443. குருதி புலால்


ராகம்: ரஞ்சனிஅங்கதாளம்
2 + 2½ + 1½ + 2 (8)
குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பனபொதிகாயக்
குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செயஅதனாலே
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடுந்தி யான மொன்றையுமுயலாதே
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிடஅருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கயகரவீரா
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
உளமதில் நாளுங்கு லாவி யின்புற வுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
அரிகரி கோவிந்த கேச வென்றிரு
கழல்தொழு சீரங்க ராச னண்புறுமருகோனே
கமலனு மாகண்ட லாதி யண்டரு
மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள்பெருமாளே.

Learn The Song



Raga Ranjani (Janyam of 59th mela Dharmavati)

Arohanam: S R2 G2 M2 D2 S    Avarohanam: S N3 D2 M2 G2 S R2 G2 S

Paraphrase

குருதி புலால் என்பு தோல் நரம்புகள் (kuruthi pulAl enbu thOl narambugaL) : Blood, flesh, bones, skin, nerves, இரத்தம், ஊன், எலும்புகள், தோல், நரம்புகள், என்பு (enbu) : bone;

கிருமிகள் மால் அம் பிசீத மண்டிய குடர் (kirumigaL mAl am piseetha maNdiya kudar) : germs, air, water, meat, dense intestines, கிருமிகள், காற்று, நீர், மாமிசம், நெருங்கிய குடல்கள், அம் (am) : water; பிசீதம் (piseetham) : flesh;

நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி காயக் ( niNam rOmangaL mULai enbana podhi kAya) : fat, hair, and brain - all these fill up this body. கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த உடல் நிணம் (niNam) : fat;

குடிலிடையோர் ஐந்து வேடர் ஐம்புல (kudilidai Or aindhu vEdar aimpula) : In this cottage, there are five hunters constituting the sensory organs; என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்கள்,

அடவியிலோடும் துராசை வஞ்சகர் (ataviyil Odum dhurAsai vanchagar) : who run around this jungle of five senses and who are the worst cheats with lustful desires. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலக் காட்டிலே ஓடுகின்ற கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள், அடவி (atavi) : forest;

கொடியவர் மாபஞ்ச பாதகம் செய (kodiyavar mA pancha pAthagam seya ) : There are evil people who carry on with the five worst offences மகா பொல்லாதவர்கள், பஞ்சமா பாதகச் செயல்களை செய்ய,
The Five heinous sins (crimes) are: murder, stealing, lying, drunkenness and abuse of the teacher.

அதனாலே சுருதி புராணங்கள் ஆகமம் பகர் (adhanAlE surudhi purANangaL Agamam pagar) : and because of that, they ignore the instructions (on the ways of worship) in VEdAs and PurAnAs, அதன் காரணமாக, வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்களில் சொல்லப்படுகின்ற

சரியை க்ரியா அண்டர் பூசை வந்தனை (sariyai kriyAvaNdar pUsai vandhanai) : such as sariyai, kiriyai, worship of DEvAs, prostrations, சரியை, கிரியை, தேவ பூஜை,

துதியொடு நாடும் தியானம் ஒன்றையு முயலாதே (thudhiyodu nAdum dhiyAnam ondraiyu muyalAdhE) : chanting and meditation: none of which methods I never attempted; வழிபாடு தோத்திரம், நாடிச் செய்யும் தியானம் முதலியவற்றில் ஒன்றையேனும் முயற்சித்து அநுஷ்டிக்காமல்

சுமடமதாய் வம்பு மால் கொளுந்திய திமிரரொடே (sumadamadhAy vambu mAl koLundhiya thimirarodE) : instead, I was roaming as a stupid and useless fellow, amidst arrogant people who provoked lascivious thoughts in me, அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் திமிரர் (thimirar) : those engulfed by the darkness of arrogance;

பந்தமாய் வருந்திய ( bandhamAy varundhiya) : and bonded with them and suffered. கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய

துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே (thurisaRa Anandha veedu kaNdida aruLvAyE) : To end such blemish, please bestow on me Your grace so that I can attain the blissful heaven! குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டு கொள்வதற்கும் நீ அருள்வாயாக.

ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும் (oru thani vEl koNdu neeL kravunchamum) : With a unique spear, You pierced the large mount of Krouncha; ஓர் ஒப்பற்ற வேலைக் கொண்டு, நெடிய கிரெளஞ்சமலையையும்,

நிருதரு மாவும் கலோல சிந்துவும் (nirudharu mAvum kalOla sindhuvum) : and also the demons and, SUran in the disguise of a mango tree, along with the seas roaring with waves, அசுரர்களையும், மாமரமாய் நின்ற சூரனையும், ஆரவாரிக்கும் கடலையும்; கலோல சிந்து (kalOla sinthu) : noisy/roaring sea; நிருதர் (niruthar) : demons; மா(mA) : mango tree;

உடை பட மோதும் குமார பங்கய கர வீரா(udai pada mOdhum kumAra pangaya kara veerA) : were all shattered to pieces when You fought with them with Your lotus-like hand, Oh warrior! உடைபட்டுப் போகுமாறு போர் புரிந்த குமாரனே, தாமரையொத்த கரங்களை உடைய வீரனே,

உயர் தவர் மா உம்பரான அண்டர்கள் (uyar thavar mA umbar Ana aNdargaL ) : Great sages, the Celestials living in heaven and சிறந்த தவ முநிவர்கள், மேலுலகவாசிகளான தேவர்கள்,

அடி தொழுதே மன் பராவு தொண்டர்கள் (adi thozhudhE man parAvu thoNdargaL) : Your devotees who prostrate at Your feet with devotion உனது திருவடிகளைத் தொழுது நன்கு துதிக்கும் அடியார்கள்,

உளமதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே (uLam adhil nALum kulAvi inbuRa uRaivOnE) : are all privileged to be blessed by Your happy presence in their hearts at all times! இவர்களது உள்ளத்தில் தினமும் விளையாடி இன்பமுற வீற்றிருப்போனே,

கருதிய ஆறங்க வேள்வி அந்தணர் (karudhiya ARanga vELvi andhaNar) : The vedic purohits who are all well-versed in the six aspects of the scriptures and who perform sacrificial rites ஆய்ந்து அறிந்த வேதத்தின் ஆறு அங்கங்களிலும் வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள்

அரிகரி கோவிந்த கேசவ என்று (ari hari gOvindha kEsava endru) : keep chanting "Hari, Hari, Govinda and Kesava" ஹரி ஹரி, கோவிந்தா, கேசவா என்று துதிசெய்து,

இரு கழல் தொழு சீரங்க ராசன் நண்புறு மருகோனே (iru kazhal thozhu seeranga rAjan aNbuRu marugOnE) : in praise of the two lotus feet of Sriranga RAjan (Vishnu) whose beloved nephew You are! இரு திருவடிகளையும் வணங்கப்பெற்ற ஸ்ரீரங்கநாதரின் அன்புமிக்க மருமகனே,

கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும் (kamalanum AkaNda lAdhi aNdarum) : BrahmA, seated on the lotus, IndrA (Aakandan) and other DEvAs பிரம தேவனும், இந்திரன் முதலான மற்ற தேவர்களும் ஆகண்டலன் (AkaNdalan) : Indra; பகைவர்களைக் கண்டிப்பவன், இந்திரன்;

எமது பிரான் என்று தாள் வணங்கிய (emadhu pirAn endru thAL vaNangiya) : proudly acclaim SivA as their Lord when worshipping His feet எங்கள் தலைவன் எனக் கூறி அடிபணிந்திடப் பெற்ற

கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்தருள் பெருமாளே.(karivanam vAzh jambu nAthar thandharuL perumALE.) : at this place, ThiruvAnaikkA, whose Lord JambunAthar (SivA) has blessed us with You, Oh Great One! திருவானைக்காவில் வாழ்கின்ற ஜம்புநாதர் தந்தருளிய பெருமாளே.

சரியை கிரியை என்றால் என்ன?

கர்ம வினைப்பயன்களின் காரணமாகப் பிறப்பெடுத்த நாம், கர்ம வினைகளை ஒழித்து, மீண்டும் பிறவாப் பேரின்ப நிலையை எட்டுவதற்கு சைவ சமயம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு முறைகளை சைவம் போதிக்கிறது.

சரியை - தாச மார்க்கம்: எல்லாமே கடவுள் என்று உணர்ந்து எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதும், ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படி. திருக்கோயில்களில் செய்யும் தொண்டு, சிவனடியார்களை உபசரித்தல், ஏழைகளுக்கு உதவுதல் எல்லாமே சரியை மார்க்கம்தான். சரியை என்ற வழியில் ஈசனை அடைந்த மகாஞானி திருநாவுக்கரச பெருமான்.

கிரியை - சற்புத்திர மார்க்கம்: மிகச் சரியான வழிமுறைகளுடன் பூஜைகள் செய்து இறைவனை அடையும் முறையே கிரியை. குருமார்களின் வழியே தீட்சை பெற்று ஈசனுக்கான சகல பூஜைகளையும் செய்வித்தல், மனதாலும் உடலாலும் எப்போதும் ஈசனை பூஜித்துக்கொண்டே இருத்தலும் இங்கு முக்கியமானது. ஞானசம்பந்த பெருமான் கிரியை வழியில் இறைவனை பூஜித்த மகாஞானி எனப் போற்றப்படுகிறார்.

யோகம் - சக மார்க்கம்: ஆழ்ந்த தவத்தால் சிவனோடு கலந்து அவரோடு தோழமைகொண்டு மேற்கொள்ளும் தவ வாழ்வே யோக மார்க்கம். நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், தவம், சமாதி ஆகிய எட்டு நிலைகளில் படிப்படியாகத் தேர்ச்சி பெற்று ஈசனை அடையும் முறையே யோகம். தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி பெருமான் ஈசனோடு தவத்தால் கலந்து வாழ்ந்ததால் யோக மார்க்கத்தில் சிறப்பானவராகக் கூறப்படுகிறார்.

ஞானம் - சன்மார்க்கம்: மேற்கூறிய எல்லா வழிகளிலும் ஈசனை வணங்கிய ஒருவர் இறுதியாக, எங்கும் நிறைந்த பரப்பிரம்மமே ஈசன் என்பதைத் தெளியும் நிலையே ஞான மார்க்கம். திருப்பெருந்துறையில் குருவைக் கண்டு ஞானமடைந்த மாணிக்கவாசகப்பெருமான் ஞான மார்க்கத்தில் ஈசனை அடைந்த மகாஞானி.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே