கந்தர் அநுபூதி 11-15
Learn From Guruji
ராகம் : ஆரபி
கூகா என என் கிளை கூடி அழப் | |
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா | |
நாகாசல வேலவ நாலு கவித் | |
தியாகா சுரலோக சிகாமணியே. | 11 |
kookaa ena en kiLai koodi azha, | |
pOgaa vagai mey poruL pEsiyavaa | |
naagaasala vElava naalu kavith | |
thyaaga a suralOka sikhaamaNiyE | 11 |
Oh, the vel-wielding lord of Tiruchengodu (Nagaachala Velava), You are the Supreme and Eternal Substance who preached me Real Knowledge to help me escape the misery of dying, with wailing kinsmen gathered around me. You taught me how to compose and sing Your Sacred praise in four kinds of Tamil verses (known as aasu, mathuram, chiththiram and viththaaram). (Or, You are the great Lord who graciously grants the devotees the ability to sing of Your Sacred praise by composing four kinds of [Tamil] verses [known as aacu, mathuram, ciththiram and viththaaram]. You are the Foremost Gem of the celestial world!) You are the Foremost Gem of the celestial world (suraloka sikhamaNi)!
எனது சுற்றத்தார் ஒன்றுகூடி, ‘கூகா’ என்று கூச்சலிட்டு குழுமி, ஒப்பாரி வைத்து அழுமாறு நான் இறந்து போகாதிருக்கும்வண்ணம், உயரிய மெய்ப்பொருள் பற்றி அறிவுரைகள் தந்தருளிய அற்புதம்தான் என்னே! நாகாசலத்தில் (திருச்செங்கோட்டு மலை மீது) குடிகொண்டுள்ள வேலாயுதப் பெருமானே! நான்குவகைக் கவிபாடும் ஆற்றலை அளிப்பவரே! தேவலோகத்தின் சிகாமணியே!
தமிழ் மொழியின் நான்கு வகைகளான கவிதைகள் — ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி எனப்படும் நான்குவித கவிதைகளையும் இயற்றும் புலமையைத் தர வல்லவர் முருகன்.
ஆசு கவி : கொடுத்த பொருளை அடுத்த பொழுதிற் பாடும் பாட்டு (கவி). மதுர கவி : இனிமையும் இசையும் பெருகப் பாடுங் கவி. சித்திர கவி : சித்திரத்தில் அமைத்தற்கு ஏற்பப் பாடும் இறைக் கவி. வித்தார கவி : விரிவாகப் பாடும் பிரபந்தம் (செய்யுள் நூல்).
முருகனின் வசீகரம் அருணகிரிநாதரை கவர்ந்ததனால் ."இந்த திருச்செங்கோட்டு தேவனின் அழகைக் கண்டு களித்து, அவனைத் தொழ நான்முகன் நாலாயிரம் கண்களுடன் என்னை படைக்காமல் போனாரே!” என்று அங்கலாய்த்த இடம் திருச்செங்கோடு. ‘நீ எங்கிருந்தாலும், “கந்தா” என்று என்னை விளித்துக் கூப்பிட்டால், யான் அங்கு உடனே வருவேன்’என்று திருச்செங்கோட்டுப் வேலவன் அவருக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். (அன்பாக வந்து )
செம்மான் மகளைத் திருடும் திருடன் | |
பெம்மான் முருகன், பிறவான், இறவான் | |
சும்மா இரு, சொல் அற என்றலுமே | |
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. | 12 |
chammaan makaLai thirudum thirudan | |
pemmaan murugan piRavaan iRavaan | |
chummaa ira chol aRa enRalumE | |
ammaa poruL onRum aRinDilanE | 12 |
The majestic God Murugan, who is beyond birth and death, and who stole Valli, the daughter of the beautiful deer, imparted the upadesa advising me to remain quiet and speechless, and what a wonder that I cannot see any object after that!
This means that with the Supreme Guru's upadesa, the saint attained the transcendental stage where distinction between objects vanish and only the universal god-substance remains.
உலகில் துன்பங்களுக்கும் மறுபிறவிக்கும் காரணம் நமது எண்ணம், சொல், செயல்கள் ஆகும். நமது எண்ணம், சொல், செயல்களின் பதிவுகளே நமது விதியாகி அடுத்த பிறவியாகிறது. 'சும்மா இரு சொல்லற’ என்ற எண்ணமற்ற நிலையில் பதிவுகள் ஏதும் ஏற்பட வழியில்லை. எனவே ிதியும் உண்டாக வழியில்லை. எண்ணமற்றுச் சும்மா இருக்கும் போது, ‘நான்‘ எனும் ஆணவம் எழ இடமில்லை. இதுவே சொற்பதம் கடந்த, நிட்டைக்கு வழி வகுக்கும், உயரிய மெய்ஞ்ஞான நிலை.
சும்மா இரு சொல்லற என்பது மகா வாக்கியமாக கருதபடுகிறது. ‘சொல் அற’ என்பது மனதில் எண்ண ஓட்டம் இல்லாமல் இருத்தல். சொல் இல்லை எனில் எண்ணம் இல்லை. சீர்பாத வகுப்பில் கூறப்பட்டதுபோல்,
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ ரநுபூதி
என்று கூறப்படும் நிலையே இது.
சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும்
எல்லைக்குள் செல்ல என்னை விட்டவா! இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற கொல்லியைக் கல்வரை கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே!’
