20. ஏவினை நேர்விழி


ராகம்: வலசி/பந்துவராளிதாளம்: ஆதி
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனைநெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையைஅகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவதுமொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல்குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயிலுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தருசிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வருபெருமாளே.

Learn the Song

Ragam: Valachi


Ragam: Panthuvarali



Paraphrase

ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை மூடனை (Evinai nEr vizhi mAtharai mEviya Ethanai mUdanai) : I am a foolish person who craves for the company of (call) girls with lecherous dart-like eyes; ஏதம் — குற்றம்; ஏவு: to aim; metaphorically refers to the arrow;

நெறி பேணா ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை (neRi pENA eenanai veeNanai EdezhuthA muzhu Ezhaiyai mOzhaiyai) : I am immoral and inept; illiterate, poor in education, stupid and uncouth

அகலா நீள் மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதானை இகழாதே (akalA neeL mAvinai mUdiya nOy piNiyALanai vAymai yilAthanai ikazAthE ) : under the grip of the relentless (bad) karma, morally corrupt and sick in body; despite this, would you, instead of condemning me

மா மணி நூபுர சீதள தாள் தனில் வாழ்வு உற ஈவதும் ஒரு நாளே (mA maNi nUpura sEthaLa thAL thanil vAzvuRa eevathum orunALE) : would you give me a blessed life anchored on your merciful feet adorned by anklets embellished with gems.

நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை (nAvalar pAdiya nUlisaiyAl varu nArathanAr pukal kuRamAthai) : Narada, praised and sung by poets in various literary works, recommended the hunter lass; நாவலர் (naavalar) : poets, bards; புலவர்கள் பாடியுள்ள நூல்களில் இடம்பெறும் புகழ் உள்ளவரான நாரதர், (உன்னிடத்திலே வந்து) எடுத்து ஓதிய குறப்பெண்ணான வள்ளியை,

நாடியே கான் இடை கூடிய சேவக நாயக மா மயில் உடையோனே (nAdiye kAnidai kUdiya sEvaka nAyaka mAmayil udaiyOnE) : whom You, my Chief, and a possessor of a powerful peacock, sought and united in the forest,

தேவி மநோமணி ஆயி பராபரை தேன் மொழியாள் தரு சிறியோனே (thEvi manOmaNi Ayi parAparai thEn mozhiyAL tharu siRiyOnE) : You are the son of Devi, ManomaNi (the jewel of the hearts), the Supreme Mother, and one whose speech is sweet like the honey;

சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே. (sEN uyar sOlaiyin neezhalilE thikaz seeralaivAy varu perumALE.) : You dwell in Tiruchendur ('Seeralaivai') under the shade of tall trees in the grove that reach up to the sky; சேண் (sEN) : sky;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே