316. சூழும் வினை
Learn The Song
Know The Raga Mohanam (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S R2 G3 P D2 S Avarohanam: S D2 P G3 R2 SParaphrase
சூழும் வினைக்கண் துன்ப (sUzhum vinaikkaN thunba) : Sorrows surround me as a result of my bad deeds or karma, பிறவிகள் தோறும் என்னைச் சூழ்ந்து வருகின்ற தீவினைகளின் காரணமாக உண்டாகும் துன்பம்,
நெடும் பிணி கழிகாமம் சோரம் (nedum piNi kazhi kAmam sOram) : prolonged illness, excessive lust, and stealth, கழிகாமம் = மிகுந்த காம உணர்வு,
இதற்கு சிந்தை நினைந்து (idhaRku chinthai ninaindhu) : and my mind is always filled by these thoughts.
உறு துணை யாதே (uRu thuNai yAdhE) : Who can guard me against all this? (இவைகளில் இருந்து தப்பிப் பிழைக்க) உறுதுணையாக அமைவது எது?
ஏழை என் இத்துக்கங்களுடன் தினம் உழல்வேனோ (Ezhai en ithdhukkangaL udan dhinam uzhalvEnO ) : Is this poor soul doomed to suffer daily with such grief? அறிவில்லாதவனாகிய நான் இந்த வகையான துக்கங்களுடனே நாளும் நிலைகெட்டு அலைதல் தகுமோ?
ஏதம் அகற்றிச் செம்பத சிந்தனை தருவாயே (Edham agatri sempadha chinthanai tharuvAyE ) : You must remove my shortcomings and make my mind concentrate only on Your rosy feet. ஏதம் (சமஸ்கிருதம்: खेद) (Etham) : suffering, affliction, distress;
ஆழி அடைத்து இலங்கையை எழுநாளே ஆண்மை செலுத்தி தன்கைக் கொண்ட (Azhi adaithu than kai ilankaiyai ezhunALE ANmai seluththik koNda) : He built a bridge across the sea and conquered LankA in seven days through the power of His valour;
கரும் புயல் மருகோனே ( karum puyal marugOnE) : He has the complexion of the dark clouds; and You are that Rama's nephew!
வேழ முகற்கு தம்பியெனும் திரு முருகோனே (vEzha mugaRkuth thambi enum thiru murugOnE) : Oh MurugA, You are the younger brother of the elephant-faced VinAyagA.
வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே.(vEdha vanaththil sankarar thandharuL perumALE.) : You are the son of Sankara, who presides at VEdhAraNiyam, Oh Great One!
Comments
Post a Comment