'முருகன், தனிவேல் முனி, நம் குரு' என்று | |
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ | |
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, | |
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. | 13 |
murugan thanivEl muni nam guru enRu | |
aruL koNd- aRiyaar aRiyum tharamO | |
uru anRu aru anRu uLath anRu ilath anRu | |
iruL anRu oLi anRu ena ninRathuvE | 13 |
Can those who have not received the Lord's Sacred Grace to know that Murugan, the lance-bearing unique sage, is our Preceptor, ever realize this truth by themselves? The Supreme Lord is neither with form, nor formless; neither an entity that exists, nor an entity that does not exist; neither a dark object, nor an effulgent one!
உருவம் உடையது அன்று, உருவம் இல்லாதது அன்று; உள்ளது அன்று, இல்லாதது அன்று; இருள் அன்று, பிரகாசம் அன்று; என்று சொல்லும் தன்மையில் நின்ற “அது”வே (அப்பரம்பொருளே அல்லது பரமாத்மாவே) முருகப்பெருமான் என்றும், (அதுவே) இணையற்ற வேல் தாங்கிய முனிவன் என்றும், (அதுவே) நம் குரு என்றும் (அப்பெருமான்) திருவருள்கொண்டு அறியமாட்டாதவர்கள் அறியவும் முடியுமோ! (திருவருளைக் கொண்டு அறிபவர்களைத்தவிர மற்றவர்களால் அறியமுடியாது.)
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று | |
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய் | |
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் | |
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. | 14 |
kaivaay kathirvEl murugan kazhal petRu, | |
uyvaay mananE ozhivaay ozhivaay | |
meyvaay vizhi naasiyodum sevi aam, | |
aivaay vazhi chellum avaavinaiyE | 14 |
Oh, mind! Seek the feet of Murugan who holds a radiant 'vel' in his hands and attain salvation. Renounce firmly the desires arising through the five sense-organs, namely, the body, the mouth, the eyes, the nose, and the ears! கைவாய் கதிர் வேல் (kaivaay kathirvEl ) : one with lustrous lance in the hands;
ஒ மனமே! கதிர்வேலைக் கையில் ஏந்தி இருக்கும் முருகப் பெருமானின் திருவடியைப் பெற்று, நற்கதியைப் (முக்தியைப்) பெறுவாயாக. உடல், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் வழியே (உலகியல் பொருள்களை அனுபவிக்க) வெளிச்செல்லும் ஆசைகளை ஒழித்து விடுவாயாக, (முழுவதும்) ஒழித்து விடுவாயாக.
மனதை வெவ்வேறு திசைகளில் இழுத்து, அமைதியையும் மகிழ்ச்சியையும் அறவே இழக்கச்செய்யும் ஆசைகளே ஆன்ம அனுபவம் எனப்படும் அனுபூதியை பெறுதற்கு தடையாக உள்ளன. ஆசையும் ஆன்மீக பேரின்பமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. வெளிச்சமும் – இருட்டும், பகலும் போல அவ்விரண்டும் இணைந்து இருக்க முடியாது. ஒன்று உள்நோக்கிச்செல்வது, மற்றொன்று வெளிநோக்கிச்செல்வது. விஷய சிந்தனையில் வசப்படாமல் மனமானது காக்கப்பட வேண்டுமானால், அதை தன்னிலேயே முழுதும் லயிக்க வைக்க ஐம்புலன்களுக்கு அப்பாற்ப்பட்ட பரம்பொருளை இலக்காக அதற்குத் தரப்பட வேண்டும்.
முருகன், குமரன், குகன், என்று மொழிந்து | |
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்? | |
பொரு புங்கவரும், புவியும் பரவும் | |
குருபுங்கவ! எண் குண பஞ்சரனே. | 15 |
murugan kumaran guhan enRu mozhinDu, | |
urugum cheyal thanDu uNarvu enRu aruLvaay | |
poru pungavarum bhuviyum paravum, | |
guru pungavaa eN guNa panjaranE | 15 |
When will You graciously grant me the mind that melts with devotion and adores You as Murugaa, Kumaraa and Guha? You are the Supreme Preceptor, adored and worshipped by the celestials who take interest in warfare and by the dwellers of the earth. You reside in the abode made of eight divine qualities! பொரு புங்கவர் (poru pungavar) : warring celestials; பஞ்சரம் (panjaram) : cage; body;
The Supreme God Siva has the eight attributes, namely, self-existence, essential purity, intuitive wisdom, infinite intelligence, freedom from all bonds, infinite grace or love, omnipotence, and infinite bliss. Murugan is made of the essence of these eight qualities.
தேவர்களாலும் மனிதர்களாலும் போற்றப்படும் குரு சிரேஷ்டரான முருகன் “எண்குண பஞ்சரன்”, எட்டு திவ்ய குணங்களின் உறைவிடம்.
தன்னைத் தானே சார்ந்திருப்பவன் (சுதந்திரன் – Self Dependent),
தூய உடல் கொண்டிருப்பவன் (Immaculate Body),
இயற்கை உணர்வுடையவனாக இருப்பவன் (Natural Understanding),
அனைத்தும் அறிந்தவனாக இருப்பவன் (Omniscience),
மாயை நீங்கிய இயல்பினனாக இருப்பவன் (Naturally free from Maya / Attachments),
எல்லையில்லா கிருபை உடையவனாக இருப்பவன் (Unlimited Grace),
முழுமையான ஆற்றல் பெற்றிருப்பவன் (Omnipotence),
எல்லையற்ற ஆனந்தம் பெற்றிருப்பவன் (Limitless Bliss).
Comments
Post a Comment