373. தசையும் உதிரமும்


ராகம் : பாகேஸ்ரீஅங்கதாளம் ( 7½)
1½ + 2 + 2 + 2
தசையு முதிரமு நிணமொடு செருமிய
கரும கிருமிக ளொழுகிய பழகிய
சடல வுடல்கடை சுடலையி லிடுசிறுகுடில்பேணுஞ்
சகல கருமிகள் சருவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
சவலை யறிவினர் நெறியினை விடஇனி யடியேனுக்
கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு
வசன முறஇரு வினையற மலமற
இரவு பகலற எனதற நினதறஅநுபூதி
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்
இறுதி யறுதியி டவரிய பெறுதியை
இருமை யொருமையில் பெருமையை வெளிபடமொழிவாயே
அசல குலபதி தருமொரு திருமகள்
அமலை விமலைக ளெழுவரும் வழிபட
அருளி அருணையி லுறைதரு மிறையவளபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை
அதல முதலெழு தலமிவை முறைமுறை
அடைய அருளிய பழையவ ளருளியசிறியோனே
வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி
மவுன மருளிய மகிமையு மிமையவர்
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும்வடிவேலும்
மயிலு மியலறி புலமையு முபநிட
மதுர கவிதையும் விதரண கருணையும்
வடிவு மிளமையும் வளமையு மழகியபெருமாளே.

Learn The Song

>

Raga Bageshri (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S G2 M1 D2 N2 S    Avarohanam: S N2 D2 M1 P G2 M1 R2 S

Paraphrase

தசையும் உதிரமும் நிணமொடு செருமிய கரும கிருமிகள் ஒழுகிய பழகிய சடல உடல் (thasaiyum uthiramum niNamodu serumiya karuma kirumigaL ozhukiya pazhagiya sadala udal) : This inert body closely packed with muscles, blood and flesh and filled with active germs; சதை, இரத்தம், மாமிசம் ஆகியவை நெருங்கியுள்ள, செயலாற்றல் மிக்க புழுக்கள் இருந்து பழகும், அறிவில்லாத ஜடப்பொருளாகிய உடல், செருமிய (serumiya) : நெருங்கியுள்ள

கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் (kadai sudalaiyil idu siRu kudil pENum) : is a little cottage that will be ultimately consigned to the cremation ground. Cherishing and nourishing such a body, இறுதியில், சுடுகாட்டில் இடப்படுகின்ற சிறிய வீடு, (இதைப்) போற்றி வளர்க்கும்

சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் (sakala karumikaL saruviya samayikaL sariyai kiriyaikaL thavam enum avar silar) : Many ritualists, religious fanatics, and a few people hanging on to methods of worship through offerings and meditation, (சாத்திர முறைப்படி)அனைத்துக் கிரியைகளையும் செய்பவர்கள், போராடுகின்ற சமய வாதிகள், சரியை, கிரியை, தவம் என்று சொல்லும் சிலர் , கருமிகள் (karumigaL) : சாஸ்திரப்படி சகல கிரியைகளையும் செய்பவர்கள் ; சருவிய (saruviya) : போராடுகின்ற;

சவலை அறிவினர் நெறியினை விட (savalai aRivinar neRiyinai vida) : and confused and unwise ones. I wish to give up the methods of all these people. மனக் குழப்பம் உள்ள அறிவில்லாதவர்கள் ஆகியோர் கொண்டுள்ள மார்க்கத்தை நான் விட்டொழிக்க,

இனி அடியேனுக்கு இசைய இது ஒரு பொருள் என அறிவு உற ( ini adiyEnukku isaiya ithu oru poruL ena aRivu uRa) : In order that I realize the True Spiritual Knowledge; இதுதான் ஞானப் பொருள் என்று என் மனதில் படும்படி,

ஒரு வசனம் உற இரு வினை அற மலம் அற (oru vasanam uRa iru vinai aRa malam aRa) : I should receive the incomparable spiritual upadesa, sever both my good and bad deeds and destroy my three major blemishes (namely, arrogance, karma and delusion); ஒப்பற்ற உபதேசத்தை நான் பெறவும், நல்வினை, தீவினை எனப்படும் இருமைகள் நீங்கவும், எனது (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் நீங்கவும்,

இரவு பகல் அற எனது அற நினது அற ( iravu pagal aRa enathu aRa ninathu aRa) : the two states of uniqueness and commonness of the soul must be gone; my possessiveness must perish; and the duality (the distinction between You and me) must go. (ஆன்மாவின்) கேவல சகல நிலைகள் நீங்கவும், என்னுடைய மமகாரம் ஒழியவும், உன்னுடைய துவித நிலை (அதாவது நீ வேறு, நான் வேறு என்ற தன்மை) நீங்கவும்,

அநுபூதி இனிமை தரும் ஒரு தனிமையை (anubUthi inimai tharum oru thanimaiyai) : It is Truth based on experience; It is a matchless and prominent state that gives eternal bliss; அனுபவ உண்மையை, இன்பத்தைத் தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை,

மறைகளின் இறுதி அறுதி இட அரிய பெறுதியை (maRaikaLin iRuthi aRuthi ida ariya peRuthiyai) : It is such a rarity that even the pinnacles of the VEdAs cannot describe It with certainty; வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவு செய்து கூறுதற்கு அரிதான பேற்றினை , பெறுதி (peRuthi) : பேறு

இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே (irumai orumaiyil perumaiyai veLipada mozhivAyE) : Kindly preach to me the grandeur of merger of Sakthi and SivA, which are none other than an eternal immutable existence! சக்தி, சிவம் என்னும் இரண்டு பேதங்களும் ஒன்றுபட்ட தன்மையின் பெருமை விளங்குமாறு அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.
சிவ சக்தி இருமை. இருமை ஒருமையில் பெருமை என்பது ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்து ஒன்றாவதின் பெருமை. மேலும், இது சிவத்தின் ஐந்து முகங்களும் சக்தியின் ஒரு முகமும் ஒன்றுபட்டு ஆறுமுகம் கொண்ட ஒரு திருவுருவமான ரகசியப் பொருளையும் இது குறிக்கும்.

அசல குல பதி தரும் ஒரு திரு மகள் (achala kula pathi tharum oru thiru makaL) : Lord HimavAn, the King of the mountains, delivered this matchless and beautiful daughter, PArvathi;

அமலை விமலைகள் எழுவரும் வழிபட (amalai vimalaigaL ezhuvarum vazhipada) : She is unblemished; She is worshipped by all the seven immaculate Divine Mothers; களங்கம் அற்றவள், தூய்மையான சப்த மாதர்கள் ஏழு பேரும் (தன்னை) வணங்க

Once Parvati Devi playfully closed Shiva's eyes and the entire universe went dark. To wash away this sin, Parvati did penance at Kanchi on the banks of Kambai river. Shiva was pleased, and Parvati asked for the Lord's left side Shiva then instructed Parvathi to do further tapasya at Thiruvannamalai. Accordingly, Devi performed penance at Sage Gautama's hermitage at Thiruvannamalai and finally occupied the Lord's left side. The seven mothers guarded and protected the hermitage when Parvati was deeply immersed in meditation.

அருளி அருணையில் உறை தரும் இறையவள் அபிராமி (aruLi aruNaiyil uRai tharum iRaiyavaL abhirAmi) : She is graciously seated in ThiruvaNNAmalai; She is extremely charming;

அநகை அநுபவை அநுதயை அபிநவை (anagai anupavai anuthayai abinavai) : She is Pure without any sin; She is experienced in the Spiritual Knowledge; She is full of compassion; She is for ever new and the leading light; பாவம் அற்றவள், ஞான அனுபவம் உடையவள், காருண்யம் மிக்கவள், புதுமையானவள்,

அதல முதல் எழு தலம் இவை முறை முறை அடைய அருளிய பழையவள் (athala muthal ezhu thalam ivai muRai muRai adaiya aruLiya pazhaiyavaL) : She is the Old Traditional One who blesses, one and all, in the most complete and orderly manner, in the seven worlds, starting with the athala world; அதலம் முதலான ஏழு உலகங்களுக்கும் முறைப்படி முற்றிலுமாக அருள் செய்த பழமை வாய்ந்தவள் ஆகிய உமாதேவி பெற்றருளிய குழந்தையே,

அருளிய சிறியோனே (aruLiya siRiyOnE) : You are the child of such a great Mother, UmAdEvi!

வசுவ பசுபதி மகிழ் தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் (vasuva pasupathi makizh thara oru mozhi mavunam aruLiya magimaiyum) : Lord SivA, who is in the form of fire, was elated when You taught Him the method of mastering the art of silence; அக்கினி சொரூபியாகிய சிவ பெருமான் மகிழும்படி ஒப்பற்ற உபதேச மொழியான மவுன உபதேசத்தை அவருக்கு அருளிய விசேஷப் பெருமையும், வசு = அக்கினி தேவன்;

இமையவர் மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடிவேலும் (imaiyavar marapil vanithaiyum vanasarar puthalviyum vadivElum) : DEvayAnai, the damsel belonging to the Celestials; VaLLi, the belle of the hunter-tribe; Your sharp Spear;

மயிலும் இயல் அறி புலமையும் உப நிட மதுர கவிதையும் விதரண கருணையும் (mayilum iyal aRi pulamaiyum upa nida mathura kavithaiyum vitharaNa karuNaiyum) : Your Peacock; Your proficiency in literary Tamil; Your composition of ThEvAram songs consisting of all the concepts of the scriptures; Your magnanimous, compassionate and charitable disposition; மயிலும், இயற்றமிழில் வல்ல புலமையும், உபநிஷதக் கருத்துக்கள் அடங்கிய தேவாரமும், கொடைத் திறம் நிறைந்த உனது கருணையும்,

வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே. (vadivum iLamaiyum vaLamaiyum azhakiya perumALE.) : Your Divine shape, youthfulness and magnificence are all radiating everywhere, Oh Handsome and Great One!

இராப்பகல் அற்ற இடம்

மனிதன் மூன்று நிலைகளில் சஞ்சரிப்பவன். இறைவன் இந்த மூன்றுநிலைகளுக்கும் அப்பாற்பட்டவர். நாம் தூங்கும்போது ஒன்றும் அறியாமல் தூங்குகிறோம். விழித்திருக்கும்போது எல்லாவற்றையும் கண்டு உணர்ச்சி வசப்படுகிறோம். ஞானிகளுக்கோ தூக்கம், விழிப்பு இரண்டும் ஒன்றுதான். அவர்கள் இந்த இரண்டு அவஸ்தைகளையும் கடந்தவர்கள். தூக்கத்தில் எப்படி இந்திரியங்கள் எல்லாம் அடங்கி நாம் தூங்குகிறோமோ அப்படி அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும்போது இருக்கிறார்கள். விழித்திருந்தாலும் அவர்கள் மனம் அலையாது. அவர்களுக்கு இரவும் இல்லை; பகலும் இல்லை. அவர்கள் அறிவும் அறியாமையும் அற்ற இடத்தில் இருப்பவர்கள்.

மனிதன் மூன்று நிலைகளில் மாறிமாறி விழித்திருக்கிறான், கனவு காண்கிறான், அல்லது ஆழ்ந்து தூங்குகிறான். இவை நனவு நிலை, கனவு நிலை, தூக்க நிலை எனப்படுகின்றன.

விழித்திருக்கும்போது புலன்கள் செயல்படுகின்றன. இந்தப் புலன்கள் புறவுலகுடன் தொடர்புகொண்டு வரும் அனுபவங்களைக் மனம் பதிவு செய்கிறது. 'சகலம்' எனப்படும் இந்நிலையில் மூன்று மலங்களும் உடையவர்களாக இருக்கிறார்கள்.

