கந்தர் அநுபூதி 26-30

Learn The Song


ராகம் : ஹம்சானந்தி
ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோதமநோ
தீதா சுரலோக சிகாமணியே!26
AdhAram ilEn aruLaip peRavE
needhAn oru satRu ninaindhilaiyE
vEdhAgama njAna vinOdha manO
theedhA suralOga sigAmaNiyE!26

I have no basis to receive Your grace (I have no support other than You) and You haven't thought favorably about me for a moment! Oh Crest Jewel of the celestial world! You are the personification of spiritual wisdom that is the essence of vedas and agamas. You are beyond the comprehension of the mind.

உனது திருவடியை அன்றி வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லாதவன் நான்! (அப்படி இருந்தும்) நான் உங்கள் கிருபையைப்பெற்று உய்யுமாறு நீங்கள் ஒரு சிறிதளவேனும் சிந்திக்கவில்லையே! (என்னே என் பரிதாப நிலை!) ஓ முருகப் பெருமானே! தேவலோகத்தின் முடி மணியாக விளங்குபவனே! வேதங்களிலும் ஆகமங்களிலும் காணப்படுகின்ற உட்பொருளான ஞானத்தையே வடிவாகக் உடையவனே (வேத ஆகமங்களின் ஞானத்தை அருள்வதில் விநோதரே)! மனதிற்கு அப்பாற்பட்டவரே (மனதினால் அடையமுடியாதவரே)!

மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன்இங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே!27
minnE nigar vAzhvai virumbiya yAn
ennE vidhiyin payan ingkidhuvO
ponnE! maNiyE! poruLE! aruLE!
mannE! mayilERiya vAnavanE!27

Is it because of the result of my past karma that I am attached to this transient life, which appears and vanishes like the flash of a lightning? O, Lord! You are the Gold, the Gem, the real Wealth and the Divine Grace! You are the Supreme King reigning over the world, and the Supreme Celestial Being, riding the vehicle of peacock!

மின்னலைப் போன்று தோன்றி மறைந்திடும் இந்த உலக வாழ்க்கையை நான் விரும்பியது, என்ன ஆச்சரியம்! இது எனது தலை விதியின் பயன்தானோ! தாங்கள் பொன்போல அருமை வாய்ந்தவர், மாணிக்கம் போன்று பிரகாசிப்பவர், மெய்ப்பொருள் தத்துவம், (முக்தியளிக்கும்) அருளே வடிவானவர், சர்வ-லோக அரசர், மயில் வாகனனான தேவாதி தேவன்.

ஆனா அமுதே! அயில்வேல் அரசே!
ஞானா கரனே! நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே?28
AnA amudhE! ayilvEl arasE!
njAnAgaranE! navilath thagumO
yAnAgiya ennai vizhungki veRum
thAnAi nilai nindRadhu thaRtparamE?28

O, Lord, You are the unperishable and indestructible Nectar! You are the Supreme Ruler holding the weapon of lance! You are the abode of spiritual wisdom! Can one express the supreme divine state when, by Your grace, the I that was Mine was devoured, and it stood fully as an ever-lasting self, transcending all.
கெடுதலும் அழிவுமில்லாத அமுதம் போன்றவனே, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய மன்னவனே, ஞானத்திற்கு இருப்பிடமானவனே, நான் என்னும் ஆணவ முனைப்பில் அழுந்தி இருக்கும் என்னிடமிருந்து ஜீவபோதத்தை போக்கி சிவபோதத்துள் அடக்கி, வேறு ஒன்றும் இல்லாது எல்லாம் தானேயாய், நிலைத்திருப்பதான, மேலான நிலையை (அனுபவித்து அனுபவத்தில் காண்பதே அல்லாது பிறருக்கு இந்த அனுபவம் இத்தன்மையது என்று), சொல்லத் தக்கதோ? (சொல்ல முடியாது). ஜீவபோதம் முனைந்து நிற்கையில் சிவபோதம் மறையும், சிவபேர்தம் முனைந்து நிற்கையில் ஜீவபோதம் மறையும். தற்பரம் = மேம்பட்டது; என்னை விழுங்கி = ஆணவ மலம் விழுங்கப் பட்டது .

இல்லே எனுமாயையில் இட்டனைநீ
பொல்லேன் அறியாமைபொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவில்என்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே!29
illE enum mAyaiyil ittanai nee
pollEn aRiyAmai poRuththilaiyE
mallE puri panniru vAguvil en
sollE punaiyum sudar vElavanE!29

O, Lord, You have caused me to be entangled in the illusory married life; yet, You have not forgiven my ignorance! You are wearing the garlands of the words of my adoration on Your twelve shoulders that are trained in wrestling, and You are the bearer of the lustrous lance!

இல்வாழ்க்கை என்னும் மாய வாழ்வில் அடியேனைச் சிக்கவைத்துள்ள தேவரீர் கொடியவனாகிய அடியேனது அறியாமையைப் பொறுத்து மன்னித்தருளவில்லையே! மற்போர் செய்வதற்குரிய பன்னிரண்டு தோள்களிலும் அடியேனின் சொற்களாலாகிய பாடல்களையே மாலைகளாக அணிந்துகொள்ளும் ஒளிவீசும் வேலாயுதரே!

செவ்வான் உருவில் திகழ்வே லவன்அன்று
ஒவ்வா ததென உணர்வித் ததுதான்
அவ்வா றறிவார் அறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே?30
sevvAn uruvil thigazh vElavan andRu
ovvAdhadhu ena uNarviththadhu thAn
avvARu aRivAr aRigindRadhalAl
evvARu oruvarkku isaivippadhuvE?

The Lord, bright as the crimson sky and holding the weapon of lance, graciously expounded to me on that day the unique spiritual wisdom by helping me discriminate (between the Eternal Truth and the illusory). Unless one experiences in the same manner, can it be explained to anyone by others?

சிவந்த வானத்தின் உருவில் விளங்கும் வேலாயுதப் பெருமான் அன்று அடியேனுக்கு உபதேசித்தருளிய ஒப்பற்ற ஞான உபதேசத்தை ஒருவர் அறிந்து அனுபவிக்க முடியுமே தவிர, எங்ஙனம் மற்றொருவருக்குச் சொல்ல இயலும்?

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே