411. மனைமக்கள் சுற்றம்


ராகம்: ராமப்ரியாதாளம்: திச்ர ஏகம் (3)
மனைமக்கள் சுற்றமெனுமாயா
வலையைக்க டக்க அறியாதே
வினையிற்செ ருக்கி யடிநாயேன்
விழலுக்கி றைத்துவிடலாமோ
சுனையைக்க லக்கி விளையாடு
சொருபக்கு றத்தி மணவாளா
தினநற்ச ரித்ரமுளதேவர்
சிறைவெட்டிவிட்டபெருமாளே.

Learn The Song



Paraphrase

மனைமக்கள் சுற்றம் எனு மாயா வலையைக் கடக்க அறியாதே (manaimakkaL sutRam enum mAyA valaiyaik kadakka aRiyAthE) : I do not know how to break away from the delusory web of wife, children and relatives. மனைவி, மக்கள், உறவினர் என்ற மாய வலையை விட்டு வெளியேறத் தெரியாமல்,

வினையிற் செருக்கி அடிநாயேன் (vinaiyiR cherukki adinAyEn) : I, the lowly dog, pride myself on all my deeds என் வினைகளிலே மகிழ்ச்சியும் கர்வமும் அடைந்த நாயினும் கீழான அடியேன்,

விழலுக்கு இறைத்து விடலாமோ (vizhalukki Raiththu vidalAmO) : and am squandering my life away; is this right? வீணுக்குப் பயனில்லாமல் என் வாழ்நாளைக் கழித்திடுதல் நன்றோ?

சுனையைக் கலக்கி விளையாடு (sunaiyaikka lakki viLaiyAdu) : Dipping in and stirring the pond, She plays around a lot; சுனைக்குள் புகுந்து அதனைக் கலக்கி விளையாடும்

சொருபக் குறத்தி மணவாளா (sorupak kuRaththi maNavALA) : She has an exquisite demeanour; and You are the consort of VaLLi, the damsel of the KuRavAs.வடிவழகி வள்ளி என்ற குறத்தியின் மணவாளனே,

தின நற் சரித்ரம் உள தேவர் (thina naR charithram uLa dEvar) : The celestials, who follow the righteous path everyday, நாள்தோறும் நல்ல வழியிலேயே செல்லும் தேவர்களின்

சிறை வெட்டி விட்ட பெருமாளே.(siRai vetti vitta perumALE.:) : were freed by You from their prison, Oh Great One! சிறையை நீக்கி அவர்களை மீட்ட பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே