372. ஞானா விபூஷணி
Learn The Song
Raga Kanada (Janyam of 22nd mela Karaharapriya)
Arohanam: S R2 P G2 M1 D2 N2 S Avarohanam: S N2 P M1 G2 M1 R2 SParaphrase
ஞானா விபூஷணி கார் அணி காரணி (gnAnA vibUshaNi kAraNi kAraNi) : She wears a unique ornament called the Knowledge; She is of the hue of dark cloud, She remains the Causal One for everything; ஞானத்தை விசேஷமான அணிகலனாகக் கொண்டவள், கரிய நிறம் கொண்டு, எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவள்,
காமா விமோகினி வாகினி யாமளை (kAmA vimOgini vAgini yAmaLai) : She is the enchantress who instils desire in all lives; She is the Goddess who did penance under the shade of a pAthiri tree (at ThiruppAthirip puliyUr); She has an emerald-green complexion; காமத்தை உயிர்களுக்கு ஊட்டும் சிறந்த மோகினி, பாதிரி மர நிழலில் சிவபெருமானைப் பூஜித்த உமை, மரகதப் பச்சை நிறத்தி; திருப்பாதிரிப் புலியூர் என்னும் தலத்தில் பார்வதி சிவபெருமானது அருளைப் பெற பாதிரி மரத்தின் நிழலில் தவம் செய்தாள்., வாகினி (vaagini) : பாதிரி மரம் (Stereospermum suaveolens/ Bignonia suaveolens); Devi Parvathi did penance under the shade of this tree at Thiruppathiri puliyoor.
மா மாயி பார்வதி தேவி குணாதரி ( mA mAyi pArvathi thEvi guNAthari) : She is the great illusionist; She is PArvathi, the possessor of all virtues; மாயையில் வல்லவள், பார்வதி தேவி, நற் குணங்களை உடையவள்,
உமையாள் தன் நாதா (umaiyAL than nAthA) : and She is UmAdEvi whose consort is Lord SivA; (ஆகிய) உமா தேவியின் தலைவரும், ,
க்ருபாகர தேசிகர் தேசிக (krupAkara thEsikar thEsika) : and You are the Master of that compassionate SivA! அருளுக்கு இருப்பிடமானவரும் ஆன சிவபெருமானுக்கும் குருவே,
வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல் ஈசா ( vEthAkamE aruL thEvarkaL thEva nal eesA) : You graciously taught Him the VEdAs and the scriptural texts, Oh Lord of Lords! You are the most virtuous Lord; (சிவனுக்கு) வேதாமங்களை அருளிய தேவதேவனே, நல்ல ஈசனே,
சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே (sadA paramEsar sarvEsuri murugOnE) : You are the child of the great Lord SivA, with matted hair, and the Supreme Goddess, PArvathi! சடையை உடைய பரமேசுரர், எல்லாவற்றுக்கும் தலைவியாகிய ஈசுவரி இருவருடைய குழந்தையே,
தேன் ஆர் மொழீ வ(ள்)ளி நாயகி நாயக ( thEn Ar mozhee va(L)Li nAyaki nAyaka) : You are the consort of VaLLi whose speech is sweet like honey! தேன் போலும் இனிய மொழிகளைப் பேசும் வள்ளி நாயகிக்குக் கணவனே,
வான் நாடு உளோர் தொழு மா மயில் வாகன (vAn nAdu uLOr thozhu mA mayil vAkana) : You mount the great peacock that is worshipped by all the DEvAs in the land of celestials! விண்ணுலகத்தில் உள்ளோர்கள் வணங்கும் சிறந்த மயில் வீரனே,
சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய மணவாளா ( sEN ALum mAnin manOkaram Akiya maNavALA) : You are also the beloved consort of DEvayAnai, who is the deer-like damsel ruling the celestial kingdom! விண்ணுலகத்தை ஆளும் இந்திரனின் மகளான தேவயானையின் இனிமையான கணவனே, சேண் (sEN) : spacious, sky;
சீர்பாத சேகரன் ஆகவு நாயினன் மோகா விகார விடாய் கெட ஓடவெ (seerpAtha sEkaran Agavu nAyinan mOkA vikAra vidAykeda Odave) : In order that the thirst for lust that afflicts me is destroyed and driven away from me, a wretched dog holding Your hallowed feet upon my head, உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய, நாயினும் இழிந்த, அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஓட்டம் பிடிக்க,
சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே (seerAkavE kalaiyAl unai Othavum aruLvAyE:) : bless me kindly with the ability to sing Your glory in artistic language! நன்றாக கலை ஞானத்துடன் உன்னை நான் பாட அருள்வாயாக.
