28. சேமக் கோமள

ராகம்: சுருட்டிதாளம்: 1½ + 2
சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதுமநந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிகஅன்புறாதே
காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழிகின்றமாயா
காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயுமதென்கொலோதான்
நேமிச் சூரொடு மேருத் தூளெழ
நீளக் காளபுயங்ககால
நீலக் ரீபக லாபத் தேர்விடு
நீபச் சேவகசெந்தில்வாழ்வே
ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
லோகத் தேதருமங்கைபாலா
யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள் தம்பிரானே.

Learn the Song



Raga Surutti (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 M1 P N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 P M1 R2 S


Paraphrase

சேம கோமள பாத தாமரை சேர்தற்கு (sEma kOmaLa pAdha thAmarai sErdhaRku) : In order to seek and obtain the sanctuary of your beautiful lotus-like feet, சேமம்: பாதுகாப்பு;

ஓதும் அனந்த வேத அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே (sEma kOmaLa pAdha thAmarai sErdhaRku Odhum anantha vEdha atheedhaththE avirOdhaththE guNa seelaththE miga anbu uRAdhE) : one should practise universal amicability ('avirodham') and righteous behavior so that they realize the Truth that lies beyond what the countless scriptures describe. Instead, (திருவடிகளை) அடைவதற்கு வழிகளைச் சொல்லும் கணக்கற்ற வேதங்களைக் கடந்த நிலையின் மீதும், பகையற்ற சாந்த நிலை மீதும், நற்குண நன்னெறியின் மீதும் அன்பை வைக்காமல்,

காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா காயத்தே பசு பாசத்தே ( kAma krOdha vulOba bUtha vikAraththE azhigindra mAyA kAyaththE) : many people indulge in lust, anger and greediness, and develop attachment for the body which degenerates due to the mischief played upon it by the five elements,

சிலர் காமுற்று ஏயும் அது என் கொலோ தான் (pasu pAsaththE silar kAmutru Eyum adhu en kolO thAn) : and love it (the body); I do not understand the reason for this behavior. ஏயும் = இயையும், இசையும்; பூத விகாரம் = ஐம்பூதங்களின் மாறுபாடு;

The following two lines describe the might of Murugan's vehicle: the peacock.

நேமி சூரொடு மேரு தூள் எழ ( nEmi sUrodu mEru thUL ezha ) : The ocean, SUran and Mount MEru were all blown to dust, நேமி = கடல்; புயங்க கால = பாம்பை காலிலே பற்றியுள்ள;

நீள காள புயங்க கால நீல க்ரீப கலாப தேர் விடு ( neeLa kALa buyanga kAla neela kreeba kalAbaththEr vidu ) : when You propelled your chariot, which is Your blue-necked Peacock that holds a venomous snake in its legs; காளம் = நஞ்சு; புயங்க கால = பாம்பை காலிலே பற்றியுள்ள; நீல க்ரீப கலாபத் தேர்விடு = நீலமான கழுத்தை உடையதும்; தோகையைக் கொண்டதுமான மயிலைத் தேர்போல நடத்துகின்ற, க்ரீபம் = கழுத்து;

நீப சேவக செந்தில் வாழ்வே (neeba sEvaga sendhil vAzhvE) : You are wearing kadappa flowers ('நீபம்' or nEbam) that symbolizes Your victory. You are the Treasure of Thiruchchenthoor!;

ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவ லோகத்தே தரு மங்கை பாலா (Oma thee vazhuvArkatku Ur sivalOkaththE tharu mangai bAlA) : Mother Parvati reserves a place in the land of SivA for those who regularly and religiously perform the vedic sacrificial rites; You are Her Son, Oh KumarA! என்றும் தவறாமல் வேள்வித் தீயை வளர்ப்பவர்களுக்கு சிவலோகத்திலே இருப்பிடத்தை தருகின்ற பார்வதியின் பாலனே!

யோகத்து ஆறு உபதேச தேசிக ஊமை தேவர்கள் தம்பிரானே. (yOgaththu ARu upadhEsa thEsiga Umai thEvargaL thambirAnE.) : You are the Great Master teaching the techniques of yOgA! In Your august presence all the DEvAs are dumbfounded, Oh Great One! யோக வழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே! வல்லவர்களாக இருந்தும் எல்லாம் வல்ல உன் முன்னே வாய் பேச முடியாமல் நிற்கும் தன்மையுடைய தேவர்களுடைய தலைவனே! ஆறு = வழி; யோகத்து ஆறு = யோக வழிகள்;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே