317. குரைகடல்

ராகம்: பீம்ப்ளாஸ்தாளம்: அங்கதாளம்
2 + 2 + 2 + 1½ + 2 + 2 + 2 + 2 (15½
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
கூத்தாடு கின்றகுடில்பேணிக்
குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலை யின்றியவிரோதம்
வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
வார்க்கே விளங்குமநுபூதி
வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
வாக்கால்மொ ழிந்தருளவேணும்
திரள்வரை பகமிகு குருகுல வேந்து
தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
தீப்பாய இந்த்ர புரிவாழ
விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
வேற்கார கந்தபுவியேழும்
மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
வேப்பூர மர்ந்தபெருமாளே.

Learn The Song




Raga Bhimplas / Abheri (Janyam of 22nd mela Karaharapriya) -

Arohanam: S G2 M1 P N2 S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S


Paraphrase

குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து (kurai kadal ulaginil uyir kodu pOnthu) : In this world surrounded by noisy oceans, a life takes birth, ஆரவாரம் செய்கின்ற கடல் சூழ்ந்த உலகில் உயிர் எடுத்து வந்து,

கூத்தாடுகின்ற குடில் பேணி (kUththAdukinRa kudil pENi) : into the hut-like body and indulges in boisterous revelry! கூத்தாடுகின்ற குடிசை போன்ற உடலை விரும்பி போற்றி

குகையிட மருவிய கருவிழி மாந்தர் (gugaiyida maruviya karu vizhi mAnthar) : People fall into the pit of the womb resembling the interior of mountainous caves! மலைக்குகை போல உள்ள கருவிலே இறங்கி விழுகின்ற மனிதர்களுக்கு

கோட்டாலை இன்றி அவிரோதம் வர (kOttAlaiyinRi yavirOtham vara ) : and experience misery. In order that I am spared that kind of despair, develop a non-hostile and friendly attitude, and நேர்வதான எந்தத் துன்பமும் இல்லாமல், யாரோடும் பகைக்காத மனப்பக்குவத்தை அடைந்தும் கோட்டாலை(kOttAlai) : sorrow, Grotesque gestures, foolish behavior, துன்பம், விகடக்கூத்து, மூடநடத்தை

இரு வினையற (iru vinaiyaRa) : to overcome the effects of both good and bad deeds,

உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி வடிவினை (uNarvodu thUngu vArkkE viLangum anupUthi vadivinai) : and experience bliss, which can be discerned only by those who are immersed in deep meditation on the true knowledge, ஞான நிலையில் தங்கிருப்பவர்களுக்கே விளங்குவதாகிய ‘அனுபவ ஞானம்’ என்னும் உன் அருட்பிரசாத வடிவத்தை,

உனது அழகிய திருவார்ந்த வாக்கால் மொழிந்தருள வேணும் (unathu azhagiya thiru vArntha vAkkAl mozhinthu aruLa vENum ) : You will have to preach me with Your most auspicious and beautiful words of wisdom (so that I can experience the blissful experience of anubhoothi)!

Murugan deftly wields His spear in the battle-field, which stunned Lord Brahma, caused a wild conflagration in the sea, restored the heaven to Indra and drove the asura women to plunge into fire.

திரள் வரை பக மிகு (thiraL varai paga migu) : The huge mountain Krouncha was split into two; வரை (varai) : mountain; பக/பகு(paga/pagu) : split;

குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு தெருமர (kurukula vEnthu thErppAkan mainthan maRaiyOdu therumara) : and BrahmA, the son Of Vishnu who came as Krishna to be the charioteer of the king of the Kuru Dynasty (Arjuna), was shaken and so were the VEdAs (scriptures) learnt by Him; தெருமர (therumara) : கலக்கம் உற;

நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீப்பாய (nisisarar manaiviyar sErnthu theeppAya) : and all the wives of the asuras plunged en masse into fire and died;

இந்த்ரபுரி வாழ (indhra purivAzha) : AmarAvathi, the Capital of DEvEndrA, rejoiced on being redeemed;

விரி திரை எரி எழ (viri thirai eri ezha) : and the wide ocean full of waves caught fire, when

முதலுற வாங்கு வேற்கார கந்த (muthaluRa vAngu vERkAra kantha) : You wielded Your prime weapon, Spear, Oh Kantha!

புவியேழும் மிடி கெட விளைவன வள வயல் (puvi Ezhum midi keda viLaivana vaLa vayal) : The lush fields produce enough food crop to feed the seven worlds and remove their poverty;

சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே. (chUzhntha vEppUra marntha perumALE.) : and such fertile fields surround VEppUr, which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே