437. பொக்குப்பை


ராகம்: பஹுதாரிதாளம்: திச்ர ரூபகம் (5)
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக்குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக் கிரியார்தோய்
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
துக்கித்துக் கெய்த்துச்சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
துச்சற்றர்ச் சிக்கப்பெறுவேனோ
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்
செற்பத்ரக் கொக்கைப் பொரும்வேலா
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்
செச்சைக்கொத் தொப்பித் தணிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்
கட்கத்தத் தர்க்குப்பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
கச்சிக்குட் சொக்கப் பெருமாளே.

Learn The Song



Raga Bahudari (Janyam of 28th mela Hari Kambhoji; shadava-audava rāgam)

Arohanam: S G3 M1 P D2 N2 S    Avarohanam: S N2 P M1 G3 S


Paraphrase

பொக்கு பை கத்தம் தொக்கு பை (pokku pai kaththam thokku pai) : This body is a bag of blemishes, a bag full of faeces, குற்றங்கள் நிறைந்த பை, மலம் மிகுந்த பை, பொக்கு (pokku) : defect, fault, குற்றம்; கத்தம் (kaththam) : மலம்; தொக்கு(thokku): filled with; நிறைந்த;

குத்துப் பொய்த்து எத்துத் தத்துக் குடில் பேணி (kuththu poyththu eththu thaththu kudil pENi) : and is nothing but a cottage filled up with caustic words, falsehood, deceit and dangers. Hankering after such a body, சுடுசொல், பொய், வஞ்சகம், ஆபத்து இவைகள் எல்லாம் கலந்த குடிசையான இந்த உடலை விரும்பி, குத்து (kuththu) : சுடுசொல்; எத்து (eththu) : வஞ்சகம்; தத்து (thaththu) : danger, ஆபத்து;

பொச்சைப் பிச்சு அற்பக் கொச்சைச் சொற் கற்று (pocchai pichchu aRpa kocchai choR kaRRu) : I acquired mean words, reeking of abuse, insanity and pettiness. குற்றமானதும், பைத்தியம் கொண்டதும், அற்பமானதும், இழிவானதுமான சொற்களைக் கற்று, பொச்சை (pochchai) : குற்றமானது; பிச்சு (pichchu) : பைத்தியம்;

பொற் சித்ரக் கச்சுக் கிரியார் தோய் (poR chithrak kacchu giriyAr thOy) : I was snared by women with large bosoms, wearing strange and seductive blouses, அழகிய விசித்திரமான கச்சணிந்த பெருமார்புப் பெண்டிரைச் சேர்வதால் வரும்

துக்கத் துக்கத்திற் சிக்குப் பட்டிட்டு (thukka thukkaththiR chikku pattittu) : who threw me into the worst misery, கொடிய துக்கத்தில் மாட்டிக்கொண்டு

துக்கித்து எய்த்துச் சுழலாதே (thukkiththu eyththu chuzhalAthE) : making me grief-stricken, debilitated and worried! Getting out of such a rut, வேதனையுற்று, இளைத்து, மனம் சுழன்று சஞ்சலப்படாமல்,

சுத்தச் சித்தத்துப் பத்திப் பத்தர்க்கு ஒத்து (suththa chiththaththu paththi paththarkkku oththu) : will I ever be able to become like the chaste souls, with unblemished heart, devoted to You, பரிசுத்த மனதுடன் பக்தி பூண்ட பக்தர்களுக்கு இணையாக

சற்று அர்ச்சிக்கப் பெறுவேனோ (chatRu archchikka peRuvEnO) : and have the honour of offering You even a little bit of worship? சிறிதளவேனும் உன்னைப் பூஜிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

திக்குத் திக்கு அற்றுப் பை தத்து அத்திக்குச் செல் (thikku thikku atRu pai thaththu aththikku chel) : He was isolated without help from any quarter, and ultimately, he hid under the turbulent sea with green waves, எந்தத் திக்கிலும் உதவியின்றி, தனிப்பட்டு, கடைசியில் பச்சைநிற அலைகள் மோதும் கடலுக்குள்ளே போய்ச் சேர்ந்து, பை தத்து அத்தி - பசிய அலைமோதுகின்ற கடல்;

பத்ரக் கொக்கைப் பொரும் வேலா (pathrak kokkai porum vElA) : taking the shape of a leafy mango tree, You fought with that SUran, Oh great warrior with the Spear! இலைகளோடு கூடிய மாமரமாக மாறிய சூரனுடன் போர் செய்த வேலனே, கொக்கு (kokku) : mango tree;

செப்பச் சொர்க்கத்துச் செம்பொன் தத்தைக்கு (cheppa sogaththu chem pom thaththaikku) : DEvayAnai, the damsel belonging to the prosperous Celestial land looking like the reddish golden parrot, செம்மையான விண்ணுலகில் உள்ள செம்பொன் போன்ற கிளியாகிய தேவயானையை

செச்சைக் கொத்து ஒப்பித்து அணிவோனே (checchai koththu oppiththu aNivOnE) : is adorned by You with a garland of vetchi flowers! வெட்சி மலர்க் கொத்தால் அலங்கரித்து மாலை சூட்டுபவனே,

கக்கு அக்கைத் தக்க அக்கக்கட்கு அக்கு (kakku akkai thakka akkakkatku akku ) : Taking the bones (of BrahmA and others) He shapes them appropriately to fit His own body to wear as garland. (பிரமன் முதலியோர் சரீரத்தினின்றும்) சுழன்ற எலும்பை தகுந்தபடி தமது அங்கங்களுக்கு ஆபரணமாக ஆக்கி, (கக்கு) - கழன்ற, அக்கு = எலும்பு; அக்கை - எலும்பை, தக்க - தகுந்த; அக்கக்கட்கு - அங்கங்கட்கு, (தமது) அங்கங்களுக்கு, (அக்கு) - (ஆபரணமாக) ஆக்கிய,
மண்டையோடு மனிதனது நிலையாமையைக் காட்டுகிறது. இறைவர் சாமான்ய மனிதருடைய வெண்டலை மாலையை அணிந் திருக்கவில்லை. பிரமதேவன் முதலிய தேவர்களின் கபாலங்களை அணிந்திருக்கிறார். உலகம் மட்டும் அநித்தியம் அல்ல. இந்த உலகத்தைப் படைக்கிற பிரமனே அநித்தியம் என்பதை அந்த மண்டை ஒடுகள் காட்டுகின்றன. பற்பல படைப்புகளைக் கணந்தோறும் உண்டு பண்ணும் ஒரு பிரமா போய் மற்றொரு பிரமா வருவான். இப்படி வந்து போய்க்கொண்டே இருக்கிற பிரமாக்களின் கபாலங்களே ஆண்டவனது கழுத்தில் பெரிய மாலையாகத் தொங்குகின்றன. பிரமாவினால் படைக்கப்பட்ட மக்களாகிய நாம் ஏதோ என்றைக்கும் சத்தியமாக நித்தியமாக நிலைத்து நிற்கப் போவதாக எண்ணி வாழ்கிறோம்; நம்மைப் படைக்கிற அப்பனாகிய பிரமாவே அநித்தியமானவன் என்று தெரிந்து கொள்வதற்காகச் சிவபெருமான் பிரமாக்களின் தலைமாலையை அணிந்து கொண்டிருக்கிறான்.

அக்கி கண் கத்த அத்தர்க்குப் பெரியோனே (akkik kaN kaththa aththarkkup periyOnE) : and holds Agni (Fire) in the third eye on His forehead; He is the Father of the Universe; and You are that SivA's master! அக்கினியை கண்ணிலே வைத்த தலைவர் சிவபிரானுக்கு குருவான பெரியவனே, அக்கி கண் (akki kaN) : அக்னி கண் உடையவர்; அக்கி (akki) : அக்னி; க(ர்)த்த (ka(r)ththa) : chief, lord; க(ர்)த்த (ka(r)ththa) : தலைவர்;
சிவனின் மூன்று கண்களில் வலது கண் சூரியனையும், இடது கண் சந்திரனையும், நெற்றிக்கண் அக்னியையும் குறிக்கும்.

கற்றை பொற்று எத்தப் பெற்ற பொற் சிற்பக் (kaRRaip poRRu eththap peRRa poR chiRpak) : This town is noted for numerous songs in its praise and for beautiful sculptural carvings; திரளான துதிப்பாடல்களால் ஏத்தப் பெற்ற அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த

கச்சிக்குள் சொக்கப்பெருமாளே. (kacchikkuL chokkap perumALE.) : It is known as Kachchi (kAnjeepuram), and You are the handsome Lord seated here, Oh Great One! கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. .

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே