Posts

Showing posts with the label ஏவினை நேர்விழி

20. ஏவினை நேர்விழி

ராகம் : வலசி/பந்துவராளி தாளம் : ஆதி ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது மொருநாளே