தூக்கத்தில் கனவு காணும் தூக்கமும் விழிப்பும் அற்ற நிலையில் பிராண சக்திகள் மட்டுமே செயல்படும். கண், வாய், மூக்கு, செவி, உடல் ஆகிய பொறி ஐந்தும் செயல்படாது. ஆனால் பார்த்தல், ருசித்தால், நுகர்தல், கேட்டல். உணர்தல் ஆகிய புலன் ஐந்தும் செயல் படும். புலன்கள் செயல்படாமல் மனத்தில் ஒடுங்குவதால் எந்தப் புற அனுபவமும் இல்லை. கனவுகள் காணும் இந்த நிலையை 'கேவலம்' என்பார்கள்.

ஆழ்ந்த உறக்க நிலையில் விழிப்பும் இல்லை, கனவும் இல்லை. பொறிகளும் புலனும் வேலை செய்யாது. விழித்திருக்காவிட்டாலும், கனவு காணாவிட்டாலும் அந்த ஆழ்ந்த தூக்க நிலையை நாம் அனுபவிக்கிறோம். ஏனெனில் தூங்கி எழுந்த பிறகு நேற்று நன்றாகத் தூங்கினேன் மிகவும் ஆன்நதமாக இருந்தது என்று கூறுகிறோம். இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. கண், காது போன்ற நமது புலன்கள், உணர்வுமனம், ஆழ்மனம் அனைத்தும் ஓய்வில் ஆழ்ந்துவிடுவதால் இங்கே புறவுலக அனுபவங்களும் இல்லை; அகவுலக அனுபவங்களும் அதாவது கனவும் இல்லை. மனம், ஆழ்மனம், புத்தி, சித்தம் ஆகியவை நான்-உணர்வில் ஒடுங்கி இருக்கின்றன. ஆழ்ந்த தூக்க நிலையிலுள்ள ஒரே அனுபவம் ஆன்ந்தம். அதனால்தான் தூங்கி எழுந்ததும் நான் ஆனந்தமாகத் தூங்கினேன் என்று நம்மால் கூற முடிகிறது. ஆனாலும் இந்த ஆனந்த உணர்வு எழுந்ததும் நீங்கிவிடும் தற்காலிக உணர்வு. 'சுஷுப்தி' என்று கூறப்படும் சுத்த நிலை.

நான்காம் பேருறக்கம் நிலை பிரபஞ்ச உணர்வு கடந்த, அமைதிமயமான, மங்கலமான, இரண்டற்ற நிலையாகும். ஐந்து பொறியும் அடங்க, மனம் சலனம் இல்லாமல் நிற்க, நாம் இறைவனுடைய அருள் ஒளியில் நிற்கும் நிலைதான் அது. நிழல் இல்லாது ஒளி இல்லாது வேறு பொருள் இல்லாத நிலை அது. அந்த நிலையில் நின்றால் இன்பத்தை நுகர முடியும். இதுவே இறைநிலை. ஆத்மா, பரமாத்மா என்ற வேறுபாடு இல்லாமல் இரண்டறக் கலக்கும்போது அங்கே இருளுக்கும் அறியாமைக்கும் இடம் இல்லை. பசுவும் பதியும் இரண்டறக் கலந்துவிடுகிற நிலையில் பாசம் அங்கே தன்னுடைய வேலையைச் செய்ய இயலாது. அங்கே நினைப்பு மறப்பு இல்லை; இருள் ஒளி இல்லை. இதைத் தான் 'அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே' என்று கந்தர் அநுபூதியில் அருணகிரியார் பாடுகிறார். இவற்றை நூல்கள் சகல கேவலம் என்று சொல்கின்றன.

சகலம் என்பது நனவு நிலை; கேவலம் என்பது தூக்க நிலை. அறிவு என்பது சகலம்; அறியாமை என்பது கேவலம். அறிவு என்பது பகல்; அறியாமை என்பது இரவு. அறிவு என்பது தெளிவு: அறியாமை என்பது மயக்கம். இந்த இரண்டும் இல்லாத நடு நிலை இரவும், பகலும் அற்ற நிலை. அந்த நடு நிலையில்தான் மனம் அடங்கி இருக்கும். கடவுளுடைய திருவுருவம் நன்றாகப் பதியும். அத்தகைய இடம் ஒன்றை எனக்குக் காட்டி, தியானம் பலிக்கும்படியாகச் செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தை அருணகிரியார் சொல்கிறார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே