18. இருக்கும் காரண (உருக்கம் பேசிய )


ராகம்: சுத்த தன்யாசிஅங்க தாளம் (7½)
1½ + 2 + 2 + 2
உருக்கம் பேசிய நீலியர்......மீதினில் ஆசைகள் புரிவேனோ
Lines rearranged.
இருக்குங் காரண மீறிய வேதமும்
இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
இடுக்கண் தீர்கன னேயடி யார்தவமுடன்மேவி
இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
கிறுக்குந் தாதகி சூடிய வேணியனருள்பாலா
திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
துதிக்குந் தாளுடை நாயக னாகிய
செகச்செஞ் சோதியு மாகிய மாதவன்மருகோனே
செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள்பெருமாளே.
அருக்கன் போலொளி வீசிய மாமுடி
யனைத்துந் தானழ காய்நல மேதர
அருட்கண் பார்வையி னாலடி யார்தமைமகிழ்வோடே
அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுடனினிதாள்வாய்

Learn the Song




Know the ragam Suddha Dhanyasi Janyam of 22nd mela Karaharapriya

Arohanam: S G2 M1 P N2 S    Avarohanam: S N2 P M1 G2 S


Paraphrase

Lord's benign eyes invite and converse happily with His devotees. Saint Arunagirinathar pleads that considering him a reformed person, He should shower His grace everyday so that he continues to walk steadily on the path of reformation.

அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அனைத்தும் தான் அழகாய் நலமே தர (arukkan pOl oLi veesiya mAmudi anaiththum thAn azhagAy nalamE thara) : The gems embedded in the crown, iridescent as the sun, bestow propitious grace, சூரியனைப் போல் ஒளி வீசும் பெருமை மிக்க இரத்தின கிரீடங்கள் யாவும் காண்பவர்களுக்கு அழகாக விளங்கும் நன்மையே வழங்க,
முருகப்பெருமானுடைய ஆறு திருமுகங்களிலும் உள்ள எல்லா மணிமகுடங்களும் மிக்க ஒளியுடன் பிரகாசித்துக்கொண்டு தெரிசிப்போர்களுக்கு நலன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அருள் கண் பார்வையினால் அடியார் தமை மகிழ்வோடே அழைத்தும் சேதிகள் பேசிய காரண (arul kaN pArvaiyinAl adiyArthamai makizhvOdE azhaiththum sEthikaL pEsiya kAraNa) : Your eyes shower kindness upon all Your devotees, You beckon, preach and enlighten them with Your discourse, Oh primordial One! அருள் கண் பார்வை கொண்டு அடியார்களை மகிழ்ச்சியுடன் அழைத்தும், அவர்களுடன் விஷயங்களைப் பேசுகின்ற மூலப் பொருளே,

வடிப்பம் தான் எனவே எனை நாள் தொறும் அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய் ( vadippam thAn enavE enai nAL thoRum athikkam sEr tharavE aruLAl udan inithu ALvAy) : Declaring that I am a reformed person, kindly make me excel each and every day and with Your grace guide me under Your sovereignty. தகுதியானவன் தான் இவன் என்று என்னை தினமும் மேன்மேலும் சிறப்புறும் வண்ணம் உனது திருவருளால் இப்பொழுதே இனிமையுடன் ஆண்டருள்வாயாக. நாள்தோறும் அதிக்கம் சேர் தர = தினந்தோறும் மென்மேலும் மேன்மையடையும் வண்ணம், அதிக்கம் = மேன்மை; வடிப்பம் = அழகு, திறம்;

இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள் இடுக்கண் தீர் கனனே (irukkum kAraNa meeRiya vEthamum isaikkum sAramu mEthozhu thEvarkaL idukkaN theer kananE) : You are extolled by the vedas, which contain the knowledge that lies beyond the maya that has caused the world to exist; You are the essence of what is spoken in the vedas – the veda Agamas which are theological treatises on vedas. You eradicated the miseries of the devas who worship you; ரிக்கு வேதமும், காரணங்களைக் கடந்து நிற்கும் தனிச் சிறப்புடைய (தமிழ்) வேதமும் (தேவாரமும்), அவற்றுள் மறைந்து கிடக்கும் உட்கருத்துக்களைக் கூறும் வேதசாரமாகிய ஆகமங்களும் தொழுது வழிபாடு செய்யப்படுபவரே, தேவர்களின் துன்பம் தீர்க்கின்ற பெருமை வாய்ந்தவனரே,
வேதமும் ஆகமங்களும் சிவபெருமானால் அருளப் பட்டவை. வேதங்கள் வியாச முனிவரால் நான்கு பெரும் வகையாக, ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்று பிரிக்கப்பட்டது. நான்கு வேதங்களை சைவ நால்வரின் பதிகங்களுடன் ஒப்பிட்டு கூறுவதும் உண்டு. அதாவது சம்பந்தர் தேவாரம் ருக்வேத சாரம் என்றும், திருநாவுக்கரசரின் தேவாரம் யசுர் வேத சாரமும், சுந்தரர் தேவாரம் சாம வேதம் போன்றது என்றும், மாணிக்க வாசகப் பெருமானுடைய பாடல்கள் விரும்பியதை அடையும் யாக மந்திரங்கள், தந்திரங்கள் ஆகியவை அடங்கிய அதர்வண வேதத்துக்கு சமம் என்று கூறுவதுண்டு.

அடியார் தவமுடன் மேவி இலக்கம் தான் எனவே தொழவே (adiyAr thavamudan mEvi ilakkam thAn enavE thozhavE ) : As Your devotees do penance with you as their sole goal and worship, அடியார்கள் தவ நெறியில் நின்று இவரே நமது குறிப் பொருள் என்று தொழவே,

மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா (magizh viruppam kUr tharum AthiyumAy ulagu iRukkun thAthaki chUdiya vENiyan aruL bAlA) : You are highly elated, Oh Primordial Principle! You are the son of Lord SivA with Aththi flower on His matted hair, the progenitor of the universe as well its annihilator! மகிழ்ந்து, அவ்வடியார் மீது அன்புகொள்ளும் முன்னைப் பழம் பொருளாய் நிற்பவனே, உலகங்களை எல்லாம் சம்ஹாரம் செய்பவரும், ஆத்தி மலரைச் சூடிய சடையை உடையவருமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, உலகு இறுக்கும் = உலகங்களை எல்லாம் சங்கரிக்கும்;

திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் (thirukkum thApathar vEthiyar Athiyar) : The ascetics with tangled locks who can discern/perceive the three 'kalas' of past, present and future, and who are doing penance as prescribed in Tantra yoga, and brahmins following the vedic shastras; முன்று காலங்களையும் காண வல்ல தவ சிரேஷ்டர்கள் வேதியர் முதலானோர் திருக்கு/திருஷ்டி ( thirukku/thirushti) : foresight; தாபதர் (thApathar) : ascetic with tangled locks;துறவறம் மேற்க்கொண்டவர்; சடைமுடியர்;

துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய செக செம் சோதியும் ஆகிய மாதவன் மருகோனே (thirukkum thApathar vEthiyar Athiyar thuthikkum thAL udai nAyagan Agiya sega chem sOthiyum Agiya mAdhavan marugOnE) : worship the feet of Madhava who is the glowing light of the Universe and You are His nephew. வணங்கும் திருவடிகளை உடைய பெருமானாகியவரும் உலகுக்குப் பேரொளியாய் விளங்குகின்றவரும் ஆகிய திருமாலின் மருகனே,

செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ் திரு செந்தூர் மேவிய தேவர்கள் பெருமாளே.(sezhikkum sAliyum mEkam aLAviya karuppam sOlaiyum vAzhaiyumE thigazh thirucchenthUr thanil mEviya thEvarkaL perumALE. ) : Lord of Tiruchendur where lushly thriving crops of paddy, groves of sugarcanes that reach right up to the sky and plantain trees abound; செழிப்புள்ள நெற் பயிரும் மேகத்தை எட்டி வளர்ந்துள்ள கரும்புச் சோலையும் வாழை மரங்களும் பொலிகின்ற திருச்செந்தூரில் வீற்றிருக்கும் தேவர்களின் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே