348. எழுபிறவி


ராகம்: கரஹரப்ரியாதாளம்: அங்கதாளம் (5½)
2½ + 1½ + 1½
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்துவளர்மாயை
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்துமிகநீளும்
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தினருநீழல்
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை யருள்வாயே
வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற
மதியிரவி தேவர்வஜ்ர படையாளி
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
மறையஎதிர் வீரவுக்ரர் புதல்வோனே
அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
அசலமிசை வாகையிட்டு வரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே.

Learn The Song



Raga Kharaharapriya (22nd mela)

Arohanam: S R2 G2 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S


Paraphrase

அருணகிரிநாதர் உடலை ஒரு மரத்துக்கு ஒப்பிடுகிறார். வித்து ரூபமான வினை நீர் இருக்கும் நிலத்தில் பிறவி என்னும் சிறு செடியாக வேர் விட்டு தொடங்குகிறது. அந்த சிறிய செடியின் முளை நாம் அனுபவிக்கும் துன்பம் என்றும், அதன் கிளைகள் மாயையாகிய பொய்த்தோற்றங்கள் என்றும், அதன் தளிர்கள் - காமம் - ஆசை என்றும், அதன் இலைகள் அஞ்ஞானம் என்றும், அதன் பூமொட்டுக்கள் சூழ்வுறும் கேடுகள் என்றும் அதன் பழம் மரணம் - சாவு என்றும் சுவாமிகள் உருவகப் படுத்தியுள்ளார்.

எழு பிறவி நீர் நிலத்தில் (ezhu piRavi neer nilaththil) : On the water-filled land of seven births, ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்ட நிலத்திலே,

இரு வினைகள் வேர் பிடித்து (iru vinaigaL vEr pidiththu) : the karmas, both good and bad, take root, நல்வினை, தீவினை என்ற வேர்களில் ஊன்றிக்கொண்டு,

இடர் முளைகளே முளைத்து (idar muLaigaLE muLaiththu) : sorrows blossom as buds; துன்பம் என்ற முளைகள் முளைக்க, வளர்ந்து,

வளர் மாயை எனும் உலவையே பணைத்து (vaLarmAyai enum ulavaiyE paNaiththu) : delusions shoot out as branches that thrive and grow abundantly; பொய்த் தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் செழிப்புற்றுப் பெருத்து, உலவை (ulavai) : green twig with leaves, bough, தழை, கிளை;

விரக குழையே குழைத்து ( viraga kuzhaiyE kuzhaiththu) : on which young leaves of lust sprout; காமம் என்ற தளிர்கள் துளிர்விட்டு,

இருளிலைகளே தழைத்து மிக நீளும் (iruL ilaigaLE thazhaiththu miga neeLum) : and grow big as leaves of ignorance; அஞ்ஞானம் என்ற இலைகள் செழிப்புடன் தழைத்து மிகப் பெரிதாகி,

இழவு நனையே பிடித்து (izhavu nanaiyE pidiththu) : and buds of destruction bloom as flowers; கேடு என்னும் பூ மொட்டுக்கள் அரும்பு விட்டு, நனை (nanai) : flower bud;

மரண பழமே பழுத்து (maraNa pazhamE pazhuththu) : and ultimately ripen into the fruit of death; இறப்பு என்னும் பழம் பழுத்து, ,

இடியுமுடல் மாமரத்தின் (idiyum udal mA maraththin) : and this body, akin to the mango tree, falls apart! கடைசியில் முறிந்து அழிந்து போகின்ற உடல் என்னும் மாமரத்தின்

அரு நீழல் இசையில் விழ ஆதபத்தி அழியு முனமே (aruneezhal isaiyil vizha Adhabaththi azhiyumunamE) : Before the rare shade of that umbrella (the mango tree) gets uprooted, உடல் எனப்படும் அருமையான நிழல் தரும் மாமரக் குடை அதன் பண்பிழந்து வீழ்ந்து போக, ஆதபத்திரம் (Athapaththiram) : umbrella;

எனக்கு இனியதொரு போதகத்தை அருள்வாயே (enakku iniyadhoru bOdhagaththai aruLvAyE) : kindly bless me with Your incomparable sweet teaching! இனிமை தரும் ஒப்பற்ற உபதேச மொழியை அருள்வாயாக.

சிவபிரானை இழித்துப் பேசி யாகத்து அவி கொடுக்க மாட்டேன் எனத் ததிசி முநிவரிடம் தக்கன் தகாத முறையில் பேசினான். அவர் என்ன புத்திமதி சொல்லியும் தக்கன் கேளாததால் இந்த யாகம் அழிக, தேவர் யாவரும் கேடு உற என அவர் சபித்தார்

வழுவு நெறி பேசு தக்கன் (vazhuvuneRi pEsu dhakkan) : Once, Dhakshan, notorious for his disparaging remarks,

இசையு மக சாலையுற்ற (isaiyu magasAlai utra) : called for a ceremonial yaagashala which was attended by மகம் (magam) : sacrifice; வேள்வி;

மதி இரவி தேவர் வஜ்ரபடையாளி ( madhiyiravi dhEvar vajra padaiyALi) : the Moon, the Sun, the Celestials, IndrA (the holder of the weapon Vajra),

மலர் கமல யோனி (malarkamala yOni) : BrahmA (who emerged on a lotus from Vishnu's belly button) and

சக்ர வளைமருவு பாணி (chakra vaLaimaruvu pANi) : Vishnu holding the Wheel and the Conch in His holy hands,

விக்ர மறைய (vikra maRaiya) : all of whom were rendered powerless

எதிர் வீர உக்ரர் புதல்வோனே (edhir veera ugrar pudhalvOnE) : when SivA (as Veerabhadra) invaded fiercely and bravely; You are the Son of that SivA!

அழகிய கலாப கற்றை விகட மயிலேறி (azhagiya kalApa katrai vikata mayilERi) : Mounted on the beautiful peacock with pretty feathers,

எட்டு அசலமிசை வாகையிட்டு வரும் வேலா (ettu achalamisai vAgaiyittu varum vElA) : You drive around the eight mountains triumphantly, Oh VElA,

அடல் அசுரர் சேனை கெட்டு முறிய (adal asurar sEnai kettu muRiya) : Defeating the powerful armies of the demons,

மிக மோதி வெட்டி (miga mOdhivetti) : and knocking down and destroying them,

அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே. (amararsiRai meeLavitta perumALE.) : You secured the release of the Celestials from the prisons, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே