40. படர்புவியின் மீது


ராகம்: பந்துவராளிதாளம்:
2½ + 1½ + 1½ + 2
படர்புவியின் மீது மீறி வஞ்சகர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரிசங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல்சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகைவகையி லாசு சேர்பெ ருங்கவிசண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொ டுலாவு மால் அகந்தைதவிர்ந்திடாதோ
அடல்பொருத பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனிஅன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
அதிபெல கடோர மாச லந்த்ரணொந்துவீழ
உடல்தடியு மாழி தாவவெ னம்புய
மலர்கள் தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடுசெங்கண்மாலுக்
குதவியம கேசர் பால இந்திரன்
மகளை மண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள்தம்பிரானே.

Learn the Song


Raga Pantuvarali (51st mela Alias: kamavardhini) By Carnatic Canvas

Arohanam: S R1 G3 M2 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M2 G3 R1 S


Paraphrase

பிரமனே தன் உருவை மறைத்து, திருவள்ளுவராக அவதரித்து, நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களின் திறத்தை, அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பொருளாகத் தமிழில் தந்து அருளியது திருக்குறள் என்னும் திருமுறை என்று ஆன்றோர் கருதுவர். "வாக்கிற்கு அருணகிரி" என்று போற்றப்படும், அருணகிரிநாதப் பெருமான் திருவள்ளுவரை, "திருவள்ளுவ தேவர்" என்று இந்த பாடலில் காட்டி சிறப்பித்து உள்ளார்.

கல்வி வெறும் ஏட்டறிவாக இருந்து விடாமல் ஆன்மீகத்துடன் இணைந்து அடக்கம், அன்பு, அவிரோதம், விநயம், போன்ற நன்னெறிகளை வளர்க்க வேண்டும். இல்லையெனில் அவற்றால் பயனில்லை. பொருளாதார மேன்மைக்காகவும் தன்னுடைய செல்வாக்கை பறைசாற்றுவதற்காகவும், தன்னுடைய இலக்கிய மேன்மையை பயன்படுத்துபவர்களை அருணகிரிநாதர் வன்மையாக கண்டித்து, தனக்கு அத்தகைய அகந்தை வராமல் இருப்பதற்கு இறை அருளை வேண்டுகிறார்.

இந்த பாடலில் முதல் பாதியின் உரை: "இந்த உலகில் மிகவும் வஞ்சனை உள்ள உலோபியர்களிடம் சென்று பொருள் பெற வேண்டி, அவர்களைச் சூரியனே என்று வியந்து உரைத்தும், குறையில்லாத உயரிய நூல்களையும், மற்ற சங்க நூல்களையும், திருக்குறளையும், கோடிக் கணக்காண பிரபந்த வகைகளையும் பாடித், தம்மைப் ஆசு கவி, மதுர கவி, சண்டவாயு என்றெல்லாம் பட்டப் பெயர்களைச் சூடிக் கொண்டு, கொடி, மேள, தாளம் முதலிய ஆடம்பரங்களுடன் உலவி வரும் அகங்காரத்தை நான் தவிர்ப்பேனாக".

படர் புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனில் உரை பானுவாய் வியந்து உரை (padar buviyin meedhu meeRi vanjargaL viyanin urai bAnuvAy viyandhu urai) : (People) cheer exceedingly and flatter deceptively some accomplished people as exceptionally bright as the sun; விசாலமான இந்த மண்ணுலகத்திலே பல வகையான சிறப்புகளால் மேம்பாட்டை அடைந்தவர்களைக் கண்டு தாங்கள் “ஞானபானு” “கல்விக்கதிர்” என்றெல்லாம் வெறுமையாக வியந்து வஞ்சனையாக அவர்களைப் புகழ்வர். மீறி = அளவுக்கு மிஞ்சி; வியன் = வானம்; வியனின் உரை = வானளாவு புகழ்தல்;

பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல் பனுவல் கதை காவ்யமாம் எண் எண் கலை (pazhudhil peru seela nUlgaLum theri sanga pAdal panuval kadhai kAvyamAm eN eN kalai ) : They study untainted great works about ethics and noteworthy Sangam literature; historic treatises, stories, epics and all the sixty four arts; எண் எண் கலை = அறுபத்து நான்கு கலை நூல்கள்

திருவ(ள்)ளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை ஓதியே உணர்ந்து (thiruvaLuva dhEvar vAymai engiRa pazhamozhiyai OdhiyE uNarndhu ) : they chant ancient work of ThiruvaLLuvar entitled "Eternal Truth" (ThirukkuRaL) and assimilate its essence; திருவள்ளுவ தேவர் திருவாய் மலர்ந்தருளிய பொய்யாமொழியாகிய பழைய மொழி என்கின்ற திருக்குறளையும் ஓதியும் உணர்ந்தும்,

பல் சந்த மாலை மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் (pal sandha mAlai madal baraNi kOvai Ar kalambaga mudhaluLadhu kOdi kOL prabandhamum) : they learn compositions such as madal, baraNi, kOvaiyAr, kalambagam etc., which are like garlands of great compositions rich in rhythmic patterns; பலவிதமான சந்தங்களுடைய மாலை, மடல்,பரணி, கோவை, கலம்பகம்

முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும் வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி சண்ட வாயு மதுரகவி ராஜன் நான் என்(று) (vagai vagaiyil Asu sER perum kavi chanda vAyu madhura kavirAjan nAn en ) : and millions of diverse compositions, and declare themselves as "the Great Bard", "Poetic Hurricane" and "the Emperor of sweet poetry", and so on. முதலாக உள்ள கோடி கொள்கைகளையுடைய நூல்களையும், வகை வகையாகக் கற்று

வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை (veN kudai virudhu kodi thALa mELa thaNdigai ) : They roam about pompously with white umbrellas, medallions, cymbals, percussion instruments and palanquins;

வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ (varisaiyodu ulAvu mAl agandhai thavirndhidAdhO) : Will the illusory and ornate display of their arrogance ever come to an end? மேற்கூறிய வரிசைகளுடன் சிறிதாவது பக்தியும் ஞானமுமின்றி, உய்யவேண்டும் என்ற அருள்தாகம் இன்றி கேவலம் நான் என்ற மமதையுடன் உலாவித் திரிகின்ற இந்த அகந்தை அகன்று புலவர்கள் நல்வழிப்பட மாட்டார்களா?

அடல் பொருத பூசலே விளைந்திட எதிர் பொர ஒணாமல் (adal porudhu pUsalE viLaindhida edhir pora oNAmal ) : Fighting fiercely with the demon, Jalandharasuran, but unable to counter his attack, ((Vishnu)) அடல் பொருத (adal porutha) : fighting fiercely;

ஏக சங்கர அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று சேவித்து (Eka sankara arahara sivA mahAdhev endruni andru sEviththu) : prayed to Lord SivA saying "Oh Sankara, HaraharA, SivA and MahadevA!" ஒப்பற்றவரே! சுகத்தைச் செய்பவரே! பாவத்தைக் களைபவரே! சிவ சிவா! பெரிய தேவரே, என்று நினைத்து, அந்நாளில் ஆராதனை புரிந்து, ஏக = ஏகனே

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி (avani vegu kAlamAy vaNangi uL urugi ) : Vishnu stayed for many days on this earth and prostrated before Lord SivA with utmost devotion; மண்ணுலகில், அநேக காலமாய் வழிபாடு செய்து, உள்ளம் உருகி,

வெகு பாச கோச சம்ப்ரம அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ (vegu pAsa kOsa sambrama adhi bela katOra mA jalandharan nondhu veezha) : the strong, mighty and malicious demon Jalandhara carrying the rope of bondage and shield அநேகபாசம் என்ற ஆயுதமும், கவசமும், சிறப்பும், மிகுந்த வலிமையும், கொடுமையும், பெருமையும் உடைய சலந்தராசுரன் துன்புற்று மாண்டு விழுமாறு

உடல் தடியும் ஆழி தா என ( udal thadiyum Azhi thA ena ) : fell down with his body severed; 'grant me the sudarshana chakra that caused all this' உடல் தடியும் = (அவனுடைய) உடலைத் தறித்த;

அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் (ambuya malargaL dhasa nURu thAL idum pagal) : (praying thus, Lord Vishnu) offered a thousand lotus flowers at the feet of SivA every day

ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு உதவிய மகேசர் பால (oru malar ilAdhu kO aNindhidu sengaNmAlukku udhaviya magEsar bAla) : You are the son of Mahesha who helped the red-eyed Vishnu (by giving him the sudarshana chakra), when He offered His own eyes when the (thousand)lotus flowers for the archana offer fell short by one, கோ என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள். அதிகமாக 'அரசன்' என்ற அர்த்தத்தில் பயன் படுத்தப்படும். இங்கு கோ என்றால் விழி. ;

இந்திரன் மகளை மண மேவி வீறு செந்திலில் உரிய அடியேனை ஆள வந்தருள் தம்பிரானே.( indhiran magaLai maNa mEvi veeRu sendhilil uriya adi yEnai ALa vandharuL thambirAnE.) : You wedded DEvayAnai, the daughter of IndrA and came to this famous place, Thiruchendhur, to take charge of me, who has a special entitlement for attention with You, Oh Great One! உரிய அடியேனை = தங்கட்கே உரிய அடியவனாகிய என்னை

The Story of Jalandhara

The story of Jalandhara narrates how Lord Shiva annihilates Jalandhara with His Chakra and how Lord Vishnu gets it from Him through devotion and worhip

சலந்தரன் என்ற வலிமையுள்ள அசுரன் செருக்குற்று சிவபிரானுடன் போர் செய்ய கயிலை மலை சென்றான். முதிய அந்தணர் உருவத்தில் இருந்த சிவன் தரையில் ஒரு சக்கர வடிவத்தைக் கீறி இதனை பெயர்த்து எடுத்த பின் கைலையினுள் செல்லலாம் என்று உரைத்தார்.

சலந்தரன் சக்கரத்தை பெயர்க்க முயலும் போது அது அவனுடைய கழுத்தை அறுத்தது. இந்த சக்கராயுதத்தை பெற வேண்டும் என்று திருமால் திருவீழிமிழலை என்னும் தலத்தில் தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து வந்தார். ஒரு நாள் பூஜை செய்யும் போது ஒரு தாமரை மலர் குறைய தன கண்ணையே பறித்து இட்டார். திருமாலுடைய பக்தியை மெச்சி சிவபிரான் அவருக்கு சக்கராயுதத்தை அருளினார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே