480. கனகசபை மேவு

ராகம் : கரஹரப்ரியா தாளம்: ஆதி
கனகசபை மேவு மெனதுகுரு நாத
கருணைமுரு கேசப் பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப்பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப்பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
மியல்புலியுர் வாழ்பொற்பெருமாளே.

Learn The Song

kanaka sabai

Paraphrase

கனக சபை மேவும் எனது குரு நாத (kanaka sabai mEvum enadhu gurunAtha): You are my Master dancing at the Golden Shrine of Chidhambaram பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் செய்யும் எனது குருநாதராகிய
Chidambaram, one of the Pancha Bhoota Sthalas, symbolizes the Aakasha Tattva. The residence of the soul or aatma sthanam is the cave of the heart. Just like our aatma is the center of our existence, the Kanaka Sabha is the center of existence of the entire universe.

கருணை முருகேசப் பெருமாள் காண் (karuNai murugEsap perumAL kAN): oh, merciful Murugesa, the Great One! கருணை நிறைந்த முருகேசப் பெருமாள் நீதான்.

கனக நிற வேதன் அபயமிட (kanaka niRa vEdhan abayam ida): When BrahmA, with a golden complexion, beseeched You for mercy, பொன்னிறத்து பிரமன் அபயம் என்று உன்னைச் சரணடைய,

மோது கரகமல சோதிப் பெருமாள் காண் (mOdhu kara kamala jOthi perumAL kAN): You knocked his head with Your lotus-like hand; You are that bright flame of knowledge and the Great One! தலையில் குட்டிய தாமரை போன்ற கையையுடைய ஜோதிப் பெருமாள் நீதான்.

வினவும் அடியாரை மருவி விளையாடு (vinavum adiyArai maruvi viLaiyAdu): You play joyfully with those devotees who seek You out to worship உன்னை ஆய்ந்து துதிக்கும் அடியார்களிடம் இணைந்து விளையாடுகின்ற

விரகு ரச மோகப் பெருமாள் காண் ( viragu rasa mOhap perumAL kAN): and show zeal, pleasure and love for them, You Great One! ஆர்வம், இன்பம், ஆசை அத்தனையும் உள்ள பெருமாள் நீதான்.

விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் (vidhi munivar dhEvar aruNagiri nAthar): You are BrahmA, You are all the sages, You are the DEvAs, You are SivA ruling AruNagiri and also பிரமன், முனிவர்கள், தேவர்கள், அருணாசல ஈஸ்வரர்,

விமல சர சோதிப் பெருமாள் காண் (vimala sara jOthip perumAL kAN): You are the Light that emanates from my pure exhaled breath, You Great One! மற்றும் பரிசுத்தமான என் மூச்சுக்காற்றில் உள்ள ஜோதிப் பெருமாள் எல்லாமே நீதான்.

சனகி மணவாளன் மருகன்(janaki maNavALan marugan): You are the nephew of Sri Rama, the Consort of JAnaki; ஜானகியின் மணவாளன் ஸ்ரீராமனின் மருமகன் என்று

என வேத சத மகிழ் குமாரப் பெருமாள் காண் (ena vEdhasatha magizh kumArap perumAL kAN): so speak a hundred scriptures with pleasure - You are that Kumaraswamy, the Great One! நூற்றுக்கணக்கான வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான்.

சரண சிவ காமி (saraNa sivakAmi ): SivagAmi (PArvathi), who protects all those who surrender to her and அடைக்கலம் அளிக்கும் சிவகாமி,

இரண குல காரி (iraNa kula kAri): destroys dynasties of all demons in the battlefield, போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள்,

தரு முருக நாமப் பெருமாள்காண் (tharu muruga nAmap perumAL kAN): delivered You, with the name of MurugA, the Great One! ஈன்றருளிய முருகன் என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான்.

இனிது வன மேவும் அமிர்த குற மாதொடு (inidhu vana mEvum amirtha kuRa mAdhodu): Well settled in the millet-field at VaLLimalai, is the sweet damsel of KuRavas, VaLLi, இனிய வள்ளிமலைத் தினைப்புனத்தில் இருந்த அமுதை ஒத்த குறப்பெண் வள்ளியுடன்

இயல் பரவு காதற் பெருமாள் காண் ( iyal paravu kAdhal perumAL kAN): and You are her affectionate lover and consort, Oh Great One! அன்பு விரிந்த காதல் கொண்ட பெருமாள் நீதான்.

இணையில் இப தோகை மதியின் மகளோடு (iNai il iba thOgai madhiyin magaLOdum ): You are also the consort of DEvayAnai, the peacock-like maiden reared by the unique elephant (AirAvatham), and ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற (தேவயானையாம்) அறிவு நிறைந்த பெண்ணுடன்

இயல் புலியுர் வாழ்பொற் பெருமாளே.(iyal puliyur vAzh poR perumALE.): You reside with her at the befitting town of PuliyUr (Chidhambaram), Oh Great One! தகுதிபெற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமாளே.

1 comment:

சீசி முப்புரக் காடு — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song cheechi muppura ( சீசி முப்புர ) in English, click the underlined hyperlink....

Popular Posts