178. காலனிடத்து
ராகம் : சங்கராபரணம் | தாளம்: திச்ர ஏகம் (3) |
காலனிடத் | தணுகாதே |
காசினியிற் | பிறவாதே |
சீலஅகத் | தியஞான |
தேனமுதைத் | தருவாயே |
மாலயனுக் | கரியானே |
மாதவரைப் | பிரியானே |
நாலுமறைப் | பொருளானே |
நாககிரிப் | பெருமாளே. |
Learn The Song
Paraphrase
திருச்செங்கோட்டு தளத்தில் அகத்தியருக்கு உபதேசித்தது போன்று தனக்கும் ஞானோபதேசம் தரவேண்டும் என வேண்டுகிறார்.
காலன் இடத்து அணுகாதே (kAlanidath thaNugAdhE) : In order that I never approach Yama's abode,
காசினியில் பிறவாதே (kAsiniyiR piRavAdhE) : and in order that I never take another birth in this world, காசினி (kasini) : earth;
சீல அகத்திய ஞான (seela agaththiya nyAna) : (please gift me) the Great Knowledge that You preached to the virtuous sage Agasthiyar / the True Knowledge that is acquired by those following righteous conduct; நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற,
அகத்தியம் என்றால் அவசியம் என்றும் பொருள். இதற்கு இப்படியும் உரை சொல்லலாம்: இன்றியமையாத ஒழுக்கத்தால் உண்டாகும் மெய்யறிவால் விளைகின்ற ஞானோபதேசத்தை,
தேன் அமுதை தருவாயே (thEnamudhai tharuvAyE) : Kindly grant that nectar of (sivayoga) to me.
மால் அயனுக்கு அரியோனே (mAlayanukku ariyAnE) : You are beyond the reach of Vishnu and BrahmA!
மா தவரை பிரியானே (mAthavaraip piriyAnE) : You never stay away great sages who have done penance.
நாலு மறை பொருளானே (nAlu maRaip poruLAnE) : You are the substance of the all four VEdAs (Rik, Yajur, SAma and AtharvaNa), நான்கு வேதங்களின் மறை பொருளாக உட்பொருளாக இருப்பவனே
நாக கிரி பெருமாளே. (nAgagirip perumALE.) : Your abode is at NAgagiri (known as ThiruchchengkOdu), Oh Great One!
சிவனும் சக்தியும் இணைந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மூலவர் பாகம்பிரியாளுடன் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் நின்ற திருமேனியில் பாதி புடவை - பாதி வேஷ்டி அலங்காரத்தில் காட்சி தருகிறார். செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் முருகன் தனிச் சந்நிதிகொண்டு அருள்பாலிக்கிறார்.
Very good explanation
ReplyDelete