26. குடர்நிண


ராகம்: குந்தலவராளிஅங்க தாளம்
2 + 1½ + 2 + 1½ + 2 + 1½ + 2 + 2 (14½)
குடர்நிண மென்பு சலமல மண்டு
குருதிந ரம்புசீயூன்பொதிதோல்
குலவுகு ரம்பை முருடுசு மந்து
குனகிம கிழ்ந்துநாயேன்தளரா
அடர்மத னம்பை யனையக ருங்க
ணரிவையர் தங்கள்தோடோய்ந்தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன்
அடியிணை தந்துநீயாண்டருள்வாய்
தடவியல் செந்தில் இறையவ நண்பு
தருகுற மங்கைவாழ்வாம்புயனே
சரவண கந்த முருகக டம்ப
தனிமயில் கொண்டுபார்சூழ்ந்தவனே
சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
தொழவொரு செங்கைவேல்வாங்கியவா
துரிதப தங்க இரதப்ர சண்ட
சொரிகடல் நின்றசூராந்தகனே.

Learn the Song



Raga Kuntalavarali (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S M1 P D2 N2 D2 S    Avarohanam: S N2 D2 P M1 S

Paraphrase

குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் (kudar niNam enbu sala malam aNdu kuruthi narambu see Un pothi thOl) : The intestines, fat, bones, urine, faeces, gushing blood, nerves, pus and flesh, all encased within the skin; நிணம் (niNam) : fat; என்பு (enbu) : bones; ஊன் (Un) : flesh/meat

குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா (kulavu kurambai murudu sumanthu kunaki magizhnthu nAyEn thaLarA) : I bear this cottage made of all this (blood, flesh, bones, etc), happily socialize and become wearied

அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா(adar mathan ambai anaiya karum kaN arivaiyar thangaL thOL thOynthu ayarA) : I immerse in the shoulders of women whose eyes are like Manmatha's arrows, and become fatigued. நெருங்கிவரும் மன்மதனுடைய கணையையொத்த கரிய கண்களுடைய பெண்களின் தோளில் மூழ்கி அயர்ச்சியுற்றும்,

அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் (aRivu azhiginRa guNamaRa unRan adiyiNai thanthu nee ANdu aruLvAy) : and lose my intellect; instead (of all this) kindly give me your feet, govern my life and bless me so that I erase all the bad habits. அறிவு அழிந்து போகின்ற தீய குணம் அற்றுப்போக, உன்றன் இரண்டு திருவடிகளைக் கொடுத்து, அடியேனை நீ ஆட்கொண்டு அருள் புரிவீராக.

தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே(thadavu iyal senthil iRaiyava naNbu tharu kuRa mangai vAzhvAm puyanE ) : The god of the vast and sprawling Tiruchendur! Your shoulders are the refuge for the loving and friendly VaLLi, the damsel of the KuRavAs! விசாலமான பெருமையுடைய திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள தலைவரே! அன்புடைய வள்ளியம்மையாருக்கு வாழ்வாக விளங்கும் திருப்புயத்தை யுடையவரே!

சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே (saravaNa kantha muruga kadamba thani mayil koNdu pAr chUzhnthavanE) : Saravana! Kanda! Muruga! Kadamba (wearing a garland kadamba flowers)! You went around the universe on your matchless peacock!

சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா (sudar padar kunRu thoLai pada aNdar thozha oru sengai vEl vAngiyavA) : You wielded the spear with your auspicious hands to pierce the radiant Krauncha mountain and were worshipped by the celestials! ஒளிபரந்த கிரவுஞ்ச மலைத் தொளைபடவும், தேவர்கள் வணங்கவும், ஒப்பற்ற சிவந்த திருக்கரத்தினின்றும் வேலாயுதத்தை விடுத்தவரே!

துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே. (thuritha pathanga iratha prasaNda sori kadal ninRa sUrAnthaganE. ) : You are a valiant warrior with the chariot of the fast (peacock) bird; and you are the terminator of sUra, who stood (as a mango tree) in the midst of the turbulent sea. வேகமாகச் செல்லும் பறவையாகிய மயிலைத் தேராகக் கொண்ட பெரிய வீரரே! துரிதம் : வேகம்; பதங்கம் = பறவை;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே