Thiruppugazh Isai Vazhipadu with lyrics, meaning in English and Tamil, and teaching audios of Guruji Shri A.S. Raghavan
Search
கந்தர் அநுபூதி 41-45
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
Learn The Song
ராகம் : மோகனம்
சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே.
41
sAgAdhu enaiyE saraNangkaLilE
kAgA namanAr kalagam seyum nAL
vAgA murugA mayil vAganaNE
yOgA siva njAna ubadhEsiganE!
41
When Yama creates a furore to take away my life, protect me from death by giving refuge at Thine lotus feet. Oh Victorious Muruga, mounted on the peacock, Oh Yogiswara, the Guru giving Jnanopadesa! வாகா (vaagaa) has several meanings. It can mean handsome. வாகை is the name of a flowering tree. It can also mean a garland of victory.
குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.
42
kuRiyaik kuRiyAdhu kuRiththu aRiyum
neRiyaith thani vElai nigazhththidalum
seRivatRu ulagOdu urai sindhaiyum atRu
aRivu atRu aRiyAmaiyum atRadhuvE!
42
When the Lord with the peerless 'vel' graciously expounded to me the method of meditating upon the Ultimate Knowledge, totally oblivious to Time and surroundings, my relationship with the materialistic world ceased; and my speech, mind, knowledge and ignorance, all vanished.
குறியை (kuRiyai) : the object of meditation; குறியாது குறித்து (kuRiyAdhu kuRiththu) : considering only the object, and not thinking of place or time; தனி வேல் ஐ நிகழ்த்திடலும் (thani vElai nigazhthidalum) : The Lord with unique lance came into me as a 'mouna guru' or as speechless preceptor; நிகழ்த்திடலும் = நடைபெறச் செய்ததும்; இவை இறை-அருள்/குரு-கிருபையால் “தானே நிகழ்வன”. சமாதி எனும் பேருணர்வு நிலையானது தியானத்தின் உச்ச கட்ட முடிவில் தன்னில் தானே வந்தமைவது.
தியானிக்கப் படுகின்ற பொருளை, காலம், இடம் முதலியன பற்றி நினைக்காமல் தியானிக்கப்படும் பொருளைப் பற்றியே எண்ணிக்கொண்டு, பசு, பாச ஞானங்களை விட்டு, பதி ஞானத்தால் அறியும் உண்மை வழியை, ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய கடவுள் மெளன குருவாய் வந்து உள் நின்று உணர்த்திய உடனே உலகத்தாறோடு உறவு நீங்கி, வாக்கும், நினைவும், சுட்டி அறிகின்ற அறிவும் அற்று, அறியாமையும் முற்றிலும் நீங்கிவிட்டது.
அறிவற்று அறியாமையும் அற்றதுவே:
அறிவு, அறியாமை என்பவை, உலக இயல்பைப் பற்றி நமக்கு ஏற்படும் மெய், பொய் தோற்றங்களைப் பற்றிய அறிவேயாகும். இந்த இரட்டைகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாததோடு, ஒன்று தோன்றும்போது மற்றொன்று தோன்றாது. இருட்டை உணரும்போது வெளிச்சம் தெரியாது. வெளிச்சம் தெரியும்போது இருளை உணர முடியாது. அதனால் ஒன்றைத் தெரிகின்றது என்ற ஞானம் இருக்கும்போது, மற்றொன்றைத் தெரியவில்லை என்ற அஞ்ஞானமும் கூடவே இருக்கும்.
அறிவில் அறியாமை கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவு கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவின் கலப்பு இல்லையென்றால், தெரியவில்லை என்று (கூடச்) சொல்லமுடியாது. ஜடம்போல்தான் இருக்க வேண்டும். இந்தக் கலப்பினால் அறிவு தூய்மையற்றுப் போயிற்று. தூய்மையற்றதை அறிவென்று கூறத்தகாது. அதனால் அறிவு என்கிற அறியாமையும், அறியவில்லை என்கிற அறியாமையும் இரண்டும் அறியாமைகளே. இவை இரண்டுக்கும் வைப்பு நிதியாக இருப்பது அகந்தை என்னும் மூலதனம்.
தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.
43
thUsA maNiyum thugilum puNaivAL
nEsA murugA ninadhu anbu aruLal
AsA nigaLam thugaLayina pin
pEsA anubUdhi piRandhadhuvE!
43
Oh Lover of Valli, attired in beautiful dress embellished with pure and precious gems! Oh, Muruga! By Your gracious act the fetters of my desires got broken to pieces and indescribable anubhuti, the Experience of the divine state, was born in me. ஆசா நிகளம் (AsA nigaLam) : the bondage/fetters of desire;
சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே.
44
sAdum thanivEl murugan saraNam
sUdumbadi thandhadhu sollumadhO
veedum surar mAmudi vEdhamum veng-
kAdum punamum kamazhum kazhalE!
44
O, Lord! You have the unique weapon of lance, with which You pierce through the enemies and destroy them! Will I ever be able to describe how merciful You have been in granting me Your holy feet that I could wear over my head? Your heroic anklets-adorned Sacred Feet emit their divine fragrance in the abode of mukthi (liberation), as well as over the celestials' heads, the four Vedas, the fierce-looking jungle, and the millet field.
கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக தயாபரனே.
45
karavAgiya kalviyuLAr kadai sendRu
iravA vagai meipporuL eeguvaiyO
kuravA kumarA kulisAyudha kunj
charavA sivayOga dhayAbaranE!
45
Should I go and beg for knowledge from those who selfishly conceal the knowledge, without sharing it with others? Will You bestow on me the ultimate Wisdom? Oh, Gurunatha, Kumara, You hold the thunderbolt as a weapon; You have the elephant (known as the pinimukam) as the vehicle! Oh, The Compassionate One! You bestow Shiva-Jnana to mature souls? கரவு (karavu) : hiding, concealing; குரவன் (kuravan) : Guru, teacher; குலிசாயுத (kulisayudha) : one who has thunderbolt as the weapon;
தாம் பெற்ற கல்வி அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளாமல் மறைத்து வைப்பவர்களிடம் சென்று யாசிக்கா வண்ணம் மெய்ப்பொருள் ஞானத்தை எனக்குத் தாங்களே தந்தருள்வீர்! “குருவே! குமரப் பெருமானே! வஜ்ராயுதத்தை ஏந்திய பெருமானே! தெய்வயானையின் நாயகனே! அடியார்க்குச் சிவ-யோகத்தை வழங்கும் கருணாமூர்த்தியே!"
நான் என்று எழும் அகந்தையின் மூலமாகிய உண்மை சொரூபத்தை உணர்கின்ற அறிவே உண்மையான மெய்யறிவு ஆகும். இந்த அநுபூதி நிலையில் தான் ஒன்றை அறிவதற்கோ, தன்னை அறிவிப்பதற்கோ தனக்கு அன்னியமாக வேறொரு பொருள் இல்லாமல் தானாகிய ஆன்மா தானே பிரகாசிக்கும்.
You may read the Vel Vaguppu post for the meaning in English. Here's the Tamil explanation of the same. வேல் மாறல் மகா மந்திரமாகும். அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு என்ற திருவகுப்புகள் உடல் நோயையும், உயிர்ப்பிணியையும் நீக்கவல்ல மணி, மந்திர, ஒளஷதம் போன்றதாகும். அவை: 1. சீர்பாத வகுப்பு – மணி வகுப்பு, 2. தேவேந்திர சங்க வகுப்பு - மந்திர வகுப்பு, 3. வேல் வகுப்பு - ஔஷத (மருந்து) வகுப்பு. முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி- வேலாயுதம். வேல் என்ற சொல்லுக்கு ‘வெல்’ என்பது மூலம். வெல்லும் தன்மையுடையது வேல். இந்த வேல் வெளிப்பகை மற்றும் உட்பகைகளான வினைகளை வேரோடு அழிக்கும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள ‘வேல் வகுப்பு’ உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது’ என்று உறுதி கூறிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார். வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லம
Comments
Post a Comment