177. அன்பாக வந்து
Learn The Song
Paraphrase
அன்பாக வந்து உன் தாள் பணிந்து (anbAga vandhu un thAL paNindhu) : I should come to You filled with love and fall at Your feet,
ஐம்பூதம் ஒன்ற நினையாமல் (aimbUtha mondra ninaiyAmal) : with all my thoughts merged with the five elements focussed on You. Instead, ஐம்பூதம் ஒன்றுதல் என்றால் என்ன? ஐம்பூதங்களால் ஆனவன் மனிதன், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய மனதின் தொகுதிகளான அந்தக்கரணங்களை அறிவால் நெறிப்படுத்தி ஒருமுகப்படுத்திய மனத்தால் ஐம்புலன்களையும் உள்முகமாகத் திருப்பி பார்க்க வேண்டும். அதாவது, மண்ணின் தலமான சுவாதிட்டானம், நீரின் தலமான மணிபூரகம், நெருப்பின் தலமான அனாகதம், காற்றின் தலமான விசுத்தி, ஆகாயத்தின் தலமான ஆக்கினை ஆகிய தலங்களில் மனதை நிறுத்தி உள்ளுக்குள் பார்க்க வேண்டும்.
அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் (anbAl migundhu nanjAru kaNgaL) : I roam around with excessive infatuation for women whose eyes are filled with poison,
அம்போருகங்கள் முலை தானும் (ambOru gangaL mulaithAnum) : and whose breasts are like lotus buds, அம் (am) : beautiful; போருகம்(borugam) : lotus;
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரை (kondhE migundhu vaNdadi nindru koNdAdu gindra kuzhalArai) : and who adorn their hair with a bunch of flowers with beetles humming around; வண்டுகள் ரீங்காரமிட்டு மகிழ்ந்துக் கொண்டிருக்கும் பூங்கொத்துகளை அணிந்துள்ள பொது மகளிரை
கொண்டே நினைந்து மன் பேது மண்டி (koNdE ninaindhu manbEdhu maNdi) : Constantly thinking about them, my ignorance intensifies; மனதில் நினைத்து நினைத்து மிக்க அறியாமை பெருகி பேது (bEthu) : ignorance, anguish; மன் (மிகவும், நிலை பெற்ற) பேது அறியாமை (அல்லது வருத்தம்) நிறைந்து,
குன்றா மலைந்து அலைவேனோ (kundrA malaindhu alaivEnO) : and my mind gets depressed, I wander in a perplexed state -must I go on like this? மனம் குன்றி ஒருவழிப்படாது அலைந்து திரிவேனோ? மலைதல் = ஒருவழிப்படாது நிற்றல்;
மன்று ஆடி தந்த மைந்தா (mandrAdi thandha maindhA) : You are the son of the Cosmic Dancer at Shrines! மன்று ஆடி (manRu Adi) : one who danced in the assembly (sabha); Shiva who danced at Chidambaram;
மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே (migundha vambAr kadambai aNivOnE) : You wear the fragrant kadappa garland! வம்பு = நறுமணம்; வம்பு ஆர் கடம்பு : மிக்க வாசனை நிறைந்த கடப்பமாலை, fragrant garland of kadamba flowers;
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் (vandhE paNindhu nindrAr bavangaL ) : The sins of those devotees who bow to You, பவம் (bavam) : sin; the sorrows related to birth;
வம்பே தொலைந்த வடிவேலா ( vambE tholaindha vadivElA) : You totally eradicate (the birth-related sorrows) with Your sharp spear! அடியோடு தொலைக்கும் கூரிய வேலை உடையவனே,
சென்றே இடங்கள் கந்தா எனும் போ (sendrE idangaL kandhA enumpo) : Wherever I go, if I simply call You "Kandha",
செம் சேவல் கொண்டு வரவேணும் (senchEval koNdu varavENum) : You must come to me with Your Red Rooster!
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு (senchAli kanja mondrAy vaLarndha sengkOdu) : At Thiruchengodu where red paddy and lotus grow together, சாலி (chaali) : paddy; கஞ்சம் (kancham) : lotus;
அமர்ந்த பெருமாளே.(amarndha perumALE.) : You reside, Oh Great One!
Comments
Post a Comment