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட (pENArkaL neeRu athu idA amaNOrkaLai chUr AdiyE kazhu meethinil ERida) : Those camaNAs never respected You nor did they wear the holy ash; You thrashed them (in debate) leaving them stranded and dazed, eventually sending them to the gallows; (உன்னைப்) போற்றாதவர்களும், திரு நீற்றை அணியாதவர்களுமாகிய சமணர்களை அச்சத்துடன் சுழற்சி கொள்ளுமாறு (வாது செய்து) அலைத்து, கழுவில் ஏறும்படிச் செய்து,
கூன் ஆன மீனன் இடேறிட கூடலில் வருவோனே (kUn Ana meenan idERida kUdalil varuvOnE) : and You came to Madhurai (as ThirugnAna Sambandhar) and uplifted (by straightening his back) the hunch-backed king, PANdiyan, whose staff has the emblem of fish! கூனனாயிருந்த, மீன் கொடியை உடைய, பாண்டியன் (கூன் நீங்கி) ஈடேறுமாறு மதுரைக்கு (ஞானசம்பந்தராகச்) சென்றவனே,
பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன் (pEr ANmaiyALan nisAsarar kOn iru kURAka vALi thodu ragunAyagan) : He was a very valorous one, leading the clan of the demons; that RAvaNan's body was split into two by the arrow wielded by RaghurAman மிக்க வீரம் கொண்டவனும், அரக்கர்கள் அரசனுமான இராவணன் இரண்டு பிளவாக அம்பைச் செலுத்திய ரகுராமன்,
பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே (pU vAyan nAraNan mAyan irAgavan marugOnE) : whose mouth resembles a flower; He is Lord NArAyaNan, the great mystic one who came as RAghavan; and You are His nephew! தாமரை மலரிதழ் ஒத்த வாயை உடைய நாராயண மூர்த்தி, மாயவன் ஆகிய இராகவனுடைய மருகனே,
வாழ் நாள் படா வரு சூரர்கள் மாளவெ (vAzh nAL padA varu chUrarkaL mALavE ) : The demons came to the battlefield to perish; வாழ் நாள் அழியும்படி வந்த சூரர்கள் இறக்க,
சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட ( sEN nAdu uLOr avar veedu eedERida) : the celestials living in the golden land prospered and flourished; விண்ணுலகத்தில் வாழும் தேவர்கள் வீடாகிய பொன்னுலகம் ஈடேறி வாழ,
கோன் ஆக வரு நாத குரூ பர குமரேசா (kOn Aka varu nAtha kurU para kumarEsA) : as You came as the leader of the army, Oh Lord! Oh Great Master, Lord KumarA! சேனைக்குத் தலைவனாக வந்த நாதனே, குருபரனே, குமரேசனே,
வாசாம் அகோசரமாகிய வாசக (vAsA makOsaramAkiya vAsaka) : Your words are beyond the reach of any word, Oh Lord! வாக்குக்கு எட்டாத திருவாக்கை உடையவனே, அகோசரம் (agOcharam) : beyond sensory perception; the supreme being; 'gochar' literally means pasture ground for cattle; perceptible; அறியப்படாமை, புலன்களுக்குப் புலப்படாமை;
தேச ஆதியோர் அவர் பாதம் அதே தொழ (thEsa AthiyOr avar pAtham athE thozha) : The people in all the countries prostate at Your hallowed feet; நாடுகள் பலவற்றிலும் உள்ளவர்கள் உனது திருவடிகளைத் தொழுது நிற்க,
பாசா விநாசகனாகவும் மேவிய பெருமாளே. ( pAsA vinAsakanAkavum mEviya perumALE.) : and You prevail as the Lord removing all their attachments, Oh Great One! பாசங்களை நீக்குபவனாக விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே.
Comments
Post a Comment