367. சீதமலம் வெப்பு


ராகம்: பீம்ப்ளாஸ் தாளம்: ஆதி
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
மானபிணி சுற்றியுடலூடே
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
தீதுவிளை விக்கவருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம தற்குளழியாமுன்
தாரணி தனக்கு ளாரண முரைத்த
தாள்தர நினைத்துவரவேணும்
மாதர்மய லுற்று வாடவடி வுற்று
மாமயிலில் நித்தம் வருவோனே
மாலுமய னொப்பி லாதபடி பற்றி
மாலுழலு மற்றமறையோர்முன்
வேதமொழி வித்தை யோதியறி வித்த
நாதவிறல் மிக்கஇகல்வேலா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்தபெருமாளே.

Learn The Song



Raga Bhimplas / Abheri (Janyam of 22nd mela Karaharapriya) -

Arohanam: S G2 M1 P N2 S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S


Paraphrase

சீத மலம் வெப்பு வாத மிகு பித்தமான பிணி சுற்றி உடலூடே (seetha malam veppu vAtha migu piththam Ana piNi sutri udalUdE) : Dysentery, fever, rheumatism, acute biliousness and similar diseases that afflict this body; சீதபேதி, காய்ச்சல், வாதம், மிகுந்துவரும் பித்தம் என்ற நோய்களெல்லாம் சூழ்ந்துள்ள இந்த உடலினுள்

சேரும் உயிர் தப்பி ஏகும் வ(ண்)ணம் (serumuyir thAppi yEgum vaNam:) : make the life contained herein to slip away from it; சேர்ந்துள்ள உயிர் போகும்படி அதிக தீமை உண்டாகும்படி வருகின்ற சமயத்தில்

மிக்க தீது விளைவிக்க வரு போதில் (mikka theedhuviLai vikka varupOdhil) : amidst excruciating distress. At that very moment,

தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியா முன் (thAdhaiyodu makkaL needhiyodu dhukka sAgaram adhaRkuL azhiyAmun) : my father and children drown in the sea of grief as is the worldly norm. Before they sink in grief, என் தந்தையும், மக்களும் உலக நியதிப்படி துயரக்கடலுள் மூழ்கிப்போய் அழியும் முன்பு,

தாரணி தனக்குள் ஆரணம் உரைத்த தாள் தர நினைத்து வரவேணும் (dhAraNi thanakkuL AraNa muraiththa thALt hara ninaiththu varavENum) : kindly consider coming to me to grant Your hallowed feet that are praised by the scriptures of the world!

மாதர் மயலுற்று வாட வடிவுற்று (mAdhar mayal utru vAdavadi vutru) : The women (human souls) are in a trance enchanted by the beauty of Your form (the Supreme Soul); (ஜீவாத்மாக்காளாகிய) பெண்களெல்லாம் (பரமாத்மாவாகிய) உன்னழகில் மயங்கி காதலுற்று வாடும்படி, அழகிய திருவுருவக் காட்சி தந்து,

மா மயிலில் நித்தம் வருவோனே (mAmayilil niththam varuvOnE) : mounting the great peacock, You come before them everyday!

மாலும் அயன் ஒப்பிலாத படி பற்றி மால் உழலும் அற்ற மறையோர் முன் (mAlum ayan oppilAdhapadi patri mAl uzhalum atra maRaiyOr mun) : Vishnu, BrahmA and the stalwarts of scripture (Sanat Kumaras) who worship You with incomparable devotion and who are free from delusion -- all of them them were all once; திருமாலுக்கும், பிரமனுக்கும், ஒப்பில்லாதபடி தவநிலையில் உன் மீது அன்பு வைத்து அன்பில் மயங்கித் திரியும் மற்றைய வேத சிரேஷ்டர்களுக்கும் (சனகாதி முனிவர்களுக்கு) முன்பொரு காலத்தில்
or
Once, the Brahmins, whose eminence surpassed those of the enlightened Lord Vishnu and Brahma, sought to realize the Secret Knowledge மாலும் பிரமனும் கூடத் தங்களுக்கு நிகரில்லை என்று சொல்லும் படியான வகையில் உன்னை வழிபட்டுத் தாம் ஆசை கொண்டுள்ள (அற்றம்) ரகசியப் பொருளை வேண்டி நின்ற சனகாதி அந்தணர்களுக்கு, முன்பு

வேதமொழி வித்தை ஓதி அறிவித்த நாத (vEdhamozhi vidhdhai Odhi aRiviththa nAtha) : You taught them the true significance of VEda ManthrA, Oh Great Master!

விறல் மிக்க இகல் வேலா(viRal mikka igalvElA) : You hold the spear, renowned for its immense strength and vigour! வீரமிக்க வலிமை வாய்ந்த வேலை உடையவனே,

மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி ( mEl asurar itta dhEvar siRai vetti) : You destroyed the prisons in which the demons had previously locked up the celestials

மீள விடுவித்த பெருமாளே.(meeLa viduviththa perumALE.) : and liberated the DEvAs to return to the Celestial Land, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே