Posts

Showing posts with the label படர்புவியின் மீது

40. படர்புவியின் மீது

ராகம் : பந்துவராளி தாளம் : 2½ + 1½ + 1½ + 2 படர்புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல் பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை திருவளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை மடல்பரணி கோவை யார்க லம்பக முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு மதுரகவி ராஜ னானென் வெண்குடை விருதுகொடி தாள மேள தண்டிகை வரிசையொ டுலாவு மால் அகந்தைத விர்ந்திடாதோ