lilting sounds of the anklets, You come to Her wearing Kadappa garland on Your chest!

கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர (karimukavar thamaiya nenRuRRidum iLaiya kumara) : You are the younger brother of the Great elephant-faced Ganapathi, Oh Kumara! கரி (kari) : elephant;

பண்பில் கநக கிரி இலகு கந்த பெருமாளே. (paNbil kanakagiri yilaku kanthap perumALE.) : Oh KanthA, You majestically reside in the beautiful Kanaga (golden) mountain, Oh Great One! பண்பில் (paNbil) : beautiful;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே