439. முட்டுப் பட்டு


ராகம் : பெஹாக்அங்கதாளம் (6)
1½ + 1½ + 3
முட்டுப் பட்டுக் கதிதோறும்
முற்றச் சுற்றிப்பலநாளும்
தட்டுப் பட்டுச் சுழல்வேனைச்
சற்றுப் பற்றக்கருதாதோ
வட்டப் புட்பத்தலமீதே
வைக்கத் தக்கத்திருபாதா
கட்டத் தற்றத்தருள்வோனே
கச்சிச் சொக்கப்பெருமாளே.

Learn The Song



Raga Behag (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 P N3 D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 M1 G3 R2 S

Paraphrase

'இந்த பிறவியோடு இந்த உலக வாழ்க்கை போதும், என்னை உன்னுடைய திருவடிகளிலே சேர்க்க வேண்டும்,' என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர். 'முட்டி மோதி இந்த வாழ்க்கையிலே நான் துன்பப்படுகிறேன். அன்பும் கருணையும் கொண்டு இந்த பிறவி சுழற்சியிலே அகப்பட்டுக் கொண்டிருக்கும் என்னை பற்றி தூக்கி விடக்கூடாதா,' என்று இறைஞ்சுகிறார். மூலாதாரத்திலிருந்து உச்சம்தலையில் ஏழாவது சக்கரமாகிய சஹஸ்ராரம் என சொல்லப்படும் வட்ட வடிவமான ஆயிரம் இதழ்கள் கூடிய புஷ்பத்திலே குண்டலினியை நிறுத்தியவர்கள் முருகனுடைய திருவடி ஸ்பர்சம் பெற்று மோக்ஷத்தை பெறுவார்கள். அதை நானும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

முட்டுப் பட்டுக் கதிதோறும் ( muttup pattu gathi thOrum) : Tossed about in various births, namely DEvA, human, devilish and animal lives, சங்கடப்பட்டு, நால்வகை பிறப்பிலும்; நால்வகை பிறப்பு: தேவ, மனித, நரக, விலங்கு என்பன; அல்லது – சராயுஜம் (கருப்பையில் தோன்றுவன - மனித, மிருக உயிர்கள்), அண்டஜம் (முட்டையில் தோன்றுவன - பறவைகள், பாம்பு, பல்லி, பூச்சி வகைகள்), உற்பீஜம் (விதைகளில் தோன்றுவன - மரம், செடி), சுவேதஜம் (வியற்வை அழுக்கில் தோன்றுவன - கிருமிகள்)

முற்றச் சுற்றிப் பலநாளும் ( mutra sutrip pala nALum) : I staggered aimlessly for a long long time. முழுவதுமாக அலைந்து திரிந்து பல பிறவியிலும்

தட்டுப் பட்டுச் சுழல்வேனை (thattup pattu suzhalvEnai) : and feel confused and bewildered. தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற என்னை

சற்றுப் பற்றக் கருதாதோ (satrup patrak karudhAdhO) : Can You not hold and take care of me even a little? சிறிதாவது கவனித்துக்கொள்ள நினைத்தலாகாதோ?

வட்டப் புட்பத் தலமீதே (vattap pushpath thala meedhE) : My heart is just a round lotus seat upon which வட்டமாகிய என் இதயகமல பீடத்தின் மேலே

வைக்கத் தக்கத் திருபாதா (vaikkah thakkath thiru pAdhA) : Your lovely feet deserve to be placed for me to worship வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை உடையவனே,

கட்டத்து அற்றது அருள்வோனே (kattaththu atraththu aruLvOnE) : You always shower grace on me at the time of my distress. துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவனே, கட்(ஷ்)டம்(katta(shta)m) : trouble; அற்றம்(atram) : சமயம்;

கச்சிச் சொக்கப் பெருமாளே.(kachchi chokkap perumALE.) : You are the handsome Lord of KAnchipuram, Oh Great One! காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே