310. திருமொழி
Learn The Song
Raga Hari Kambhoji (28th mela)
Arohanam: S R2 G3 M1 P D2 N2 S Avarohanam: S N2 D2 P M1 G3 R2 SParaphrase
இதற்கு விருத்தகாசி எனவும் ஒரு பெயருண்டு. இங்கு மடியும் உயிர்களுக்கு அம்பாள் தன் முந்தானையால் வீச, சிவபெருமான் பஞ்சாக்ஷரம் அவர் காதில் ஓதி அவர்களுக்கு முக்தியை அருளுகிறான். அதனால் இது காசித்தலத்தைக் காட்டிலும் உயர்ந்தது என கந்தபுராணத்தில் வருகிறது. விருத்தாசலத்தில் இறப்பவர்களுக்கு "வடிவறும்" = மீண்டும் வடிவு (உடல்) எடுக்கும் நிலை தோன்றாது! அத்தகைய தூய, உயர்ந்த நிலையாகிய முக்திப்பேறு – "சுசிகரம்", அதாவது, நன்மை, தூய்மை, மேன்மை – அவர்களுக்குக் கிடைக்கும்.
திருமொழி உரை பெற அரன் உனதுழி பணிசெய ( thirumozhi uraipeRa aranuna dhuzhi paNiseya ) : Requesting You to expound the meaning and significance of the great PraNava ManthrA, Lord SivA prostrated before You! அருள்மொழியின் பொருள் விளங்க உபதேசத்தைப் பெறும்பொருட்டு சிவபரம்பொருள் பணிந்து இருக்க; உனதுழி = உன்னிடத்தே; உழி = பக்கம், இடம்; திருமொழி உரை பெற ( thirumozhi urai peRa) : முக்தி மொழியாம் பிரணவ பொருளின் விளக்கப் பொருளை உபதேச முகமாகப் பெறுவது நியதி. அதற்கு எடுத்துக்காட்டாக சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெற்றார்.
முனம் அருளிய குளவோனே (muna maruLiya kuLavOnE) : and You preached it to Him, Oh SaravanabhavA!குளம் (kuLam) : two meanings: 1. Pond/lake, 2. forehead, நெற்றி; குளவோன் (kuLavOn) : one who is born in the (Saravana) pond; Born of the third eye on the forehead of Shiva;
திறலுயர் மதுரையில் அமணரை உயிர் கழு (thiRaluyar madhuraiyil amaNarai uyir kazhu) : In the bright city of Madhurai, the ChamaNas were sent by You (Murugan incarnated as Thirugnana Sambanthar) to the gallows; திறலுயர் (thiRal uyar) : ஒளி மிக்க;
தெறிபட மறுகிட விடுவோனே (theRipada maRugida viduvOnE) : and their bodies were shattered to pieces!
ஒருவு அரும் உனதருள் பரிவிலர் அவர்களின் உறு (oruvarum unadharuL parivilar avargaLin) : Just like the people who do not love Your irresistible grace, நீக்குதற்கு அரிதான உன்னுடைய திருவருளில் ஆசை இல்லாதவர்களை போல; ஒருவு அரும் (oruvu arum ) : impossible to avoid/remove, ஒருவுதல் = நீக்குதல், விடுத்தல்.
படர் உறும் எனை அருள்வாயோ (padar uRum enai aruLvAyO ) : I too experience sorrow. Will You not kindly cast Your gracious glance at me? துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் கண் பார்த்தருள்வாயோ?
இறைவன் திருவடிகளே நமக்குப் புகலிடம் என்று நினைந்து அன்பு செய்யாதவர்கள் படுவது போன்ற துன்பத்தை அனுபவிக்கின்ற அடியேனுக்கு அருள் புரிய வேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டுகின்றார்.
உலகினில் அனைவர்கள் புகழ்வுற (ulaginil anaivargaL pugazhvuRa ) : To the amazement and praise of the entire world,
அருணையில் ஒரு நொடி தனில் வரு மயில் வீரா (aruNaiyil orunodi thanilvaru mayil veerA ) : in ThiruvaNNAmalai, once You came to help me driving Your peacock in a fraction of a second!
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் (karu vari uRu poru kaNai vizhi kuRamagaL) : She has dark lined, dart-like eyes ready for combat; she is VaLLi, the damsel of the KuRavAs; கரிய ரேகைகள் பொருந்தி போருக்கு உற்ற அம்பு போன்ற கண்களை உடைய வள்ளி
கணினெதிர் தருவென முனம் ஆனாய் (kaNin edhir tharu ena munam AnAy ) : and right before her eyes, You once became a vEngai tree! கண் எதிரில் முன் ஒரு நாள் வேங்கை மரமாக ஆனவரே!
கரு முகில் பொரு நிற அரிதிரு மருமக (karu mugil poru niRa ari thiru marumaga) : You are the handsome nephew of Vishnu who has the complexion of dark clouds!
கருணையில் மொழி தரு முதல்வோனே (karuNaiyil mozhi tharu mudhalvOnE ) : Out of compassion, You preached to me the sacred ManthrA!
முருகலர் தரு உறை அமரர்கள் சிறைவிட (murugalar tharuvuRai amarargaL siRai vida) : In order that the DEvAs who lived in the shade of KaRpaga trees with fragrant flowers could be released from the prison, தரு (tharu) : tree (karpaga); முருகு (murugu) : beauty, youthfulness, divine-quality, fragrance; அலர் (alar) : fully bloomed flower;
முரண் உறும் அசுரனை முனிவோனே (muraN uRum asuranai munivOnE) : You showed Your rage on the hostile demon, SUran! முரண் (muraN) : hostile;
முடிபவர் வடிவறு சுசிகர முறை (mudibavar vadivaRu suchikara muRai) : Those who breathe their last in this place are never born again; and such sanctity is preserved in this holy place called முடிபவர் (mudibavar) : Those who die, இறப்பவர்கள்; வடிவறு (vadivaRu) : cut off birth; பிறப்பு அறுகின்ற;
At Thirumuthukundram, Parvathi Devi fans the dying with her garment, and Lord Shiva reveals His form and gives Panchakshara upadesa. திருமுதுகுன்றம் அங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும் ஸ்தலம். (சாரூப நிலை -- ரூபதானம் அருள்வாயே) முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன.
தமிழ் முதுகிரி வலம்வரு பெருமாளே. (thamizh mudhugiri valam varu perumALE.) : Virutthachalam (known as Mudhugiri in Tamil), where You reside victoriously, Oh Great One!
Comments
Post a Comment